நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்....
முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது.
ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? ..........................
வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.
ஆனால் ஒரு பிரபல பத்திரிகை ஒன்று 1977-ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன் டெல்லியை பவனி வந்தார்" என்று அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977).
விளைவு பத்திரிகை விற்பனை.....................முக்கியமாக யார் மனதையும் புன்படுத்துவதர்க்காக இங்கு இதை தெரியப்படுத்தவில்லை... நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும் செய்தி சேகரிப்பது குறித்த சில நாகரீக நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டவர்கள் இப்படிப்பட்ட தவறுகளுக்கு ஆளாகமாட்டார்கள்.
ஆகவே நிகழ்ச்சி தயாரிப்பது மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது அத்தனை எளிய வேலை கிடையாது. அதற்க்கென்று தனிப்பட்ட விருப்பமும் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டியது அவசியம்.
இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்......
No comments:
Post a Comment