*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-12*
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-2
ஹலோ சுட்டீஸ் கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டில். கீழே தரப்பட்டிருக்கும் கதையை படித்துவிட்டு மீதிக் கதையை, கதையின் முடிவை நீங்கள்தான் சொல்லவேண்டும்.
கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் கேள்விக்கு என்ன பதில் பயிற்சி விளையாட்டு:-
அவர் பெயர் கோகுல் அவர் ஒரு அறிவியல் விஞஞானி. அவரை அறிவியல் மேதை என்றும் கூறுவார்கள். பலநாட்கள் ஆராய்ச்சி பணியில் இருந்த அவருக்கு அன்று அவரது ஆராய்ச்சி சோதனையில் அவருக்கு வெற்றிகிடைத்தது. ஆகவே அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அவர் கண்டுபிடித்த ஒரு சிறு மாத்திரை அந்த சட்டை பொத்தான் வடிவத்திலிருக்கும் மாத்திரையின் மீது ஒரே ஒரு சொட்டு தண்ணீர் விட்டால் அந்த மாத்திரை சுமார் 2 கிலோ அளவிலான சாப்பிடும் ரொட்டியாக மாறிவிடும். அதுமட்டுமில்லை அதை சாப்பிடுபவர்களுக்கு அடுத்த 10 நாட்களுக்கு பசியே எடுக்காது. மிகப்பெரிய கண்டுபிடிப்புதான் ஆனால் மாத்திரையாக விழுங்கிவிட்டால், தொண்டையை அல்லது வயிற்றையோ பதம் பார்த்துவிடும், உயிருக்கே ஆபத்தாகக்கூட எதுவும் நடக்கலாம்.
நாளை நடக்கவிருக்கும் ஒரு அரசு நிகழ்ச்சியில், அவரது கண்டுபிடிப்பை அரசுடைமையாக்கி அவருக்கு விருது வழங்க ஏற்பாடுகள் செய்யாப்பட்டிருந்தது. வானொலி, நாளிதழ், தொலைகாட்சி என அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அவரது கண்டுபிடிப்பு செய்திகளிலும் பெருமையாக பிரபல படுத்திக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம் போல அன்று இரவும் உணவு சாப்பிட்டதும் வயதாவதால் செரிமாணத்திற்காக இரவில் நடைப்பயிற்சி செய்வது அவரது வழக்கம். அப்படி அவர் ஒரு கடைத்தெருவின் சாலையை கடக்கும் பொது சாலையோரமாக ஒரு காட்சியைக்கண்டார். ஒரு ஏழை குழந்தையும் அவர்களது பெற்றோர்களும் வீடு வசதி இல்லாமல் சாலையோர நடைபாதை தரையில் படுத்திருந்தார்கள். அப்போது அந்த ஏழைக்குழந்தை அவரது தாயிடம் காலையில் யாரோ பிச்சை போட்ட ஒரே ஒரு ரொட்டித்துண்டு சுவையாக இருந்தது எனக்கு பசிக்கிறது அதுபோன்ற ஒரு ரொட்டி வேண்டும் என்று கூறி அடம்பிடித்ததை பார்த்த அந்தக்குழந்தையின் தாயார். கவலைப்படாதே நாளை மறுநாள் தீபாவளி திருநாள் வருகிறது அப்போது நமக்கு சுவையான லட்டு, அதிரசம், மைசூர்பாகு, சுவையான பால்கோவா போன்ற தித்திக்கும் தின்பண்டங்கள் யாராவது தருவார்கள் அதையெல்லாம் வயிறுநிறய சாப்பிடலாம் என்ற அம்மாவின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு அப்படியே தூங்கிப்போனது.
சற்று தூரத்திலிருந்து அவர்கள் பேசியத்தைக் கேட்ுக்கொண்டிருந்த அந்த அறிவியல் விஞ்ஞானி, மறுநாள் தனது கண்டுபிடிப்பிற்கான அரசின் பாராட்டுவிழாவில், தான் செய்தது தவறான கண்டுபிடிப்பு என்பதால் எனது இந்த உணவு மாத்திரை கண்ண்டுபிடிப்பை நான் அழித்துவி்டேன் ஆகவே அரசு தரும் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. என்று கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. அதனால் கோகுலுக்கு அரசாங்கம் அறிவித்திருந்த விருதையும் அவருக்கு அரசு தந்திருந்த விஞ்ஞானி என்ற பட்டத்தையும் ரத்து செய்தது.
இப்போ இந்த கதையின் மீதியை சுட்டீஸ் நீங்கள்தான் கூறவேண்டும். அந்த அறிவியல் விஞ்ஞானி ஏன் அப்படி செய்து தனது சிறந்த பெயரையும் புகழையும் இழந்தார்?
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்ி விளையாட்டு தொடரின் பகுதி-13*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*
No comments:
Post a Comment