நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : "பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

.

.

Wednesday, September 2, 2015

"பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-


பலர் கூடியிருக்கும்  'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல  மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கையை தூக்கினர். பிறகு அதே  நோட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பிறகு அந்தக் குப்பைத்தொட்டியிளிருந்து எடுத்து, முகர்ந்து பார்த்து நாற்றம் வீசுவதோடு அழுக்காகிவிட்டது என்று கூறி அனைவரிடமும் காட்டினேன். அப்போதும் அனைவருக்கும் அந்த நோட்டு பிடிக்கும் என்று, மீண்டும் அனைவரும் கையை தூக்கினர்.

'நோட்டு கசக்கப் பட்டு, குப்பையின் நாற்றம் வீசும் நிலையில் அழுக்ககிவிட்டதே, இந்த நிலையிலும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது ' என்று கேட்டேன்.

'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அழுக்கானாலும், குப்பைத்தொட்டியில் விழுந்தாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்'  என்றார் .

'சரியாகச் சொன்ணீ ர்கள்' என்றேன்,  அதுபோல தன் திறமையின் மதிப்பை (1000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மதியாமல் தூக்கி எறிதல் போன்ற நிலை) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி இருக்கும் வரை  (அதாவது மனது (கிழியாமல்) உடைந்து போகாமல் இருக்கும் வரை) தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது. .....இது ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன் அவர்களின் அனுபவ  வாழ்கை பொன் வரிகள். 

2 comments:

 1. வணக்கம் நண்பரே அருமையான பொருத்தமான உவமை வியக்க வைத்தது வாழ்த்துகளுடன்
  தேவகோட்டை கில்லர்ஜி

  ReplyDelete
 2. ஐயா வணக்கம்...

  தங்கள் தளம் இன்று தான் அறிந்தேன்... தொடர்கிறேன்...

  நேரம் கிடைப்பின் : இதே போல் ஒரு பதிவு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/03/Internal-Audit.html

  ReplyDelete