நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : April 2013

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

.

.

Tuesday, April 30, 2013

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????

தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், "மே" தினம் போன்ற பலவகைப்பட்ட "தினங்கள்" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத ந...ிகழ்சிகள், "நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.

கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.

சரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.

வானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...

இப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை? தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா ????

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்...

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான ...இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.

ஆனால் ஒரு பிரபல தமிழ் பத்திரிகை 1977 -ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன்" டெல்லியை பவனி வந்தார்" அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977). விளைவு பத்திரிகை விற்பனை.

இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்.

ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

1.ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

#நீங்கள் புதியவர் என்றால் முதலில் உங்கள் நண்பர்கள் உதவியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு உங்கள் இருப்பிடத்திலேயே சிறு கண்காட்சி அமைக்க திட்டமிடுங்கள்.

# மாணவர்கள் அவர்களின் வகுப்பில் ஆசிரியரின் உதவியுடன் கண்காட்சி நடத்த திட்டமிடுங்கள். (நான் பகுதிநேர ஆசிரியராக இருந்த ஒரு பள்ளியில் மேல்நிலை வணிகவியல் மாணவர்கள் (வணிக...வியலில் கண்காட்சியா என கேட்குமளவிற்கு) அலுவலக மேலாண்மை பற்றிய கண்காட்சி நடத்தினார்கள், அலுவலகத்தில் எப்படிப்பட்ட வகை வகையான கோப்புகள் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிறிய அலுவலகத்தின் தேவைகள், அலுவலகம் எப்படி இருக்கவேண்டும் போன்ற பல விரங்களை கண்காட்சியாக மிகவும் அருமையாக செய்தனர்)

#அலுவலக ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் அவர்களின் தயாரிப்பு அல்லது அலுவலக மேலாண்மை அல்லது விற்பனை, கொள்முதல், இப்படி அவர்களின் அலுவலக செயல்கள் பற்றிய ஒரு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செய்யலாம்.

# தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பே சிறு வணிகர்களைக்கொண்டு உங்கள் பகுதியில் உரிய அனுமதிபெற்று ஒரு சிறப்பு கண்காட்சி ஏற்ப்பாடு செய்யலாம்.

#முக்கிய நிகழ்சிகளின்போது அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் அருகே, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட விர்ப்பனைக் கண்காட்சி நடத்தலாம். அதாவது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என.....

#வேலைவாய்பு கண்காட்சி "நிறுவனங்களை அணுகி அவர்களின் தேவைக்கேற்ப ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அந்த இடத்திற்கு வேலை தேடுபவர்களை வரவைத்து செய்யும் வேலைவாய்ப்பு கண்காட்சி.

இன்னும் இதுபோலே நூற்றுக்கணக்கான கண்காட்சி அமைப்பதற்கு தேவையான குறிப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் முதலில் நிகழ்ச்சி தயாரிப்பு திட்டமிடவேண்டும். அதற்க்கு முதலில் முக்கிய தேவைகளை ஐந்து பகுதிகளாக (தலைப்புகளாக) பிரித்து வகைப்படுத்திக்கொண்டு திட்டமிடுதலை தொடங்கவேண்டும். அது எப்படி என்பதை மேலும் தொடர்ந்து பார்ப்போம் ........

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

நாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.

எந்தெந்த வகையில் திட்டமிடுத...லும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-

நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.

#தொலைகாட்சி மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி? அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது?

# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது?

#ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.

#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.

#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம்.
...இன்னும் தொடரும்......

Saturday, April 27, 2013

நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்

"பல்துறைகளைச் சேர்ந்த - அனைவரது, நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்.-பதியப்படும் அனைத்து விவரங்களும், அனைவருக்கும் பொதுவானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும்"