நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 22, 2015

“உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்”

பழைய நினைவுகளில் சென்னை புத்தகக் கண்காட்சி :-அனைத்து அரங்குகளிலும் மக்கள் கூட்டம். .......
எதை வாங்கலாம் என்று அலைபாயும் கண்கள்.

“கண்ணா.. உனக்கு என்ன புத்தகம் வேணும்ன்னு பார்” என்று ஒரு குரல்.

சுற்றிலும் ஆண் பெண் குழந்தைகள் பலரும் தாங்கள் விரும்பிய புத்தகங்களையும், தங்கள் குழந்தைகளுக்குத் தேவையான புத்தகங்களையும் தேடி அலைந்து வாங்கிக் கொண்டு இருந்தனர்.

அதற்கிடையில், “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலும்.
இதைக் கேட்டதும், “ என்னடா இது.. இந்த இடத்தில் இப்படியா?” பழைய புத்தகமா? இங்கே எங்கே பழமைவாய்ந்த அந்த மூர் மார்கெட் வந்தது, என்று எண்ணத் தோன்றியது. இதற்க்கான விடையை கண்காட்சியின் இறுதியில் தெரிந்துகொண்டேன்.

கண்காட்சியைச் சுற்றிப் பார்த்து வேண்டியதை வாங்கி முடித்ததும், கிளம்பினோம். ஆட்டோவில் கிளம்பி யூ வளைவில் திரும்பிதும், கண்காட்சிக்கு நேர் எதிர் சாலையில் ஏகப்பட்ட கூட்டம். என்ன விற்கிறார்கள் என்று ஆர்வத்துடன் எட்டிப் பார்த்து போது, ஆச்சரியமாக இருந்தது. மக்கள் புத்தகங்களை பிரித்து பார்த்துக் கொண்டும் வாங்கிக் கொண்டும் இருந்தனர். கண்காட்சியில் பங்கு கொள்ள முடியாத கடைக்காரர்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. பழைய புத்தகங்களை அங்கே குவித்திருந்தனர். கடைக்காரர்கள் பலரும் இந்த பன்னிரண்டு நாட்களில் நன்றாகச் சம்பாதிக்கும் வாய்ப்பினைத் தவற விடக்கூடாது என்று தங்களிடம் இருப்பில் இருந்த பழைய புத்தகங்களையெல்லாம் கொண்டு வந்து கடை விரித்திருந்தார்கள். அங்கும் மக்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. நான் ஆரம்பத்தில் கேட்ட “உனக்கு என்ன புத்தகம் வேண்டுமானாலும் சொல்லு.. பழைய புத்தகக் கடையில் வாங்கித் தருகிறேன்” என்ற குரலில் எந்தவிதத் தவறும் இருந்ததாக அப்போது எனக்குத் தோன்றியது.

கண்காட்சியின் நிகழ்ச்சி நிரலில், ஓவியப் போட்டியும் பேச்சுப்போட்டியும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டதைக் கண்டேன். இந்தப் போட்டிகளின் நடுவே, வாசகர் போட்டியையும் இணைத்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஒரு எழுத்தாளரின் புத்தகத்திலிருந்து சில அறிய, பெரிய, மறக்கமுடியாத, வாழ்க்கைக்கு உபயோகமான வரங்களைப்பற்றி பேசுவது மற்றும் எழுத்தாளர்களின் புதிய புத்தகம் ஒன்றைப் படித்து அதன் விமர்சனத்தைத் தருவதோ கூட சுவையானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.