நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : *பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

.

.

Saturday, May 18, 2019

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*
*(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு-1* 
*ஹலோ சுட்டீஸ் பக்தியில் பயிற்சி விளையாட்டா? என்று உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? வாருங்கள் இன்றய/நாளைய  பயிற்சி விளையாட்டுக்கு போகலாம்.* 
பூ என்பது நமது இந்த பூஉலகத்தின் மிக உன்னதமான மென்மையான உணர்வு கொண்ட நறுமணம் வீசும் பொருள் என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட வண்ண வண்ண பூக்களில்தான் இன்றய/நாளை நாம் இந்த பயிற்சி விளையாட்டை விளையாடப்போகிறோம். இதற்காக நாம் நிறைய செலவுகள் செய்தோ அல்லது அலைந்து திரிந்து பூக்களை பறித்துவரும் வேலையையோ செய்யவேண்டும் என்பதில்லை. நாம் நமது மனமென்னும் கோவிலுக்கு, வண்ண வண்ண கற்பனைப் பூக்களை பறித்துக்கொண்டு விளையாடப்போகப்போகிறோம். இப்படி கற்பனை செய்து விளையாடுவதால் நமக்கு தியான நிலை கிடைக்கும். அதோடு அபரிவிதமான இரட்டிப்பு பலன்களையும் இந்த பூஜை அல்லது தியானப் பயிற்சி நமக்கு பெற்றுத்தரப்போகிறது. அது எப்படி என்று இந்த விளையாட்டை விளையாடிப்பார்க்கலாம் வாருங்கள். மறந்துவிடாதீர்கள் நாளைய பக்தி மற்றும் தியான பயிற்சி விளையாட்டு.  
சரி இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது. ஒரு குத்து விளக்கிற்க்கோ அல்லது ஒரு சிறு மூர்த்தி அல்லது ஒரு வண்ண சுவாமி புகைப்படம் ஒன்றிற்கு நாம் பூசை செய்யப்போகிறோம் என்று நினைத்துக்கொள்வோம். மென்மையான பூக்களை விட்டெறிந்து பூஜை செய்யாமல் அந்த அழகான வண்ணமிகு மலர்களை நிதானமாக ஒவ்வொரு சுலோகம் அல்லது போற்றி மந்திரத்திற்கும் ஒரு பூ வீதம், ஒன்றன் மீது ஒன்று என்று, ஒரு வரிசைக்கு ஒரு நிறம் என, வண்ண மலர்களை ஒரு வரிசையாக அடுக்கிக்கொண்டு வரவேண்டும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் ஒரு வரிசை அதன் மீது சிகப்பு நிறத்தில் பூக்கள் ஒரு வரிசை அதன் மீது வெள்ளைப்பூக்கள் ஒரு வரிசை என பூக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி செய்யும் பூஜை முடிந்ததும்,  இப்படி அழகாக அடுக்கிவைக்கப்பட்ட வண்ணமிகு மலர்கள் ஒரு பெரிய குன்றைப்போல அதன் நடுவில் நமது ஸ்வாமியின் குத்து விளக்கோ, அல்லது ஸ்வாமியின் உருவம், விக்கிரகம், அல்லது புகைப்படம் இருப்பதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். (இந்த பூஜைக்கான புகைப்படம் பிறகு உங்களுக்கு காட்டுகிறேன்.) 
நாம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு பூஜையையும் மேற்க்கூறியவாறு நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ செய்யும்போது, நமது மனம் பூஜை செய்யும் சுலோகம் அல்லது பூஜை மந்திரத்திலும், மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யும் செயல்களாலும், நமது மனம் வேறு எங்கும் அலைபாயாமல் நாம் செய்யும் பூஜையில் முழுமையான ஈடுபாடு ஏற்படும். அப்போது நமக்கு கிடைக்கும் அபரிவிதமான அருளும் சக்தியும் என்றென்றும் நமக்கு சிறப்பு சேர்க்கும் அற்புதமான சக்திகளாக இருக்கும்.
இப்போது நம்மிடம் சுவாமி படமோ மூர்த்தியே இல்லை என்றாலும். இரண்டு பூக்களை ஸ்வாமியின் இரண்டு பாதங்களாக பாவித்து அந்த பாதங்களை சுற்றி ஒவ்வொரு போற்றிக்கு ஒரு பூ என பூக்களால் வட்டமாக அடுக்கியபடி அந்த பாதங்களை வளம் வந்து பூஜை செய்யும்போது, பூஜைக்கான பலனும் அந்த திருப்பாதங்களை சுற்றிவந்த பலனும் நமக்கு கிடைக்கும். ஒரே பூஜையில் பல்வேறு பலனையும் நாம் பெறமுடியும். இதையே விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ சாயி போற்றி போன்ற பல்வேறு பூஜைகளிலும், இந்த பயிற்சி முறையை பின்பற்றி பூஜை செய்யும்போது அபரிவிதமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.  ஆகவே இந்த பறிச்சி விளையாட்டில் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானமும் அதோடு பக்தியோடு நாம் செய்யும் சாந்தமான மனநிலையும் நமக்கு கிடைக்கிறது. 
இந்த பக்தி மற்றும் தியான பயிற்சியின் 2மற்றும்3 வது பகுதியில் நாம் டெலிபதி என்ற பயிற்சி விளையாட்டை விளையாட இருக்கிறோம். அந்த விளையாட்டு நாம் நினைத்ததை சாதிக்கும் மனசக்தியை  நமக்கு தரக்கூடிய பயிற்சி விளையாட்டு.  
ஹலோ சுட்டீஸ் மேலும் இன்று நாம் ஒரு ஆன்மீக விஷயத்தையும் தெரிந்துகொள்வோம். "கோவிந்தா கோவிந்தா" என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க...
மோட்சதினை திருமால் ஒருவனே தரமுடியும் என்பதால் அவன் திருநாமமான “ கோவிந்த நாமம்” மோட்சம் தரும் மந்திரமாகிறது.
கோவிந்தன் என்றால் "திருமால்" என்று பொருள்..... நாமம் என்பது நாமகரணம் அதாவது "பெயர்" பெயர் சொல்லி அழைப்பது...  ஆகவே "கோவிந்த நாமம்" என்பது திருமாலின் பெயரை போற்றுவது.
ஆதி சங்கரரும் “பஜ கோவிந்தம்” என்னும் நூல் ஒன்றினை எழுதி நமக்கு கோவிந்தா என்னும் நாமத்தின் பெருமையை உணர்த்தியுள்ளார். 
பஜ கோவிந்தம் என்பதின்பொருள் , ”பஜ” என்றால் பஜனை செய் எப்படியெனில் “ கோவிந்தா” என்று பஜனை செய்.
இப்படிபட்ட புனிதமான திருமாலின் திருப்பெயர் கோவிந்தா என்பது 
பலரால் பல ஆண்டுகளாக ஏமாற்றத்தின் அடையாளமாக, அதாவது கோவிந்தா என்றால் ஏமாற்றம் என்று கிண்டல் செய்யப்படுவது மத, மன உணர்வுகளை புண்படுத்துவதாகும். இதனால் கிண்டல் செய்பவர்களின் பாபம்தான் அதிகரிக்கும். ஆகவே "கோவிந்தா" என்று கிண்டல் செய்யாதீர்கள்....கோவிந்தா என்னும் நாமத்தினை ஏமாற்றத்தின் அடையாளமாக எண்ணி கிண்டல் செய்து பாபத்தினை சேகரித்துக்கொள்வதை தவிர்ப்போமாக.
கோவிந்தனான ஸ்ரீ கிருஷ்ணனை அவனது நாமாவான “கோவிந்தா” வால் துதித்து பயன்பெறுவோம், பகவானின் அருளினால் இன்பமும், மகிழ்ச்சையையும் பெறுவோம். 
சொல்லுங்கள்... "கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா! கோவிந்தா!"
கோவிந்தா என்னும் அவன் நாமம் சொல்வோம் பாபம் நீங்கி பகவான் திருவருள் மோக்ஷம் பெறுவோம்.
"ஸ்ரீ கோவிந்தன் திருவடிகளே சரணம் "
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.


அடுத்த பயிற்சி விளையாட்டின்  முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*
*(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-1*

No comments:

Post a Comment