நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : *பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, May 18, 2019

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-1
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ள முடியும்.

திரும்பத் திரும்ப ஓர் எண்ணம் உன் மனத்தில் எழுமானால் அதை செய்து முடிக்கும் திறமை உன்னுள் இருக்கிறது என்று அர்த்தம்.

இதில் 'திரும்பத் திரும்ப' என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். ஒரு மந்திரத்தை தினமும் திரும்பத் திரும்ப சொல்கிறோம். படிக்கும் காலத்தில் வாய்ப்பாட்டை திரும்பத் திரும்ப சொல்கிறோம். இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் சொல்லானது நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது. இப்படி ஆழ்மனதில் பதிவான விஷயங்கள் நமக்கு எப்போதும், எந்த நேரத்திலும் உதவத் தயாராக காத்திருக்கின்றன. பள்ளியில் படித்த வாய்ப்பாட்டை நள்ளிரவில் தட்டி எழுப்பி கேட்டால்கூட நாம் சொல்கிறோம் அல்லவா அதுபோல் நம் எண்ணமானது திரும்பத் திரும்ப எண்ணப்படும்போது அதன் வலிமை அதிகரி்க்கிறது. எண்ணத்தின் சக்தியும் அதிகமாகிறது. இப்படி வலிமை பெற்ற எண்ணத்தின் சக்தி நம்மிடமிருந்து வெளிச்சம்போல புறப்படுகிறது. அந்த எண்ண சக்தி புறச்சூழ்நிலையாகவும், நாம் விரும்பும் பொருளாகவும் மாறுகிறது. 

நம்மிடமிருந்து புறப்படும் வெளிச்சம் போன்ற ஒருவித சக்தி ஒரே மனநிலையைக்கொண்ட உள்ளங்களில் புகுந்து அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் ஒருமனிதனுக்குள் ஒருவித நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் தன்னம்பிக்கை என்ற குழந்தை. பின்னாளில் இக்குழந்தை வளர்ந்து ஆளாகி மனிதனை தன்னம்பிக்கை உடையவனாக மாற்றுகிறது' 

வாங்க இப்போது நாம் முதல்நிலை தன்னம்பிக்கை பயிற்சி விளையாட்டுக்கு செல்வோம். இந்த விளையாட்டில் அனைவரும் வரிசையாக நிற்கவேண்டும். இப்போது நீங்கள் 5 மாணவர் இருக்கிறீர்கள் என்றால் அனைவரும் 1,2,3,4,5 என ஒரு வட்ட வடிவில் வரிசையில் நிற்கவேண்டும். 

பயிற்சி ஆரம்பமானதும் 1,2,3,4,5,6,7,8,9,10..ன்1000 என வட்ட வரிசையில் இருக்கும் மாணவர்கள் தொடர்ந்து அடுத்து அடுத்து இருப்பவர்கள் தொடர் எண்களை சொல்லிக்கொண்டே போகவேண்டும்.
எண்கள் ஒற்றைப்படையில் வரும்போது ஒரு முறை "வெற்றி" அதுவே இரட்டைப்படை எண்ணாக இருக்கும்போது இரண்டுமுறை "வெற்றி வெற்றி" என்று சொல்லவேண்டும். அதாவது வட்ட வரிசையில் இருக்கும் முதலில் இருப்பவர் ஒன்று என்று சொல்லிவிட்டு "வெற்றி" என்று அதற்க்கு அடுத்து இருப்பவர் இரண்டு "வெற்றி வெற்றி" என்றும் அடுத்தவர் மூன்று என்று கூறிவிட்டு "வெற்றி" என்று ஒற்றைப்படை எண் ஒரு தடவை சொல்லவேண்டும். அடுத்தவர் நான்கு என்று இரட்டைப்படை எண் ஆதலால் "வெற்றி வெற்றி" என்று இரண்டு முறை சொல்லவேண்டும் இப்படியே எண்கள் தொடர்ந்து எண்ணிக்கொண்டு அந்த எண்களையும் அதோடு அந்த எண் ஒற்றைப்படை எண்ணானால் ஒரு முறை" வெற்றி" என்றும், அந்த எண் இரட்டைப்படை எண் ஆனால் இரண்டு முறை "வெற்றி வெற்றி" என்று கூறவேண்டும். இப்படி வேகமாக 1000 எண்கள் வரை எண்ணிக்கையையும் கவனமாக எண்ணியும், அதே நேரம் ஒற்றைப்படையான இரட்டைப்படை எண்களா என்பதை நினைவில் வைத்து திரும்ப திரும்ப கூறுவதால் மனதில் வெற்றி என்ற வார்த்தை ஒற்றையா இரட்டையா என பகுத்தாய்ந்து பதிந்துவிடும். பிறகு இவர்கள் தங்களது வாழ்க்கையில் எதையும் அதிவேகமாக பகுப்பாய்வு செய்து வெற்றியை மட்டுமே நினைக்கும் தன்னம்பிக்கையுடையவர்களாக மாறுவார்கள்.

இப்போது மனச்சோர்வு, மனக்கவலையை விரட்டியடித்து தன்னம்பிக்கைக்கு மனதில் இடவசதி செய்து தரவேண்டுமல்லவா? அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்ினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்ினை வந்துடிச்சின்னா அந்த பிரச்சனையை தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. பிறகு அதுவே சரியாயிடும். என்ன சுட்டீஸ் சரியா?”
இது தான் எந்த பிரச்சனைக்கும் மனவியல் ரீதியுலான தீர்வு. சுட்டீஸ் உங்களுக்கு புரிந்ததா? உங்களும் மனம் நோகுமாறு உங்கள் மனதை கஷ்டப்படுத்திய, உங்களது மனதை வாட்டிய நிகழ்வு ஏதாவது எப்போதாவது நடந்ததா? அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்களேன். அல்லது உங்கள் மனம் வருந்துமாறு உங்களுக்கு ஏதாவது பயம், பிரச்சனை இருக்கிறதா?, உங்களுக்கு உதவி தேவையா? அப்படி இருந்தால் அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
அடுத்த பயிற்சி விளையாட்டின் முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-12*
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-2
கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டை விளையாடப்போகிறோம்.

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.