நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : 2015

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Sunday, December 6, 2015

நிகழ்ச்சி மேலாண்மையில்-"நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும்"

நிகழ்ச்சி தயாரிப்பில் திட்டமிடுதலும், திட்டமிட்டபடி செயல்படுத்துவதும் மிக முக்கியமானதாகும். நிகழ்ச்சி மேலாண்மையில், அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும். அப்படி இல்லாமல் ஒருவர் வேலையை மற்றவர் செய்தால் அதன் விளைவு "அடி உதை தான் மிஞ்சும்" என நமது முன்னோர்கள் ஒரு கதையை நமக்கு கூறியிருக்கிறார்கள். 


முக்கியமாக ஒரு நிகழ்ச்சியின் நிர்வாகிகளின் நிர்வாகத் திறமையின்மைக்கூட நிகழ்ச்சியை கெடுத்துவிடும். ஒரு திருமண விழாவில் அரசியல் தலைவர் ஒருவர் தலைமை ஏற்று நடத்துகிறார் என்றால், சிறந்த அனுபவம் வாய்ந்த நிர்வாகியால் மட்டுமே அந்த திருமண நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த முடியும். நிகழ்ச்சியில் சிறு பிழை ஏற்பாட்டாலும் விளைவுகள் வேறுவிதமாக மாறிவிடும், ஆகவே அப்படிப்பட்ட பதற்றத்தை தரக்கூடிய நிகழ்சிகளை நடத்த திட்டமிடும்போது, அந்த நிகழ்ச்சியை நிவகிக்ககூடிய நிர்வாகிகள் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட செயலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்பட்டால் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். இதைத்தான் நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் செய்யவேண்டும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்..... அப்படி முன்னோர்கள் கூறிய அந்தக்கதைதான் என்ன?


ஒரு ஊரில் துணிகளை துவைக்கும் சலவைத் தொழிலாளி ஒருவர் அவரது வீட்டில் அவருக்கு உதவியாக இருக்க ஒரு கழுதையையும், அவரின் வீட்டு காவலுக்கு என ஒரு நாயையும் மிக அன்போடு பராமரித்து வளர்த்துவந்தார்.

ஒருநாள் இரவு ஒரு திருடன் அந்த சலவைத் தொழிலாளியின் வீட்டில் இருக்கும் பொருளை திருடுவதற்காக சிறிது தொலைவில் மறைந்திருந்து, இரவு அனைவரும் தூங்கட்டும் பிறகு திருடலாம் என காத்திருந்தான்.


இதைப்பார்த்துவிட்ட சலவைத் தொழிலாளியின் வளர்ப்புக் கழுதை, தமது எஜமானர் வீட்டுக்கு திருடன் திருட வந்திருப்பது தெரிந்து மனம் பதறியது, கழுதையின் அருகே அமைதியாக படுத்திருக்கும் அந்த வீட்டு நாயிடம், கழுதை தனது பதற்றத்தை கூறி அவர்களது எஜமானரை எழுப்பி நடக்கவிருக்கும் திருட்டை தடுக்க உதவுமாறு கூறியது. அதற்க்கு நாயும் அந்த திருடன், திருட ஒளிந்திருப்பதை பார்த்துவிட்டதாகவும், திருடனை பிடித்து திருட்டை தடுக்கவேண்டியது இந்த வீட்டு நாயான தன்னுடைய வேலை எனவே நான் பார்த்துக்கொள்கிறேன், கழுதையே நீ சற்று அமைதியாக உன்னுடைய வேலையை கவனி என்றது.


பதற்றமாக இருந்த கழுதை, எப்படியாவது திருடன் வந்திருப்பதை தமது எஜமானருக்கு தெரியப்படுத்தவேண்டும் என தனது சக்தியை எல்லாம் திரட்டி உரக்க கத்தியது .....


கழுதையின் கத்தலைக் கேட்ட சலவைத் தொழிலாளி தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டான், இந்தக் கழுதை ஏன் இப்படி நாடு இரவில் எனது தூக்கத்தைக் கெடுத்து கத்துகிறது என்று வீட்டின் கூரையில் சொருகி இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்தான், அங்கு கத்திக்கொண்டிருந்த கழுதையின் முதுகில், தனது கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் ஓங்கி ஒரு அடி அடித்து, கழுதையே உனக்கு என்ன வந்தது வாயை மூடி அமைதியாக படுத்துக்கிட, ஏன் எனது தூக்கத்தைக் கெடுக்கிறாய் என்று கூறி மேலும் ஒரு உருட்டுக்கட்டை அடியை கழுதைக்கு தந்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டான். 


இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாய், கழுதையைப் பார்த்துக் கூறியது. நாயின் வேலையை நாயும், கழுதையின் வேலையை கழுதையும் என "அவரவர் வேலையை அவரவர் செய்யவேண்டும் இல்லையென்றால் இப்படித்தான் உதய் விழும்" என்றது.....        


இது நிகழ்ச்சி மேலாண்மைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் முன்னேற, சிறந்த இடத்தைப் பிடிக்க ஒவ்வொருவருக்கும் 
 தேவை, ஆகவே அவரவர் வேலையை அவரவர் செய்வதே சாலச் சிறந்தது அதாவது "நாயின் வேலையை நாயும் கழுதையின் வேலையை கழுதையும் கதையைப்போன்று செய்யவேண்டும்". 


நான் பலநேரம் இதுபற்றி சிந்தித்ததுண்டு, இன்னமும் கூட பலர் அவர்களின் அலுவலகத்தில், அவர்களது வேலையை செய்யாமல் பிறரது வேலையை செய்து மாத சம்பாத்தியம் பெறுகிறார்கள்.  எப்போது ஒருவர் தன்னுடைய வேலை இது என்று உணர்ந்து, தனது வேலையைமட்டும் சிறப்பாக செய்து பேரும் புகழும் பெற்று உயர்வு பெறுகிறார்களோ, அவரே அவர்களது வாழ்க்கையில் சிறந்த நிலையை அடைகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்களது ஆரம்ப இடத்திலேயே சரியாக வாழக்கையை அமைத்துக்கொள்ளாமல் திணறி தனது முடிவுக்கு தானாகவே காரனமாகிவிடுகிரார்கள். இதை வைத்துத்தான் நீங்கள் பணிபுரியும் உங்களின் நிறுவனம் உங்களின் திறனை மதிப்பிடுகிறது.


உதாரணத்திற்கு வகுப்பில் உள்ள மாணவர்களிடையே நன்றாக படிப்பவன் சுமாராக படிப்பவன் என்ற பேதம் இருந்தாலும் யார் தன் நிலையிலிருந்து மிகுந்த முன்னேற்றம் அடைகிறார்களோ அவர்களே ஆசிரியரின் கவனத்தை மிகவும் கவருவார்கள். அந்த மாணவனே சிறந்த மாணவனாக ஆசிரியரால் முன்நிருத்தப்படுகிறான். ஆகவே நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் உங்களுக்குண்டான வேலையைமட்டும் சிறப்பாக செய்து பெரும் புகழும், அதற்குரிய ஊதியமும் பெற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். சிலருக்கு தன்னுடைய வேலை எது என்றுகூட பிரித்து தெரிந்துகொள்ளக்கூடிய திறமையில்லாமல், மற்றவரது வேலைதான் தன்னுடைய வேலை என்று வாழ்க்கையை வாழத்தெரியாமல் வீனடித்துக்கொண்டிருக்கிரார்கள். இந்தப் பதிவை மேலும் தொடர்ந்து படியுங்கள் பல விவரங்கள் உங்களுக்குப் புரியும் . 


முதலில் அலுவலகத்தில் உங்களது பனி எது என்று தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் சேர்த்து செய்தால் தான் நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் உங்களின் சொந்த முயற்சிக்கான வேலைகளையும் செய்யவேண்டும். 


உதாரணமாக உங்களின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த முயற்சிக்கான, உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய நேரமாக, உங்களின் உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது 
இது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி"  (புரிகிறதா? இல்லையென்றால் மேற்கூறிய உதாரணத்தை திரும்ப திரும்ப படித்துப்பாருங்கள் புரியும்).


மேலும் தற்போது உங்களின் ஊதியம் 1000/- என்றால் அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளின் அது இரண்டு மடங்காக 2000/- என ஊதியம் அதிகமாக கிடைக்குமாறு, அதற்குத் தேவையான முயற்சிகளை செய்வதுதான், உங்களின் உயர்வுக்கான சொந்த முயற்சிக் குறிக்கோளாக இருக்குமாறு, நீங்கள் தினமும் சேமிக்கும் உங்களின் உபரி நேரத்தில் அதற்க்கான முயற்சிகளை செய்யும் நேரமாக அமைத்துக்கொள்ளுங்கள்.


இப்போது நமது உயர்விற்கான நமது தலைவிதியை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது என்பதைப் பார்ப்போம். இதற்க்கு நாம் நமது அனைவரது வாழ்விலும் உள்ள ஒரு உதாரணத்தை இங்கு எடுத்துக்கொள்வோம். வழக்கமாக நாம் அலுவலகம் செல்ல பேரூந்து நிறுத்தத்தில் பலமணி நேரம் காத்துக்கிடந்தும் நமக்குத் தேவையான அந்த பேரூந்து உடனே வருவதில்லை. பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என்று இருந்தாலும் அரை மணிநேரமாகியும் எந்த ஒரு பேரூந்து வாராதது நமது தலைவிதி என்று நினைப்போம். மறுநாள் நமக்கு பேருந்தில் செல்லவேண்டிய அவசியமிருக்காது, நாம் வேறு வேலையாக நேற்று நின்றிருந்த அந்தப் பேரூந்து நிலையத்தைக் கடக்கின்றபோது, நேற்று எந்த பெரூந்திர்க்காக வெகுநேரம் காத்திருந்தோமோ அதே பேரூந்து ஒன்றன்பின் ஒன்றாக காலியான இருக்கைகளுடன் இரண்டு பேரூந்துகள் செல்வதைப்பார்க்கலாம். ஆகவே ஒன்று நிச்சயமாக தெரிகிறது, எது நமக்கு வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது, எது நமக்கு வேண்டாமோ அது நிறைய கிடைக்கும்" இதுதான் நமது தலைவிதி என்று தெரிந்துவிட்டதால் இனி நாம் நமது வாழ்க்கையை எது கிடைக்கிறதோ அதை நோக்கி அமைத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கவேண்டும். அது எப்படி என்று மேலும் தொடர்ந்து இப்பதிவை படியுங்கள்.  
தொடரும் .... 
அன்புடன் கோகி-ரேடியோ  மார்கோனி. புது தில்லியிலிருந்து.....


    

      
  

Monday, November 9, 2015

வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?

வானொலியில் உங்களது நிகழ்ச்சி இடம்பெரவேண்டுமா?  
வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????
தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், "மே" தினம் போன்ற பலவகைப்பட்ட "தினங்கள்" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத நிகழ்சிகள், "நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.
கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.
சரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.
வானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...
இப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை? தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா ???!!!!!!!!..................

உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.
உங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்ருகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும். எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
பல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
நாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.
எந்தெந்த வகையில் திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-
நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.
தொலைகாட்சி  மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி? அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது?
# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது?
‪#‎ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.
#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.
#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம். 
முதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-
‪#‎ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள் உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.
‪#‎வ‬ானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.
நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.
ஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.
ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று "பின்புல" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்." மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், "வெறும் குரள்" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.
வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த "மந்திரச்சொல்லாக" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் "சோப்பு" ஒன்று "புதிது" என்கிற ஒரு "மந்திர வார்த்தையை-KEY WORDS" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் "மந்திரச்சொர்க்களின்-KEY WORDS" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.
அடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.

வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்....

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... 

முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. 

ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? ..........................

வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.

ஆனால் ஒரு பிரபல பத்திரிகை ஒன்று  1977-ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன் டெல்லியை பவனி வந்தார்" என்று அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977). 

விளைவு பத்திரிகை விற்பனை.....................முக்கியமாக யார் மனதையும் புன்படுத்துவதர்க்காக இங்கு இதை தெரியப்படுத்தவில்லை... நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் செய்தி சேகரிப்பது குறித்த சில நாகரீக நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டவர்கள் இப்படிப்பட்ட தவறுகளுக்கு ஆளாகமாட்டார்கள். 

ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பது மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிய வேலை கிடையாது. அதற்க்கென்று தனிப்பட்ட விருப்பமும் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டியது அவசியம். 
  
இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்......

ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய

ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டிய தமிழ் ஆங்கில அகராதி குறிப்புகள் :-
# உள்ளிடை நிகழ்ச்சி local action
# எடுத்துக்காட்டு; சான்று நிகழ்வு; நிகழ்ச்சி instance
# எதிர்த்தியங்கு நிகழ்ச்சி reversible process
# எதிர்பாரா நிகழ்ச்சி, விபத்து accident
# எதிர்பாரா நிகழ்ச்சி; உறுதியற்ற பின் நிகழ்வு; தற்செயல் unexpected event / instance
# ஒளிமின் நிகழ்ச்சி photoelectric phenomena
# கன்னி நிகழ்ச்சி / முன்னோடி / வெள்ளோட்டத் திட்டம் pilot programme
# கலை நிகழ்ச்சி cultural performance
# கூட்டு நிகழ்ச்சி compound event
# கேளிக்கை , பொழுதுபோக்கு நிகழ்ச்சி, வேடிக்கை amusement
# கொடை நிகழ்ச்சி benefit performance
# கொடைக் கலை நிகழ்ச்சி benefit performance
# சமூக இடைவினை, சமூக ஊடாட்டம, உள்ளிடை நிகழ்ச்சி social interaction
# சாதக நிகழ்ச்சி favourable event
# சார்பற்ற நிகழ்ச்சி independent event
# சார்புடை நிகழ்ச்சி dependent event
# சிறப்பு நிகழ்ச்சி special performance
# செயலாக்கம்; நிறைவேற்றம் performance
# நிகழ்ச்சி function
# செய்துகாட்டல்; செயல்முறை விளக்கம்; ஆரவார நிகழ்ச்சி demonstration
# தவறான நினைவு, நடக்காத நிகழ்ச்சி, நினைவு paramnesia
# திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் revised agenda
# துயர நிகழ்ச்சி tragedy
# தொகுப்பாளர் editor (news, etc)
# தொலை நிலைப்பிணைப்பு நிகழ்ச்சி network programme
# தொலைக்காட்சி நிகழ்ச்சி telecast
# தொழில் முனைவர்; தொழிலக உரிமையாளர்; பொழுது போக்கு நிகழ்ச்சி அமைப்பாளர் entrepreneur
# தொழில் முனைவோர், நிகழ்ச்சி அமைப்பாளர் entrepreneur
# நாடக நிகழ்ச்சி dramatic performance
# நிகழ்ச்சி event
# நிகழ்வு /நிகழ்ச்சி incidence
# துல்லியமான நிகழ்ச்சி occurrence
# நிகழ்ச்சி -நிறைவேற்றம / செயலாக்குதல் performance
# நிகழ்ச்சி உந்து சூழல் event-driven environment
# நிகழ்ச்சி உந்து செய்நிரல் event-driven program
# நிகழ்ச்சி உந்து மொழி event-driven language
# நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு programme co-ordination
# நிகழ்ச்சி நிரல் agenda
# நிகழ்ச்சி நிரல்; திட்டம்; செயல் முறைத் திட்டம் programme
# நிகழ்ச்சி பதிதாள் , நிகழ்வு பதிதாள் log sheet
# நிகழ்ச்சி; செயலாக்கம்; நிறைவேற்றம் performance
# பணித்திட்டம் / நிகழ்ச்சி நிரல் programme
# பண்பாட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி cultural exchange programme
# பதிப்பாளர்; பதிப்பாசிரியர்; தொகுப்பாளர்; இதழாசிரியர் editor
# பல்சுவைக் கேளிக்கை நிகழ்ச்சி variety entertainment
# பெறுவழி(இ.வ)/அணுகல்(த.வ) நிகழ்ச்சி access event
# பொருண்மை; மெய்ம்மை நிகழ்ச்சி fact
# மணஓப்பந்தம் / நிகழ்ச்சி engagement
# மிகுவிரைவுச் செயல் திட்டம் நிகழ்ச்சி crash programme
# முந்திய நிகழ்ச்சி antecedent
# முன்நிகழ்வு; முன் நிகழ்ச்சி; முற்சான்று antecedence
# மோதல் நிகழ்ச்சி collision process
# வரவேற்பு நிகழ்ச்சி reception
# வினா விடை நிகழ்ச்சி quiz programme
# விழா; நிகழ்ச்சி; செய்கடமை; செயல்பாடு function
# வெப்பம் (அ) மின்சக்தி, கடத்தி நிகழ்ச்சி நடத்துநர் conductor
# வேறுபாட்டு நிகழ்ச்சி, முரண்பட்ட நிகழ்வு contrastphenomenon 

விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம்.....

அப்போது செப்-12-2013 அன்று கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்திய துணை ஜனாதிபதி திரு ஹமீது ஹன்சாரி அவர்களுக்காக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் (ஸ்ரீ நாராயணகுரு சர்வதேச விருதுவழங்கும் விழா)...ஏற்ப்பட்ட ஒரு நிகழ்வு இது...

"அரசாங்க அல்லது அரசு சார்ந்த நிகழ்ச்சியை ஏற்று நடத்துவது என்பது அத்தனை எளிமையான செயல் இல்லை" 

அரசு முக்கியஸ்தர் கலந்துகொள்ளும் விழா வழக்கப்படி, நிகழ்ச்சியின் ஆரம்பத்திலும் இறுதியிலும் தேசியகீதம் பாடப்படுவது மரபு. 

நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு இந்த விவரம் தெரியாது போனதால் அவசரத்தில் வேறு யாரும் முன்வராததால் அவரே மேடை ஏறி பதட்டத்தில் தப்பும் தவறுமாக பாட...... 

அதோடு நிகழ்ச்சி வர்ணனையாளர் பேசுகையில் " நமது துணை ஜனாதிபதி ஏப்பரல் 1ஆம் தேதி (முட்டாள்கள் தினம்) அன்று பிறந்தார், அன்றைய தினத்தின் முக்கியத்துவம் பற்றி நமக்கு நன்கு தெரியும். ஆனால் அன்றைய தினத்தில் பிறந்த நமது துணை ஜனாதிபதி ஒரு புத்திசாலி" என்று கூற.....


விளைவு அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த கமிட்டி நிர்வாகி மற்றும் விழாவின் வர்ணனையாளர் இருவரையும் விளக்கம் கேட்டு விசாரணை செய்யுமாறு இந்திய ஜனாதிபதி அலுவலகம் கேரளா தலைமைச்செயலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது............ 


ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிய வேலை இல்லை அதற்க்கென்று தனி அனுபவ அறிவு அவசியம் தேவை.......வாருங்கள் நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறைக்கு ............

"மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட.....

அப்போது 1985-87, நான் டாக்டர் ராதா கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (நான் படித்த அதே பள்ளியில்) பகுதிநேர ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த நேரம். முன்பு நான் மாணவனாக அதே பள்ளியில் படித்துக்கொண்டிருந்த போது எனக்கு மேல்நிலைக்கல்வி "தாவரவியல்" ஆசிரியராக இருந்தவர்................................. " திரு ந.கிருஷ்ண சுவாமி சார் (சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்) என்னிடம் 15 நாட்கள் விடுப்பில் அவரது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூருவுக்கு சென்றுவர உடன் உதவிக்கு வருமாறும், அதற்குத்தேவையான திட்டமிடவேண்டும் என்று என்னுடைய உதவியை கேட்டபோது, பள்ளி கலைக்கல்வி நாடகக்குழு நிகழ்ச்சி தயாரிப்பில் உதவியாக இருந்த எனக்கு "மருத்துவ சிகிச்சைக்கு திட்டமிடுதலில் " அதுதான் முதல் அனுபவமும்கூட.....
ஆசியாவிலேயே புகழ் பெற்று விளங்கும், இந்தியாவின் சிறந்த மற்றும் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான "மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான" தேசிய நிறுவனம் (NIMHANS-National Institute of Mental Health and Neuro Sciences) பெங்களூரில் அமைந்துள்ளது." இதைப்போலவே மற்றொன்று புது தில்லியில் இருக்கும் "விம்ஹான்ஸ்"(VIMHANS -Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences) வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இந்த இரண்டு இடங்களையும் சுற்றிப்பார்த்த என்னுடைய அனுபவம், என் மனதை நெகிழவைத்த அனுபவமும்கூட.............. அங்கு சிகிச்சை பெறுபவர்கள் சராசரி நோயாளிகள் போல இருந்தாலும் சிறு அளவிலான மூளைக் குறைபாடு அல்லது நரம்பியல் குறைபாடு உடையவர்கள்’ என்று அங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் சொன்னபிறகுதான் தெரிந்தது................

‘‘பெங்களூரு தேசிய மனநல மருத்துவம் மற்றும் நரம்பியல் விஞ்ஞான (நின்ஹான்ஸ்) மையத்தோடு சில மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய ஆய்வில்... இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 30% சதவிகித குழந்தைகள் மூளை வளர்ச்சியில் பின்தங்கியிருக்கும் தகவல் தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து பெற்றோர்களும் பெரிதாக கவலைப்படவில்லை என்பதுதான் கூடுதல் கொடுமை.

மன அழுத்த நோயை எப்படி அளவிடுகிராரர்கள்?.... மனவியல் நோய்களை தீர்க்கும் வழிமுறைக்கு, சரியாக திட்டமிடுதலும் அந்நோய்களைப் பற்றிய முழு விவரங்களைக் தெரிந்துகொண்டு முழுமனதோடு உதவி புரிதலும் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஒரு நபரின் மன அழுத்த நிலையை, அட்ரீனல் சுரப்பி சுரக்கும் இரண்டு இரசாயனங்களான கார்டிசால் (cortisol) மற்றும் DHEA (dehydroepiandrosterone) ஆகியவற்றை அளப்பதன் மூலம் அறியலாம்.

ஹொம்ஸ் ராகே அளவீட்டின்படி (Holmes and Rahe Stress Scale), வாழ்க்கையை மாற்றும் விதத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த (Life Change Units) எண்ணிக்கையை சேர்த்து இறுதி மதிப்பீடு செய்யப்படுகிறது. உதாரணமாக, கணவன் அல்லது மனைவியின் இறப்பு ஏற்பட்டிருந்தால், அதற்கு 100 மதிப்பெண்கள் தரப்படும்.
*கூட்டு மதிப்பெண்கள் 300+ ஆக உள்ளபோது நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
*150-299 கூட்டு மதிப்பெண்கள் – நோய்க்கு ஆளாகும் அபாயம் 30% வரை குறைவு.
*150 கூட்டு மதிப்பெண்கள்- நோய்வாய்ப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.


மனநோய் வராமல் தடுக்க "புத்துணர்ச்சியாக இருப்பது" ஒன்றே சிறந்த வழி. ஆகவே புத்துணர்ச்சி பெற ஏற்ற ஆரோக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். 
கீழ் கண்ட சில வழிமுறைகளை தினமும் சிறிது நேரம் ஒதுக்கி நடை பயிற்சிக்கு செல்லவும், 
இயற்கையில் அதிக நேரத்தை செலவிடவும், 
நல்ல நண்பரை அழைத்து பேசுங்கள்,
நன்கு வேலை செய்து பதற்றத்தைக் குறையுங்கள்,
விருப்பத்தை உங்கள் புத்தகத்தில் எழுதுங்கள்,
நீண்ட குளியலில் ஈடுபடவும்,
மனமுள்ள ஊதுவத்தி-மெழுகுவத்திகளை ஏற்றுங்கள்,
சூடாக காபி அல்லது தேனீர் பருகவும்,
செல்லப்பிராணிகளுடன் விளையாடவும்,
உங்கள் தோட்ட்த்தில் வேலைகள் செய்யவும்,
உடலுக்கு மசாஜ் செய்துகொள்ளவும்,
விரும்பிய நல்ல புத்தகத்தை படியுங்கள்,
நல்ல இசையை கேளுங்கள்,
நகைச்சுவை நிகழ்ச்சிகளை பாருங்கள்,
பொழுதுபோக்குக்கு நேரம் ஒதுக்குங்கள்: பொழுதுபோக்கு மற்றும் ஓய்வுக்கு உங்கள் அன்றாட வேலைத்திட்டத்தில் இடமளியுங்கள். இந்த நேரத்தில் பொறுப்புகளை மறந்து புத்துணர்வு பெறுங்கள்.

பிறருடன் பழகுங்கள்: நேரிடை சிந்தனையுள்ள மக்களுடன் பழகுங்கள். இதனால் எதிர்மறை எண்ணங்களை குறைக்க முடியும்.

நீங்கள் விரும்பும் ஏதாவதொன்றை தினமும் செய்யுங்கள்: உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் நடவடிக்கைகளில் (உதாரணமாக இசை, பிரயாணம் போண்றவை) ஈடுபடுங்கள்.

நகைச்சுவை உணர்ச்சியை பாதுகாத்துக் கொள்ளுங்கள்: உங்களை நீங்களே உங்களை புரிந்துகொண்ட கேலி செய்துகொள்ளும் நிலைக்கு வர முயலுங்கள். 


சிரிப்பு பல வழிகளில் மன இறுக்கத்தை குறைக்கிறது........

ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு :-
1. உணவுமுறையை சரிபடுத்துங்கள்: பிற சத்துக்களைப் போலவே, B வகை வைட்டமின்கள் மற்றும் மக்னீஸியம், வைட்டமின் C ஆகியவையும் மன இறுக்கத்தை குறைக்க அவசியத் தேவையாகும். எலும்புகள் வலுப்பெற வைட்டமின் D உதவுகிறது. ஆரோக்கியமான உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பலவித தாதுப்பொருட்கள் முக்கியம். தற்பொதைய உணவு முறையை ஆய்வு செய்து, அவற்றிலுள்ள குறைகளை நீக்குங்கள். கேக் வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக உப்பு, மாத்திரைகள் ஆகியவற்றை கூடுமானவரை தவிர்க்கவும்.

2. நச்சுத்தன்மை உடைய பொருட்களை குறையுங்கள்: புகையிலை, மது ஆகியவை தற்காலிகமாக மன இறுக்கத்தை குறைக்குமாறு தோன்றினாலும், உடல் சமநிலையை பாதிக்கின்றன.

3. உடற்பயிற்சியை அதிகப்படுத்துங்கள்: பொதுவாகவும், இறுக்கமாக உணரும்போதும், உடற்பயிற்சி செய்யுங்கள்: தினமும் செய்யும் உடற்ப்பயிர்ச்சி, அட்ரீனலின் அளவை குறைத்து, உதவிகரமான இரசாயனங்களை உற்பத்தி செய்து நன்மை அளிக்கும். மேலும் மன அழுத்தம் உண்டாக்கும் காரணிகளை குறைக்கிறது. அதோடு இறுகிய தசைகளை இளக்குகிறது,
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது,
உடல் நலத்தை சீராக்குகிறது.

4. சுய குணங்கள் மற்றும் உணர்வுகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இறுக்கம் உண்டாகும் சூழ்நிலைகளை அறிந்து, அவற்றை சந்திக்க தயாராக இருங்கள். யோகா, தியானம், ஹிப்னாடிசம், மசாஜ் போன்ற இறுக்கம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.

5. தூக்கம் மற்றும் ஓய்வு நல்ல சமநிலையான உடல்நிலைக்கு அவசியம். பகலில் குட்டித் தூக்கம் போடுவதும் நல்லதே. இதனால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. தேவையில்லாத எண்ணங்கள் குறைகிறது.

6. வேலை செய்யும் இட்த்தில் கோபமடைவது, மன இறுக்கத்தின் அறிகுறி. சம்பந்தபட்ட நபர் ஒப்புக்கொள்ளுதல், காரணமறிதல், ஈடுபாடு, ஆகியவை மூலம் மாற்றத்தை விரும்பினால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும். 


விழிப்புணர்வே முதல் படி. சிலர், தங்கள் கோபம் பற்றி பெருமைப்பட்டு, மாற விரும்புவதில்லை. சிலர் கோபத்தால் பிறர் பாதிக்கப்படுவதை உணருவதில்லை. அடிப்படை காரணத்தை கண்டறிய தக்க ஆலோசனைகள் தேவை. 

தங்கள் சுய விருப்பு வெறுப்பின்றி, அடுத்தவர் பாடிப்புக்களையும் உணர்ந்து, கோபம் பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சிந்திக்க வேண்டும். கோபப்படுவோருக்கு இத்தகைய உணர்வை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். கோபத்தால் உடல்நிலை மற்றும் குடும்பத்தினர் பாதிக்கப்படுவதை அவர்களுடன் விவாதியுங்கள். தங்களை விட்டு விலகி நின்று தங்களையே விமர்சிக்கும் அளவுக்கு அவரை மாற்றுங்கள். 

அடுத்து, கோபம் ஏற்படுத்தும் காரணிகளை அறிந்து அவற்றை தவிர்க்க வேண்டும். ஆலோசனை வழங்குபவர், ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களை அவருடன் செலவழித்து, அவர் நம்பிக்கையை பெற்று, அவருக்கு வழிகாட்ட வேண்டும்..... தொடரும்....

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.......

முகநூளில் 05-நவம்பர்-2013 பதிவு...... 
சுவாமி விவேகானந்தர் பிறந்து 149 ஆண்டுகள் நிறைவுற்று 150ஆவது (2013-2014) பிறந்த வருடம் துவங்கியுள்ளது. சுவாமிஜி அவர்கள் தவமிருந்த குமரிமுனைக்கு அருகில் குமாரபுரம் என்னும் கிராமத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு குறிப்பிலிருந்து சில தகவல்கள். 

இந்நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்றிட அவரவர்கள் தங்கள் சொந்த செலவில் பேருந்துகள் வேன்கள் கார்கள் வாயிலாக வந்தனர். மொத்தம் 2,948 வாகனங்களில் வந்திருந்தனர். அதில் 267 பேருந்துகள், 1,930 வேன்கள், 320 கார்கள், 396 இரு சக்கர வாகனங்கள்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழங்கிட 2 லட்சம் சப்பாத்திகள் 1 லட்சத்து 46 ஆயிரம் இட்லி தயாரிக்கப்பட்டது. 19 மணிநேரத்தில் வெறும் 8 பேர் மட்டும் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த இட்லி தயாரித்திட 606 கிலோ மாவு உபயோகப் படுத்தப்பட்டது. இது கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளது. 


அதிக இட்லி தயாரித்து சாதனை படைத்தவர் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்தக்காரர் திரு.சரவண மாணிக்கம் ஆவார். இவரது சாதனையை அங்கீகரித்து Elite World Record அமைப்பின் பிரதிநிதி பாலநாக சாய்கிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். 


நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தின் அருகில் டாஸ்மாக் (மதுபான) கடை இருந்தும் கூட நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஒருவர் கூட அந்தப் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொலைகாட்சி நிருபர் ஒருவர் கூறினார்.
மொத்தம் 2,542 கிராமங்களில் இருந்து நிகழ்ச்சிக்கு மக்கள் வந்திருந்தனர். 
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தருகில் மொத்தம் 2,948 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. எவ்விதமான இடையூறுகளும் இன்றி வாகனங்கள் சுமுகமாக வந்து சென்றன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கோ பெரும் ஆச்சரியம். சங்க ஏற்பாட்டினை அவர்கள் பாராட்டினர். 


காவல் துறையினர் நூற்றுக் கணக்கில் பாதுகாவலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களுக்கு அங்கு எவ்வித வேலையும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இல்லை. உயர் அதிகாரிகள் உட்பட அனைவரும் சங்க நிகழ்ச்சிகள் எப்படி திட்டமிட்டபடி எவ்வித குழப்பமும் இன்றி குறிப்பிட்ட நேரத்தி துவங்கி நடைபெறுகிறது என்பதை கவனித்தனர்.

பல குடும்பத்தில் தாத்தா-பேரன்-மகன் என மூன்று தலைமுறையினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்....... 

ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்

வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே.....
ஒரு ஊரில் , ஒரு ராஜா !
ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.
அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.
இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.
இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.
மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''
தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''
கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.
மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.
மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.
படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''
''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''
''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''
''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''
''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''
''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!
இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.
மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!
நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.
இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.
மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?
பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.
ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.
இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!
அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே.....

தமிழகத்தைப் பொருத்தவரை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் பெண்கள்தான் அதிகம் இடம் வகிக்கிறார்கள். ......

முகநூல் பக்கத்திலிருந்து 2006....


தமிழகத்தைப் பொருத்தவரை வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களில் பெண்கள்தான் அதிகம் இடம் வகிக்கிறார்கள். ...... 

எம்ஓபி சமுதாய வானொலி 107.8 கேளுங்க... என்கிறார் ஆர்ஜே மோகனப்பிரியா. இவர் வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் பிஎஸ்ஸி கணிதம் பயிலும் மாணவி. இம்மாணவி 450 மணி நேரம் வானொலி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதற்காக சிறந்த ஆர்ஜேவாக பரிசும் பெற்றிருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பெரிய எம்எப் நிலையத்திற்குரிய கட்டமைப்புகளுடன் காட்சியளிக்கிறது எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி யின் எம்ஓபி பண்பலை வானொலி நிலையம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இது காலை, மதியம் மாலை என மூன்று வேளைகளில் 35 வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. அதனை நுங்கம் பாக்கத்தைச் சுற்றியுள்ள 10 கி.மீட்டருக்குட்பட்ட பகுதிகளில் கேட்கமுடியும். விளம்பரம், செய்திகளைத் தவிர ஒரு பெரிய வானொலி நிலையத்தின் அத்தனை சிறப்பான நிகழ்ச்சிகளையும் இவர்களும் தருகிறார்கள். பிஎஸ்ஸி எலட்ரானிக்ஸ் படிக்கும் மாணவிகள் படிப்பில் ஒரு பகுதியாக இப்பண்பலை வானொலியில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்வது தொடங்கி, நிகழ்ச்சி தயாரிப்பு, எடிட்டிங் செய்வது, வானொலி கிளப்புகளை உருவாக்குவது என அனைத்துப் பணிகளையும் செய்கிறார்கள்.
மாணவி திவ்யாவுக்கு இதுவொரு உற்சாகமான பயிற்சியாக இருக்கிறது. “எங்கள் குழுவினர் காஞ்சிபுரம் பற்றி ஓர் ஆவணப்படத்தை எடுத்தோம். மூன்று மணி நேர நிகழ்ச்சி. சுற்றுலாத்தலங்கள் முதல் அங்குள்ள நெசவாளர்களின் பிரச்னைகள் வரை அதில் எடுத்துச்சொன்னோம். எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத் தது. சாலையில் நடந்து செல்கிறவர் களிடம் போய்க்கூட பேசி ஒலிப்பதிவு செய்வோம். வானொலி தொழில் நுட்பம் தொடர்பான சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன. எனக்கு நிறைய தன்னம்பிக்கை கிடைத்திருக்கிறது” என்கிறார் இவர்.

நிகழ்ச்சி தயாரிப்பு என்பது எளிமையானதுதான் அதற்க்கு மனசிருந்தால் போதும் மார்க்கம் கிடைத்துவிடும்....

Wednesday, October 14, 2015

"நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்"

நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறையின் ஏடுகளில், "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின்" விழா நிகழ்ச்சியை செம்மையாக நடத்திய விழா குழுவினர்களை பாராட்டும் விதமாக   "நிகழ்ச்சி மேலாண்மையில் சிறந்த நிகழ்சிகள்" என்கிற தலைப்பின் கீழ்   "2015-புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின், நிகழ்ச்சி மேலாண்மை குறித்த விவரங்கள் இடம்பெறுகிறது"  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய விழா குழுவினர் அனைவரும் மேலும் மேலும் பல வெற்றிகளுடன் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று, சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்... நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 


Saturday, September 12, 2015

இந்தியாவின் தேசத்தந்தையை அவமரியாதை செய்வதா?

இந்தியாவின்  தேசத் தந்தை என்று போற்றப்படும் திரு காந்தி அடிகளின் திரு உருவம் இந்திய ரூபாயில் பதிப்பது என்கிற முடிவெடுத்தபோது எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் நிரம்பி வழிந்தது.... அது ஒரு பெரிய கதை... சரி இப்போது அது நமது விவாதமல்ல.... பணமும் மனமும் என்கிற ருபாய் நோட்டின் மதிப்பு என்கிற "தன்னம்பிக்கை பயிற்சி" வகுப்பிற்காக ஒரு எடுத்துக்காட்டு கட்டுரையானது 1990-கலீல் உருவானது. நமது தமிழர் ஒருவர்தான் இதை மும்பை, தில்லி, நாக்பூர் போன்ற வட மாநிலங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளருக்குத் தேவையான தன்னம்பிக்கை பயிற்சியளிக்க இந்த பணமும் மனமும் -என்கிற உதாரண செயல் அறிவை பயன்படுத்தினார்,  அதாவது இந்திய ருபாய் நோட்டை கசக்கினாலும் காலில் போட்டு மிதித்து அழுக்காகினாலும் அதன் மதிப்பு குறையாது அதுபோலத்தான், நீங்கள் உங்களது பணியில் உங்களை யாரும் பொருட்படுத்தாமல் போனாலும் உங்களின் மதிப்பு குறையாது என்றார்" நம்மவர்கள் காப்பியடிப்பதில் சளைத்தவர்கள் இல்லை எனவே ஒரு வரிகூட பிசகாமல் அப்படியா இன்றளவும் அந்த உதாரண செயல் அறிவை பயன்படுத்திய பல பயிற்சியாளர்கள் திணறுகிறார்கள் காரணம் "காந்தியடிகள் படம் அச்சிட்ட பணத்தை காலில் மிதிப்படும்படி செய்து காட்டுவது சரியில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்ததினால் பயிற்சி தரவேண்டிய பயிற்சியாளர் முகத்தில் அசடுவழிந்தார்கள்.  இதைத்தான் நான் "பணத்தை மிதித்து அழுக்காக்கிக் காட்டுவதைவிட அதை மாற்றி பணத்தை குப்பைத்தொட்டியில் போட்டாலும் குப்பைத் தொட்டியின் நாற்றம்/வாடை வீசினாலும் பணத்தின் மதிப்பு குறையாது" என்று கூறுமாறு தன்னம்பிக்கை பயிற்சியளிக்கும் "பயிற்றுவிக்கும் -பயிற்சியாளர்"{TRAIN THE TRAINER} பட்டறையில் தெரிவித்துவருகிறேன்.  இதைக் கூறும்போதுதான் இந்தியத் தேசத்தந்தை எழுதிய இங்கிலாந்தில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் குறித்து இந்தியர்களைப்பற்றி எழுதியிருந்தது எனக்கு ஞபகத்தில் வந்தது ...... திரு காந்தி அவர்கள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது.... அன்று அவரது கல்லூரியில் அனைவருக்கும் ஆங்கிலப்பாடத்தின் தேர்வு முடிவுகளின் விடைத்தாள் வழங்கப்பட்டது. திரு காந்தி அவர்கள் 60% விழுக்காடிற்கு மேல் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தார். அவரது வகுப்பில் 15-20% விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருந்த ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, திரு காந்தி அவர்களின் அதிக மதிப்பெண் ஆச்சரியத்தை உண்டாக்க, அனைத்து மாணவர்களும் திரு காந்தி அவர்களிடம் சென்று "உங்களின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல, அதோடு நீங்களோ ஆங்கிலம் அல்லாது பல மொழிகள் பேசும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் அப்படி இருந்தும் எப்படி உங்களால் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறமுடியும்?" என்று கேள்விக்கேட்டனர்... அதற்க்கு திரு காந்தி அவர்கள் " இந்தியருக்கு மொழி ஒரு பொருட்டல்ல. எப்படிப்பட்ட  கடினமான மொழி மற்றும் பாடமானாலும் அப்படியே படித்து மனதில் நிறுத்து, தேர்வின்போது அப்படியே அச்சுப்பிசகாமல் விடைத்தாளில் எழுதிவிட்டு (வாந்தியெடுத்துவிட்டு) வருவதில் வல்லவர்கள்" என்றார் .... இங்கிலாந்து மாணவர்கள் இப்படியும் ஒரு திறமையா என வியந்தனர்..... இது காந்தியடிகளின் சுய சரிதையில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தி ....நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்.  

Wednesday, September 2, 2015

"பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-


பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கையை தூக்கினர். பிறகு அதே  நோட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பிறகு அந்தக் குப்பைத்தொட்டியிளிருந்து எடுத்து, முகர்ந்து பார்த்து நாற்றம் வீசுவதோடு அழுக்காகிவிட்டது என்று கூறி அனைவரிடமும் காட்டினேன். அப்போதும் அனைவருக்கும் அந்த நோட்டு பிடிக்கும் என்று, மீண்டும் அனைவரும் கையை தூக்கினர்.

'நோட்டு கசக்கப் பட்டு, குப்பையின் நாற்றம் வீசும் நிலையில் அழுக்ககிவிட்டதே, இந்த நிலையிலும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது ' என்று கேட்டேன்.

'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அழுக்கானாலும், குப்பைத்தொட்டியில் விழுந்தாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்'  என்றார் .

'சரியாகச் சொன்ணீ ர்கள்' என்றேன்,  அதுபோல தன் திறமையின் மதிப்பை (1000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மதியாமல் தூக்கி எறிதல் போன்ற நிலை) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி இருக்கும் வரை  (அதாவது மனது (கிழியாமல்) உடைந்து போகாமல் இருக்கும் வரை) தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது. .....இது ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன் அவர்களின் அனுபவ  வாழ்கை பொன் வரிகள். 

Saturday, August 22, 2015

ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பகுதியில், ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதர்க்குத்தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனத்தில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்க வேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலர், லாபம் கிடைத்தவுடன் உடனே செலவு செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். கல்லாவில் சில்லறை சேர்ந்தவுடன் ஒரு ஓட்டல் முதலாளி அதனை எடுத்துக் கொண்டு காணாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இதுவும். இடத்துக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பாக்கி, வங்கிக் கடன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மிச்சமிருப்பதை சேமிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். மிகச் சிறு பகுதி மட்டுமே செலவுகளுக்கு.

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு பணம் ஈட்டியவர்களையும் நம்பமுடியாத அளவுக்கு அவற்றைத் தொலைத்தவர்களையும் நான் கண்டிருக்கிறேன். செல்வம் என்பது கையை விட்டு செல்லக் கூடிய ஒரு கருவி. தக்க வைத்துக் கொள்ளும் சூத்திரம் அறியாதவர் எவ்வளவு ஈட்டினாலும் பிரயோஜனம் இல்லை. சிறு லாபம் வந்தவுடன் நிலை தடுமாறி வாழ்க்கைத் தரத்தை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளும் பெரும்பாலோரை நான் கண்டிருக்கிறேன். தொழிலிலிருந்து வரும் நிகர லாபத்தின் ஒரு பகுதி அந்தத் தொழிலை மேம்படுத்துவதற்குச் செலவு செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு மிக அவசியம்.

நாற்பது வயதுக்குமேற்பட்ட பலரும் பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு. ‘நான் கூட சிறிது காலம் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், அத்தோடு விட்டுவிட்டேன்.’ எந்தவொரு தொழிலையும் நின்று, நிதானித்து, நிலைத்து நிற்கும்படி தொடர்ந்து நடத்துவதில்தான் திறமை அடங்கியுள்ளது. சிறிது காலம் அதைச் செய்தேன், சிறிது காலம் இதைச் செய்தேன் என்று சொல்பவர்கள் தொழிலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு மேம்போக்கான உந்துதலில் தொடங்கி இருப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் தொழில் ஆர்வத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கிட முடியாது.

உலகளாவிய அளவில் நிர்வாகவியல் குறித்து ஆய்வுகள் நடத்தியிருப்பவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இது. ஒரு தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் அந்தத் தொழிலை நடத்துபவர்தானே தவிர, அந்தத் தொழிலால் ஏற்படும் இடர்பாடுகள் அல்ல. முன்பெல்லாம் பிசினஸில் இறங்கவேண்டுமானால் ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவு (Technical expertise) மட்டும் போதும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ நேர்மையான எண்ணம், நிர்வாகத் திறமை, பிரச்னைகளைக் கையாளும் விதம், கடுமையான உழைப்பு, சமூக அக்கறை ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வண்ணமயமான விளம்பரங்கள், பகட்டு வார்த்தைகள், ஆடம்பரமான மக்களைக் கவரும் உத்திகள் போன்றவற்றைச் செய்துதானே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன? சற்று முன் பார்த்த அம்சங்கள் எங்கே இருக்கின்றன? என்றால், என் பதில் இதுதான். உண்மை, உழைப்பு, உறுதி ஆகியவை நம் வசம் இருந்தால் நம் முயற்சி முழு வலிமையுடன் நிச்சயம் வெற்றியடையும். மற்றபடி, பொய்மையும் போலித்தனமும் நிச்சயம் ஒருநாள் நம்மைக் கீழே இழுத்துவிடும்.

இன்று மக்கள் வேகமாக முடிவெடுத்து ஒரு பொருளையோ ஒரு நிறுவனத்தையோ நம்பிவிடுகிறார்கள். அதே போல், மிக எளிதாக தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டும் விடுகிறார்கள். உண்மைத்தன்மை இல்லாவிட்டால் எந்தவொரு நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. அதனால் தரமான பொருளையோ, சேவையையோ மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபடுவோரது கடமையாகும்.

ஒரு தொழிலில் ஈடுபடுபவரின் பிரச்னையும் மன உளைச்சலும் அந்த அனுபவத்தைப் பெற்றவர்களால் மட்டுமே உணரமுடியும். பொதுவாக நமது சமுதாயத்தில் பிசினஸ் செய்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர்களே அதிகம். அவர்களுக்கென்ன பிசினஸில் பணம் அள்ளி எடுக்கிறார்கள் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுடைய ஏக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிலில் முழுக்கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம்.

தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.

வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.

தகுதியான நபர்கள் இல்லாமல் எந்தவொரு தொழிலையும் நடத்தமுடியாது. உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அவருக்குரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதில் எந்தவித தயக்கமோ, உணர்வுப் பிரச்னையோ எழக்கூடாது. பரவாயில்லை, பொறுக்கலாம் என்று தவறுகளைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கினால் அதுவே அந்தத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் ஒரு சில தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக நம்பி விடுவார்கள்.

எந்தவொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு அதை நீங்கள் தனி நபராகச் செய்யப்போகிறீர்களா அல்லது கூட்டுத் தொழிலாகச் செய்யப்போகிறீர்களா என்பதைப் பற்றித் தீர்மானமான, தீர்க்கமான முடிவை எடுப்பது மிக அவசியம். தனிப்பட்ட நட்பு வேறு, தொழில்முறை உறவு வேறு. இதைப் புரிந்துகொள்ள தவறினால் மன உளைச்சல் பெருகும்.

உடன் இருப்பவர் உழைப்பாளியா அல்லது சுகவாசியா, நேர்மையானவரா அல்லது போலியா, லாபத்தில் மட்டும் பங்கேற்பவரா அல்லது நஷ்டங்களிலும் உடன் இருப்பவரா, பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவரா அல்லது ஓடிவிடுபவரா போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள்மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக அவர் இருப்பது நல்லது.

கவனம், ஒரு தொழிலைத் தொடங்குவதில் மட்டுமல்ல, இழுத்து மூடுவதிலும்கூட சட்டச் சிக்கல்கள் உள்ளன. தொடரவும் முடியாமல் மூடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டு செய்வதறியாது நிற்கும் நிலையைத் தடுக்கவேண்டும். ஒருவர் தங்களுடைய சொந்த லாப, நஷ்ட பிரச்னைகளால் சுய தொழிலிலிருந்து விலகினால், பலர் வேலையிழந்த தடுமாறுவார்கள் அல்லவா?

சிறு தொழில் ஒன்றை மேற்கொள்பவரை வட்டத்துக்குள் இருக்கும் ஒரு புள்ளியோடு ஒப்பிடலாம். முதலில் அவரால் ஒரு சிறு குழுவுக்கு (team of employees) வேலை வாய்ப்பு கிடைத்து பலன் பெறுகிறார்கள்.

அடுத்து, அவருடைய தொழிலுக்குத் தேவையான கருவிகளையோ உபரிப் பொருளையோ மூலப் பொருள்களையோ வழங்குபவர்கள் (suppliers) பலன் பெறுகிறார்கள். அவர்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைகிறது. அடுத்த கட்டமாக, தொழில் செய்பவர் தான் உற்பத்தி செய்யும் பொருளையோ (finished products) அல்லது சேவையையோ (services) சமுதாயத்தின் முன் வைக்கின்றனர். பிறகு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்கள் (customers) உருவாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழில் உருவாவதால், அந்த இடத்தைச் சுற்றி பல சிறிய பெரிய அனுகூலங்கள் உருவாகின்றன.

உதாரணமாக, சிறு தொழில் நடத்தும் இடத்துக்கு அடிக்கடி பொருள்கள் வந்து போக வேண்டிய நிலை இருந்தால், அந்தத் தொழிலதிபர் சாலைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியவராக மாறிவிடுகிறார். தனது சுயலாபத்துக்காகவும் தொழில் முன்னேற்றத்துக் காகவும்தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்றாலும் அவருடைய சுயநலன் பொது நலத்துக்கும் உகந்ததாக மாறிவிடுகிறது. அதே போல் அவர் செலுத்தும் வணிக வரி, வருமான வரி போன்றவை மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகுகிறது. நல்லப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. தகவல் நன்றிகளுடன் திருவாளர் மைதிலி "பெண்மை.காம்"

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும்.

உங்களிடம் ஒரு ஐந்தாயிரம் ரூபாய் இருந்தாலே போதும், நீங்களும் ஒரு முதலீட்டாளராக ஆகமுடியும். வருகிற ஜூலை-2015, 11 மற்றும் 12 ம் திகதி அன்று தமிழகத்தின் கோயம்புத்தூர் நகரில் அமைந்த சுகுணா கல்யாண மண்டபத்தில், சென்னையை சேர்ந்த குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் "கோவை -முதலீடு எக்ஸ்போ -15" (Invest Xpo'15, a national-level exhibition and seminar on investment and business opportunities) என்கிற முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்பிற்கான, தேசிய அளவிலான வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 2 நாட்கள் நடக்கும் கோவை முதலீட்டு கண்காட்சியில் சுமார் 40 அரங்குக் கூடங்கள் அமைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் (Mr. V.J.Gopalan, Chairman and Chief Executive) அவர்கள் குறிப்பிடுகையில், இதேபோன்ற ஒரு கண்காட்சியை பொள்ளாச்சியில் நடத்தியபோது மிகப்பெரிய வரவேற்ப்பையும், அனைவருக்கும் சந்தையில் முதலீடு செய்வது பற்றிய ஒரு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியதொடு அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் வர்த்தக கண்காட்சி அமைந்திருந்ததால், பலர் முதலீடு செய்ய ஆர்வத்தோடு முன்வந்ததை போலவே கோவையிலும் அமையும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார்,

மேலும் முதலீட்டாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும்விதமாக, மாநிலத்தின் நிலை-II மற்றும் நிலை-III நகரங்களில் இது போன்ற முதல்லீட்டாளர் கண்காட்சிகளை நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

செபி-SEBI மற்றும் தேசிய பங்குச் சந்தை-NSC (National Stock Exchange) மற்றும் பல் பொருள் பரிவர்த்தனை மையம்-MCX(Multi Commodity Exchange) போன்ற பங்குச் சந்தை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் பங்குச்சந்தை வல்லுனர்கள் என பலர், கண்காட்சிக்கு வருகைதரும் முதலீட்டாளர்களுக்கு, சந்தை முதலீடுகள் சார்ந்த கல்வி புகட்டுவது மற்றும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்து இலாபம் சம்பாதிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்ப்படுத்தி, கோவையின் அனைத்து முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தக்கண்காட்சி அமையும் என்று நிகழ்ச்சியை ஏற்று நடத்தும் குழு மற்றும் வர்த்தக கண்காட்சிகள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று தலைவரான திரு வி,ஜே. கோபாலன் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். http://www.investexpo.in/who-we-are.php
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.