நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : May 2019

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, May 18, 2019

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*
*(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு-1* 
*ஹலோ சுட்டீஸ் பக்தியில் பயிற்சி விளையாட்டா? என்று உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளதா? வாருங்கள் இன்றய/நாளைய  பயிற்சி விளையாட்டுக்கு போகலாம்.* 
பூ என்பது நமது இந்த பூஉலகத்தின் மிக உன்னதமான மென்மையான உணர்வு கொண்ட நறுமணம் வீசும் பொருள் என்றுகூட சொல்லலாம். அப்படிப்பட்ட வண்ண வண்ண பூக்களில்தான் இன்றய/நாளை நாம் இந்த பயிற்சி விளையாட்டை விளையாடப்போகிறோம். இதற்காக நாம் நிறைய செலவுகள் செய்தோ அல்லது அலைந்து திரிந்து பூக்களை பறித்துவரும் வேலையையோ செய்யவேண்டும் என்பதில்லை. நாம் நமது மனமென்னும் கோவிலுக்கு, வண்ண வண்ண கற்பனைப் பூக்களை பறித்துக்கொண்டு விளையாடப்போகப்போகிறோம். இப்படி கற்பனை செய்து விளையாடுவதால் நமக்கு தியான நிலை கிடைக்கும். அதோடு அபரிவிதமான இரட்டிப்பு பலன்களையும் இந்த பூஜை அல்லது தியானப் பயிற்சி நமக்கு பெற்றுத்தரப்போகிறது. அது எப்படி என்று இந்த விளையாட்டை விளையாடிப்பார்க்கலாம் வாருங்கள். மறந்துவிடாதீர்கள் நாளைய பக்தி மற்றும் தியான பயிற்சி விளையாட்டு.  
சரி இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது. ஒரு குத்து விளக்கிற்க்கோ அல்லது ஒரு சிறு மூர்த்தி அல்லது ஒரு வண்ண சுவாமி புகைப்படம் ஒன்றிற்கு நாம் பூசை செய்யப்போகிறோம் என்று நினைத்துக்கொள்வோம். மென்மையான பூக்களை விட்டெறிந்து பூஜை செய்யாமல் அந்த அழகான வண்ணமிகு மலர்களை நிதானமாக ஒவ்வொரு சுலோகம் அல்லது போற்றி மந்திரத்திற்கும் ஒரு பூ வீதம், ஒன்றன் மீது ஒன்று என்று, ஒரு வரிசைக்கு ஒரு நிறம் என, வண்ண மலர்களை ஒரு வரிசையாக அடுக்கிக்கொண்டு வரவேண்டும். மஞ்சள் நிறத்தில் பூக்கள் ஒரு வரிசை அதன் மீது சிகப்பு நிறத்தில் பூக்கள் ஒரு வரிசை அதன் மீது வெள்ளைப்பூக்கள் ஒரு வரிசை என பூக்களை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி செய்யும் பூஜை முடிந்ததும்,  இப்படி அழகாக அடுக்கிவைக்கப்பட்ட வண்ணமிகு மலர்கள் ஒரு பெரிய குன்றைப்போல அதன் நடுவில் நமது ஸ்வாமியின் குத்து விளக்கோ, அல்லது ஸ்வாமியின் உருவம், விக்கிரகம், அல்லது புகைப்படம் இருப்பதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும். (இந்த பூஜைக்கான புகைப்படம் பிறகு உங்களுக்கு காட்டுகிறேன்.) 
நாம் செய்ய நினைக்கும் ஒவ்வொரு பூஜையையும் மேற்க்கூறியவாறு நிஜமாகவோ அல்லது கற்பனையாகவோ செய்யும்போது, நமது மனம் பூஜை செய்யும் சுலோகம் அல்லது பூஜை மந்திரத்திலும், மற்றும் பூக்களால் அலங்காரம் செய்யும் செயல்களாலும், நமது மனம் வேறு எங்கும் அலைபாயாமல் நாம் செய்யும் பூஜையில் முழுமையான ஈடுபாடு ஏற்படும். அப்போது நமக்கு கிடைக்கும் அபரிவிதமான அருளும் சக்தியும் என்றென்றும் நமக்கு சிறப்பு சேர்க்கும் அற்புதமான சக்திகளாக இருக்கும்.
இப்போது நம்மிடம் சுவாமி படமோ மூர்த்தியே இல்லை என்றாலும். இரண்டு பூக்களை ஸ்வாமியின் இரண்டு பாதங்களாக பாவித்து அந்த பாதங்களை சுற்றி ஒவ்வொரு போற்றிக்கு ஒரு பூ என பூக்களால் வட்டமாக அடுக்கியபடி அந்த பாதங்களை வளம் வந்து பூஜை செய்யும்போது, பூஜைக்கான பலனும் அந்த திருப்பாதங்களை சுற்றிவந்த பலனும் நமக்கு கிடைக்கும். ஒரே பூஜையில் பல்வேறு பலனையும் நாம் பெறமுடியும். இதையே விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீ சாயி போற்றி போன்ற பல்வேறு பூஜைகளிலும், இந்த பயிற்சி முறையை பின்பற்றி பூஜை செய்யும்போது அபரிவிதமான பலன்கள் நமக்கு கிடைக்கும்.  ஆகவே இந்த பறிச்சி விளையாட்டில் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானமும் அதோடு பக்தியோடு நாம் செய்யும் சாந்தமான மனநிலையும் நமக்கு கிடைக்கிறது. 
இந்த பக்தி மற்றும் தியான பயிற்சியின் 2மற்றும்3 வது பகுதியில் நாம் டெலிபதி என்ற பயிற்சி விளையாட்டை விளையாட இருக்கிறோம். அந்த விளையாட்டு நாம் நினைத்ததை சாதிக்கும் மனசக்தியை  நமக்கு தரக்கூடிய பயிற்சி விளையாட்டு.  
ஹலோ சுட்டீஸ் மேலும் இன்று நாம் ஒரு ஆன்மீக விஷயத்தையும் தெரிந்துகொள்வோம். "கோவிந்தா கோவிந்தா" என்று ஏன் சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க...
மோட்சதினை திருமால் ஒருவனே தரமுடியும் என்பதால் அவன் திருநாமமான “ கோவிந்த நாமம்” மோட்சம் தரும் மந்திரமாகிறது.
கோவிந்தன் என்றால் "திருமால்" என்று பொருள்..... நாமம் என்பது நாமகரணம் அதாவது "பெயர்" பெயர் சொல்லி அழைப்பது...  ஆகவே "கோவிந்த நாமம்" என்பது திருமாலின் பெயரை போற்றுவது.
ஆதி சங்கரரும் “பஜ கோவிந்தம்” என்னும் நூல் ஒன்றினை எழுதி நமக்கு கோவிந்தா என்னும் நாமத்தின் பெருமையை உணர்த்தியுள்ளார். 
பஜ கோவிந்தம் என்பதின்பொருள் , ”பஜ” என்றால் பஜனை செய் எப்படியெனில் “ கோவிந்தா” என்று பஜனை செய்.
இப்படிபட்ட புனிதமான திருமாலின் திருப்பெயர் கோவிந்தா என்பது 
பலரால் பல ஆண்டுகளாக ஏமாற்றத்தின் அடையாளமாக, அதாவது கோவிந்தா என்றால் ஏமாற்றம் என்று கிண்டல் செய்யப்படுவது மத, மன உணர்வுகளை புண்படுத்துவதாகும். இதனால் கிண்டல் செய்பவர்களின் பாபம்தான் அதிகரிக்கும். ஆகவே "கோவிந்தா" என்று கிண்டல் செய்யாதீர்கள்....கோவிந்தா என்னும் நாமத்தினை ஏமாற்றத்தின் அடையாளமாக எண்ணி கிண்டல் செய்து பாபத்தினை சேகரித்துக்கொள்வதை தவிர்ப்போமாக.
கோவிந்தனான ஸ்ரீ கிருஷ்ணனை அவனது நாமாவான “கோவிந்தா” வால் துதித்து பயன்பெறுவோம், பகவானின் அருளினால் இன்பமும், மகிழ்ச்சையையும் பெறுவோம். 
சொல்லுங்கள்... "கோவிந்த நாம சங்கீர்த்தனம், கோவிந்தா! கோவிந்தா!"
கோவிந்தா என்னும் அவன் நாமம் சொல்வோம் பாபம் நீங்கி பகவான் திருவருள் மோக்ஷம் பெறுவோம்.
"ஸ்ரீ கோவிந்தன் திருவடிகளே சரணம் "
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.


அடுத்த பயிற்சி விளையாட்டின்  முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*
*(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-1*

*பயிற்ச்சி விளையாட்டு தொடரின் பகுதி-9*

*பயிற்ச்சி விளையாட்டு தொடரின் பகுதி-9*
*(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு-1*
ஒரு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி விளையாட்டு.
இந்த விளையாட்டையும் அப்பா கண்டிப்பையும் சேர்த்து எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஆனால் இந்த விளையாட்டை எனது அலுவலக வேளையில்தான் மற்றவர்களுக்கு பயிற்சித்தர இதை நான் நிறைய பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டால் தனது பேண்ட் பெல்ட் (கால்ச்சட்டை இடுப்புக்கு அணியும் பட்டை) எடுத்து விளாசிவிடுவார் அந்தளவில் அவருக்கு கோபம் வரும். அதேநேரத்தில் மிகவும் குழந்தைத்தனமாக எங்களோடு ஒன்றாக ஆடி, பாடி, விளையாடி அன்பு செலுத்துவார். 
இன்றய பயிற்சி விளையாட்டில் பயமில்லாமல் எப்படிப் பட்ட தேர்வையும் எதிர்கொள்வது எப்படி என்று 3 வித பயிற்சி விளையாட்டு உண்டு அதில் முதல் விளையாட்டை இன்று விளையாட இருக்கிறோம். மற்ற இரண்டு விளையாட்டு குறைந்த நேரத்தில் தேர்வு எழுதும் பயிற்சி மற்றும் தேர்வு வினா விடை பயிற்சி விளையாட்டு.   
முதல் விளையாட்டில் அனைவருக்கும் 10 கேள்விகளுக்கு 10 நிமிடங்களில் பதில் தரவேண்டும் என்று பயமுறுத்தி விளையாட்டை விளையாட சொல்வார்கள். 
அதாவது ஒரு நிமிடத்தில் ஒரு கேள்விக்கு பதில் எழுதிவிடவேண்டும் அப்படி இல்லையென்றால் நேரம் முடிந்துவிட்டது என்று தேர்வுத்தாளை பிடுங்கிக்கொள்வார்கள். பிறகு குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே கேள்வித்தாளை கொடுத்ததும் வேகவேகமாக விடைகளை எழுதவேண்டும் என்று நாம் நமது மனதுக்குள் சொல்லிக்கொண்டு தேர்வு எழுத தாயாராக இருப்போம். 
தேர்வு வினாத்தாள் 1 முதல் 10 கேள்விகள் அதில் முதல் கேள்வி உங்களது பெயரை எழுதுங்கள் என்றிருக்கும் அதற்க்கு அடுத்த கேள்வி உங்களது தந்தையின் பெயர் என்ன? இப்படியே உங்களது தாயார் பெயர், விலாசம், உங்களது பள்ளிக்கூடத்தின் பெயர்...என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இப்படி அந்த வினாத்தாளின் இறுதி கேள்வி-10 இல் மேற்கண்ட 9 வினாக்களில் முதல் கேள்விக்குமட்டும் விடை எழுதிவிட்டு, உங்களது  விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிடவும் என்று குறிப்பிட்டிருக்கும். 
ஆகா 10வது கேள்விக்கு மட்டும் பதில் தருவதற்கு ஒரு நிமிடமே போதுமானது இருந்தாலும் பல மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட அனைத்து 10 கேள்விகளுக்கும் பதில் எழுதியும் அல்லது பாதியில் முழுப்பதிலையும் எழுத முடியாமல் நேரம் முடிந்துவிட்டது என தோல்வியை தழுவியிருப்பார்கள். 
இந்த பயிற்சி விளையாட்டின் நோக்கம், "பதறிய காரியம் சிதறும்" என்ற கூற்றின்படி நாம் எந்தவித பதற்றமும் இல்லாமல் கேள்வித்தாளை முழுவதும் படித்துவிட்டு, பிறகு எந்த வினாக்களுக்கு பதில் முதலில் எழுதுவது, எந்தெந்த கடினமான வினாக்களுக்கு பிறகு விடை எழுதவேண்டும் என  சரியாக திட்டமிட்டு செயல்பட்டு,  எந்த எந்த கேள்விகளுக்கான விடைகளை எப்படி எழுதவேண்டும் என்று முடிவு செய்து பின்பு தேர்வு எழுதும்போது நம்மால் வெகு சுலபமாகவும், வெற்றிகரமாகவும் தேர்வை எழுதி முடிக்க முடியும். 
அதோடு பரிட்சையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுத ஆகும் நேரத்தை குறித்துக்கொண்டு அந்த நேரத்தைவிட விரைவாக எழுதி முடிக்க பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் அப்படி விரைவாக எழுதுவதால் கிடைக்கும் உபரி நேரத்தைத்தான் நாம் நமது கேள்வித்தாளை முழுவதும் படித்துப்பார்க்க பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 
என்ன சுட்டீஸ் இந்த பயிற்சி விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இனி நீங்கள் நேரத்தோடு பரீட்சை எழுதவேண்டும் என பயமில்லாமல் தெளிவாக திட்டமிட்டு பரீட்சை எழுதி விற்றிபெறுவீர்கள் அல்லவா. வாருங்கள் நீங்கள் பரீட்சை எழுதிய உங்களது அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 
முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*
*(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு-1* 
*(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு-1*
ஒரு தேர்வை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான பயிற்சி விளையாட்டு.
இந்த விளையாட்டையும் அப்பா கண்டிப்பையும் சேர்த்து எங்களுக்கு சொல்லிக்கொடுத்தது. ஆனால் இந்த விளையாட்டை எனது அலுவலக வேளையில்தான் மற்றவர்களுக்கு பயிற்சித்தர இதை நான் நிறைய பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அப்பாவுக்கு கோபம் வந்துவிட்டால் தனது பேண்ட் பெல்ட் (கால்ச்சட்டை இடுப்புக்கு அணியும் பட்டை) எடுத்து விளாசிவிடுவார் அந்தளவில் அவருக்கு கோபம் வரும். அதேநேரத்தில் மிகவும் குழந்தைத்தனமாக எங்களோடு ஒன்றாக ஆடி, பாடி, விளையாடி அன்பு செலுத்துவார். 
இன்றய பயிற்சி விளையாட்டில் பயமில்லாமல் எப்படிப் பட்ட தேர்வையும் எதிர்கொள்வது எப்படி என்று 3 வித பயிற்சி விளையாட்டு உண்டு அதில் முதல் விளையாட்டை இன்று விளையாட இருக்கிறோம். மற்ற இரண்டு விளையாட்டு குறைந்த நேரத்தில் தேர்வு எழுதும் பயிற்சி மற்றும் தேர்வு வினா விடை பயிற்சி விளையாட்டு.   
முதல் விளையாட்டில் அனைவருக்கும் 10 கேள்விகளுக்கு 10 நிமிடங்களில் பதில் தரவேண்டும் என்று பயமுறுத்தி விளையாட்டை விளையாட சொல்வார்கள். 
அதாவது ஒரு நிமிடத்தில் ஒரு கேள்விக்கு பதில் எழுதிவிடவேண்டும் அப்படி இல்லையென்றால் நேரம் முடிந்துவிட்டது என்று தேர்வுத்தாளை பிடுங்கிக்கொள்வார்கள். பிறகு குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே கிடைக்கும். ஆகவே கேள்வித்தாளை கொடுத்ததும் வேகவேகமாக விடைகளை எழுதவேண்டும் என்று நாம் நமது மனதுக்குள் சொல்லிக்கொண்டு தேர்வு எழுத தாயாராக இருப்போம். 
தேர்வு வினாத்தாள் 1 முதல் 10 கேள்விகள் அதில் முதல் கேள்வி உங்களது பெயரை எழுதுங்கள் என்றிருக்கும் அதற்க்கு அடுத்த கேள்வி உங்களது தந்தையின் பெயர் என்ன? இப்படியே உங்களது தாயார் பெயர், விலாசம், உங்களது பள்ளிக்கூடத்தின் பெயர்...என்ற கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இப்படி அந்த வினாத்தாளின் இறுதி கேள்வி-10 இல் மேற்கண்ட 9 வினாக்களில் முதல் கேள்விக்குமட்டும் விடை எழுதிவிட்டு, உங்களது  விடைத்தாளை ஆசிரியரிடம் தந்துவிடவும் என்று குறிப்பிட்டிருக்கும். 
ஆகா 10வது கேள்விக்கு மட்டும் பதில் தருவதற்கு ஒரு நிமிடமே போதுமானது இருந்தாலும் பல மாணவர்கள் இந்த விளையாட்டை விளையாட அனைத்து 10 கேள்விகளுக்கும் பதில் எழுதியும் அல்லது பாதியில் முழுப்பதிலையும் எழுத முடியாமல் நேரம் முடிந்துவிட்டது என தோல்வியை தழுவியிருப்பார்கள். 
இந்த பயிற்சி விளையாட்டின் நோக்கம், "பதறிய காரியம் சிதறும்" என்ற கூற்றின்படி நாம் எந்தவித பதற்றமும் இல்லாமல் கேள்வித்தாளை முழுவதும் படித்துவிட்டு, பிறகு எந்த வினாக்களுக்கு பதில் முதலில் எழுதுவது, எந்தெந்த கடினமான வினாக்களுக்கு பிறகு விடை எழுதவேண்டும் என  சரியாக திட்டமிட்டு செயல்பட்டு,  எந்த எந்த கேள்விகளுக்கான விடைகளை எப்படி எழுதவேண்டும் என்று முடிவு செய்து பின்பு தேர்வு எழுதும்போது நம்மால் வெகு சுலபமாகவும், வெற்றிகரமாகவும் தேர்வை எழுதி முடிக்க முடியும். 
அதோடு பரிட்சையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடை எழுத ஆகும் நேரத்தை குறித்துக்கொண்டு அந்த நேரத்தைவிட விரைவாக எழுதி முடிக்க பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் அப்படி விரைவாக எழுதுவதால் கிடைக்கும் உபரி நேரத்தைத்தான் நாம் நமது கேள்வித்தாளை முழுவதும் படித்துப்பார்க்க பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 
என்ன சுட்டீஸ் இந்த பயிற்சி விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? இனி நீங்கள் நேரத்தோடு பரீட்சை எழுதவேண்டும் என பயமில்லாமல் தெளிவாக திட்டமிட்டு பரீட்சை எழுதி விற்றிபெறுவீர்கள் அல்லவா. வாருங்கள் நீங்கள் பரீட்சை எழுதிய உங்களது அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-10*
*(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு-1* 

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-11*
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-1
பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டிய மிகப்பெரிய கல்வி தன்னம்பிக்கை தான். தன் மீது நம்பிக்கை கொள்வது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, பிற்காலத்தில் தன்னை காத்து வந்த பெற்றோர்கள் இல்லாவிட்டாலும், பணமோ பிற சொத்துக்களோ இல்லாவிட்டாலும், தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஒரு குழந்தை மீண்டும் அனைத்தையும் பெற்று பிழைத்துக் கொள்ள முடியும்.

திரும்பத் திரும்ப ஓர் எண்ணம் உன் மனத்தில் எழுமானால் அதை செய்து முடிக்கும் திறமை உன்னுள் இருக்கிறது என்று அர்த்தம்.

இதில் 'திரும்பத் திரும்ப' என்ற வார்த்தையை நன்கு கவனியுங்கள். ஒரு மந்திரத்தை தினமும் திரும்பத் திரும்ப சொல்கிறோம். படிக்கும் காலத்தில் வாய்ப்பாட்டை திரும்பத் திரும்ப சொல்கிறோம். இப்படி திரும்பத் திரும்ப சொல்லப்படும் சொல்லானது நமது ஆழ்மனதில் பதிவாகி விடுகிறது. இப்படி ஆழ்மனதில் பதிவான விஷயங்கள் நமக்கு எப்போதும், எந்த நேரத்திலும் உதவத் தயாராக காத்திருக்கின்றன. பள்ளியில் படித்த வாய்ப்பாட்டை நள்ளிரவில் தட்டி எழுப்பி கேட்டால்கூட நாம் சொல்கிறோம் அல்லவா அதுபோல் நம் எண்ணமானது திரும்பத் திரும்ப எண்ணப்படும்போது அதன் வலிமை அதிகரி்க்கிறது. எண்ணத்தின் சக்தியும் அதிகமாகிறது. இப்படி வலிமை பெற்ற எண்ணத்தின் சக்தி நம்மிடமிருந்து வெளிச்சம்போல புறப்படுகிறது. அந்த எண்ண சக்தி புறச்சூழ்நிலையாகவும், நாம் விரும்பும் பொருளாகவும் மாறுகிறது. 

நம்மிடமிருந்து புறப்படும் வெளிச்சம் போன்ற ஒருவித சக்தி ஒரே மனநிலையைக்கொண்ட உள்ளங்களில் புகுந்து அதன் விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் ஒருமனிதனுக்குள் ஒருவித நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் தன்னம்பிக்கை என்ற குழந்தை. பின்னாளில் இக்குழந்தை வளர்ந்து ஆளாகி மனிதனை தன்னம்பிக்கை உடையவனாக மாற்றுகிறது' 

வாங்க இப்போது நாம் முதல்நிலை தன்னம்பிக்கை பயிற்சி விளையாட்டுக்கு செல்வோம். இந்த விளையாட்டில் அனைவரும் வரிசையாக நிற்கவேண்டும். இப்போது நீங்கள் 5 மாணவர் இருக்கிறீர்கள் என்றால் அனைவரும் 1,2,3,4,5 என ஒரு வட்ட வடிவில் வரிசையில் நிற்கவேண்டும். 

பயிற்சி ஆரம்பமானதும் 1,2,3,4,5,6,7,8,9,10..ன்1000 என வட்ட வரிசையில் இருக்கும் மாணவர்கள் தொடர்ந்து அடுத்து அடுத்து இருப்பவர்கள் தொடர் எண்களை சொல்லிக்கொண்டே போகவேண்டும்.
எண்கள் ஒற்றைப்படையில் வரும்போது ஒரு முறை "வெற்றி" அதுவே இரட்டைப்படை எண்ணாக இருக்கும்போது இரண்டுமுறை "வெற்றி வெற்றி" என்று சொல்லவேண்டும். அதாவது வட்ட வரிசையில் இருக்கும் முதலில் இருப்பவர் ஒன்று என்று சொல்லிவிட்டு "வெற்றி" என்று அதற்க்கு அடுத்து இருப்பவர் இரண்டு "வெற்றி வெற்றி" என்றும் அடுத்தவர் மூன்று என்று கூறிவிட்டு "வெற்றி" என்று ஒற்றைப்படை எண் ஒரு தடவை சொல்லவேண்டும். அடுத்தவர் நான்கு என்று இரட்டைப்படை எண் ஆதலால் "வெற்றி வெற்றி" என்று இரண்டு முறை சொல்லவேண்டும் இப்படியே எண்கள் தொடர்ந்து எண்ணிக்கொண்டு அந்த எண்களையும் அதோடு அந்த எண் ஒற்றைப்படை எண்ணானால் ஒரு முறை" வெற்றி" என்றும், அந்த எண் இரட்டைப்படை எண் ஆனால் இரண்டு முறை "வெற்றி வெற்றி" என்று கூறவேண்டும். இப்படி வேகமாக 1000 எண்கள் வரை எண்ணிக்கையையும் கவனமாக எண்ணியும், அதே நேரம் ஒற்றைப்படையான இரட்டைப்படை எண்களா என்பதை நினைவில் வைத்து திரும்ப திரும்ப கூறுவதால் மனதில் வெற்றி என்ற வார்த்தை ஒற்றையா இரட்டையா என பகுத்தாய்ந்து பதிந்துவிடும். பிறகு இவர்கள் தங்களது வாழ்க்கையில் எதையும் அதிவேகமாக பகுப்பாய்வு செய்து வெற்றியை மட்டுமே நினைக்கும் தன்னம்பிக்கையுடையவர்களாக மாறுவார்கள்.

இப்போது மனச்சோர்வு, மனக்கவலையை விரட்டியடித்து தன்னம்பிக்கைக்கு மனதில் இடவசதி செய்து தரவேண்டுமல்லவா? அது எப்படி என்று தெரிந்துகொள்வோம்.
வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்ினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்ினை வந்துடிச்சின்னா அந்த பிரச்சனையை தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. பிறகு அதுவே சரியாயிடும். என்ன சுட்டீஸ் சரியா?”
இது தான் எந்த பிரச்சனைக்கும் மனவியல் ரீதியுலான தீர்வு. சுட்டீஸ் உங்களுக்கு புரிந்ததா? உங்களும் மனம் நோகுமாறு உங்கள் மனதை கஷ்டப்படுத்திய, உங்களது மனதை வாட்டிய நிகழ்வு ஏதாவது எப்போதாவது நடந்ததா? அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்களேன். அல்லது உங்கள் மனம் வருந்துமாறு உங்களுக்கு ஏதாவது பயம், பிரச்சனை இருக்கிறதா?, உங்களுக்கு உதவி தேவையா? அப்படி இருந்தால் அதை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்களேன்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
அடுத்த பயிற்சி விளையாட்டின் முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-12*
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-2
கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டை விளையாடப்போகிறோம்.

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-12*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-12*

(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-2

ஹலோ சுட்டீஸ் கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டில். கீழே தரப்பட்டிருக்கும் கதையை படித்துவிட்டு மீதிக் கதையை, கதையின் முடிவை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் கேள்விக்கு என்ன பதில் பயிற்சி விளையாட்டு:-
அவர் பெயர் கோகுல் அவர் ஒரு அறிவியல் விஞஞானி. அவரை அறிவியல் மேதை என்றும் கூறுவார்கள். பலநாட்கள் ஆராய்ச்சி பணியில் இருந்த அவருக்கு அன்று அவரது ஆராய்ச்சி சோதனையில் அவருக்கு வெற்றிகிடைத்தது. ஆகவே அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். காரணம் அவர் கண்டுபிடித்த ஒரு சிறு  மாத்திரை அந்த சட்டை பொத்தான் வடிவத்திலிருக்கும் மாத்திரையின் மீது ஒரே ஒரு சொட்டு தண்ணீர் விட்டால் அந்த மாத்திரை சுமார் 2 கிலோ அளவிலான சாப்பிடும் ரொட்டியாக மாறிவிடும். அதுமட்டுமில்லை அதை சாப்பிடுபவர்களுக்கு அடுத்த 10 நாட்களுக்கு பசியே எடுக்காது. மிகப்பெரிய கண்டுபிடிப்புதான் ஆனால் மாத்திரையாக விழுங்கிவிட்டால், தொண்டையை அல்லது வயிற்றையோ பதம் பார்த்துவிடும், உயிருக்கே ஆபத்தாகக்கூட எதுவும் நடக்கலாம்.  

நாளை நடக்கவிருக்கும் ஒரு அரசு நிகழ்ச்சியில், அவரது கண்டுபிடிப்பை அரசுடைமையாக்கி அவருக்கு விருது வழங்க ஏற்பாடுகள் செய்யாப்பட்டிருந்தது. வானொலி, நாளிதழ், தொலைகாட்சி என அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் அவரது கண்டுபிடிப்பு செய்திகளிலும் பெருமையாக  பிரபல படுத்திக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போல அன்று இரவும் உணவு சாப்பிட்டதும் வயதாவதால் செரிமாணத்திற்காக இரவில் நடைப்பயிற்சி செய்வது அவரது வழக்கம். அப்படி அவர் ஒரு கடைத்தெருவின் சாலையை கடக்கும் பொது சாலையோரமாக ஒரு காட்சியைக்கண்டார். ஒரு ஏழை குழந்தையும் அவர்களது பெற்றோர்களும் வீடு வசதி இல்லாமல் சாலையோர நடைபாதை தரையில் படுத்திருந்தார்கள். அப்போது அந்த ஏழைக்குழந்தை அவரது தாயிடம்  காலையில் யாரோ பிச்சை போட்ட ஒரே ஒரு ரொட்டித்துண்டு சுவையாக இருந்தது எனக்கு பசிக்கிறது அதுபோன்ற ஒரு ரொட்டி வேண்டும் என்று கூறி அடம்பிடித்ததை பார்த்த அந்தக்குழந்தையின் தாயார். கவலைப்படாதே நாளை மறுநாள் தீபாவளி திருநாள் வருகிறது அப்போது நமக்கு சுவையான லட்டு, அதிரசம், மைசூர்பாகு, சுவையான பால்கோவா போன்ற தித்திக்கும் தின்பண்டங்கள் யாராவது தருவார்கள் அதையெல்லாம் வயிறுநிறய சாப்பிடலாம் என்ற அம்மாவின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு அப்படியே தூங்கிப்போனது.
சற்று தூரத்திலிருந்து அவர்கள் பேசியத்தைக் கேட்ுக்கொண்டிருந்த அந்த அறிவியல் விஞ்ஞானி, மறுநாள் தனது கண்டுபிடிப்பிற்கான அரசின் பாராட்டுவிழாவில், தான் செய்தது தவறான கண்டுபிடிப்பு என்பதால் எனது இந்த உணவு மாத்திரை கண்ண்டுபிடிப்பை நான் அழித்துவி்டேன் ஆகவே அரசு தரும் விருதுக்கு நான் தகுதியானவன் இல்லை. என்று கூறிவிட்டு தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

அந்த விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. அதனால் கோகுலுக்கு அரசாங்கம் அறிவித்திருந்த விருதையும் அவருக்கு அரசு தந்திருந்த விஞ்ஞானி என்ற பட்டத்தையும் ரத்து செய்தது. 

இப்போ இந்த கதையின் மீதியை சுட்டீஸ் நீங்கள்தான் கூறவேண்டும். அந்த அறிவியல் விஞ்ஞானி ஏன் அப்படி செய்து தனது சிறந்த பெயரையும் புகழையும் இழந்தார்? 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.


முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்ி விளையாட்டு தொடரின் பகுதி-13*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-14*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-14*

*(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-3*

ஹலோ சுட்டீஸ் கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டில். கீழே தரப்பட்டிருக்கும் கதையை படித்துவிட்டு மீதிக் கதையை, கதையின் முடிவை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

கற்பனைத்திறனை பெருக்கிக்கொள்ளும் கேள்விக்கு என்ன பதில் பயிற்சி விளையாட்டு:-

அம்மாவுக்கு உதவுவதற்காக நீங்களும் அம்மாவுடன் சேர்ந்து அழுக்கு துணிகளை மட்டும் துவைப்பதாகக் கொண்டால், அப்பாவின் துணி அலமாரியில் (2)-இரண்டு கால் சட்டையும், (2)-இரண்டு அழுக்கான முழுக்கை சட்டை என மொந்தம் (4) நான்கு துணிகள் இருந்தது, அம்மாவின் அலமாரியிலிருந்த துணிகள் மொத்தம் (6) ஆறு துணிகள் இருந்தது, உங்களின் அழுக்கு துணிகள் (4) நான்கும், உங்களுக்கு பிடித்த குட்டி பொம்மை அணிந்திருந்த துணி (1) ஒன்றும் இருந்தன. 

அனைத்து அழுக்கு துணிகளையும் ஒன்றாக சேர்த்து துணி துவைக்கும் எந்திரத்தில் போட்டு, துவைத்து முடித்து, ....துவைத்த துணிகளை கொடியில் உலர்த்துவதாகக் கொண்டால்...... கீழ் வரும் கேள்விகளுக்கான சரியான விடையைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

0. உங்களின் அம்மாவுக்கு நீங்கள் ஆன் பிள்ளையா அல்லது பெண் பிள்ளையா? உங்களின் பெயர், மற்றும் வயது என்ன?

1) நீங்கள் மொத்தம் எத்தனை துணிகளை துவைத்தீர்கள்?

2) நீங்கள் துவைத்து உலர்த்திய துணிகளில், ஒரு(1) துணி உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு (1) ஒரு மணி நேரம் தேவை என்றால், நீங்கள் துவைத்த மொத்த துணிகளும் உலர்வதற்கு (அல்லது) காய்வதற்கு எத்தனை மணி நேரம் தேவை?

3)துவைத்த துணிகளில் ஆண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை, பெண்கள் அணியும் துணிகள் மொத்த எண்ணிக்கை எத்தனை? 

4)நீங்கள் துவைத்த துணியில், குறைவான எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது? 

5)நீங்கள் துவைத்த துணியில், அதிக எண்ணிக்கை கொண்ட துணி யாருடையது?

சரியான விடைகளைக்கூறி சிறப்பு பரிசுகளை வெல்லுங்கள். சரியான விடைகளை "vaishalireaderscircle@gmail.comஎன்ற மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-15*
*(ஆ) மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-4*
*இது எங்களுக்கு அப்பா சொல்லிக் கொடுத்த பாடம்....*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-13*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-13*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

ஹலோ சுட்டீஸ் சிறப்பு கவனத்தையும் ககவனத்தையும், கற்பனைத்திறனையும் பெருக்கிக்கொள்ளும் பயிற்சி விளையாட்டில். கீழே தரப்பட்டிருக்கும் கதையை படித்துவிட்டு கதை/கட்டுரையின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் விடைகளை கூறி , சிறப்பு சான்றிதழ்/பரிசுகளை வெல்லுங்கள்.  

பேரக்குழந்தைகளான நீங்கள்தான் உங்களுடைய பாட்டியின் செல்லக்குட்டி.... 

பாட்டிக்கு உங்களையும், உங்களுக்கு பாட்டியையும் ரொம்ப பிடிக்கும்.... 

பாட்டிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனே உங்களின் அம்மா அவருக்கு சூடான தண்ணீர் பருகத்தந்து மேலும் அவருக்கு தேவையான முதலுதவிகளை செய்து உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் ரூபாய் 5000 முன்பணம் செலுத்தி அவசர செகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். 

மருத்துவமனை அலுவலக அதிகாரிகள் பாட்டியின் வயதுமுதிர்ந்தோர் மருத்துவ காப்பீட்டு குறித்த விவரங்களை கேட்டார்கள்???? 

எனக்கு காப்பீடு பற்றி தெரியாது என்று கூறி அப்பாவின் தொலைப்பேசி எண்ணை அவரிடம் தருகிறீர்கள்.

காப்பீட்டு திட்டமும் என்பது ஒரு சேமிப்பை போன்றதே.  

காப்பீடுகளில் பலவித காப்பீட்டு திட்டங்கள் உள்ளது. காப்பீட்டு நிறுவனங்கள் இரண்டு வகையாக பிரிக்கலாம்,  1.பொதுக் காப்பீட்டு நிறுவனம் (General insurance company), 2.மருத்துவக் காப்பீட்டு நிறுவனம் ( Medical Insurance Company) ஆகிய இரண்டுமே நமக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி (சுகாதார காப்பீடு கொள்கை) மற்றும் காப்பீட்டு சேவைகளை வழங்குகிறது. 

‘‘பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுடன் தனிநபர் விபத்துக் காப்பீடு, வாகன இன்ஷூரன்ஸ் எனப் பல வகையான பாலிசிகளையும் விநியோகம் செய்து அவற்றுக்கான சேவைகளை செய்கிறது. ஆனால், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை அதாவது மருத்துவ காப்பீட்டு சேவையை மட்டுமே தருகிறது. 

இப்போது நாம்  நம்முடைய கதைக்கு வருவோம். 

உங்களது தந்தை, உங்களின் செல்ல பாட்டியின் பெயரில் வயது முதிர்ந்தோர் சிறப்பு மருத்துவ காப்பீடு செய்திருந்தார்.  ஆகவே ஓரிருநாளில் உங்கள் பாட்டிக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை சிறப்பாக முடிந்து, அன்று பாட்டியை வீட்டிற்கு அழைத்துவர நீங்கள் மருத்துவமனைக்கு செல்கிறீர்கள்.  மருத்துவமனையில் பாட்டி மருத்துவர் தந்த உடலுறுப்புகளையும் தானம் செய்யும் விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து கையெழுத்திட்டு தலைமை மருத்துவரிடம் தந்தார். அதற்காக அந்த மருத்துவமனையிலிருந்த அனைவரும் உங்களின் பாட்டிக்கு நன்றிகூறி பாட்டியை பாராட்டினார்கள்.  

உடல் உறுப்புகள் கொடை அல்லது உடல் உறுப்புகள் தானம் என்பது தனது வாழ்க்கைக்குப்பிறகு, நோயுற்று உடலுறுப்பு பாதிக்கப்பட்ட மற்றொருவருக்கு, தமது உடல் உறுப்பைத் தானமாக அளிப்பதாகும். 

உயிருடன் இருக்கும் வரை இரத்த தானமும், இறந்த பின்பு கண்தானமும் செய்வது மிகச் சிறப்பானது என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உடலுறுப்பு தானம் என்கிற கண், இதயம், கிட்னி, எலும்புகள் என பலவித  உடலுறுப்புகளையும் தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அனைத்து இளைஞர்களிடம் ஏற்படுத்தினால் நமது இந்தியாவில் மட்டும்  10 லட்சம் பேருக்கு 5 பேர் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தால் 2200 உடலுறுப்புக்கள், 10 ஆயிரம் சிறுநீரகங்கள், 5 ஆயிரம் இதயம், 5 ஆயிரம் கல்லீரல்கள் கிடைக்கும். இதை இந்தியா மட்டுமின்றி ஆசியா கண்டம் முழுவதும் உடலுறுப்பு தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடியும்.

உடல் உறுப்புகள் தானம் செய்யும் பொருட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ் திரைப்பட நடிகர் கமலகாசன் தன்னுடைய உடல் உறுப்புகளை தான் இறந்த பிறகு தானம் செய்வதற்கு உறுதிமொழி அளித்துள்ளார். அதைப்போலவே உங்களது பாட்டியும் தான் இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறுதிமொழி அளித்துள்ளார்.

உங்குடைய செல்ல பாட்டிை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துவரும்போது பாட்டியின் மருத்துவ காப்பீட்டின்படி 90%சதவீதம் காப்பீட்டு நிறுவனும் 10%உங்களின் தந்தையிடமும் வசூலிக்கப்படு். என்று மருத்துவமனை கணக்கு அதிகாரி கூறுகிறார். 

மருத்துவமனை கணக்கு அதிகாரி மீதம் ரூபாய் 7000/- செலுத்தவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் 
1. காப்பீடு திட்டத்தின்படி, பாட்டியின் மொத்த மருத்துவ செலவு எவ்வளவு?
2. முதலுதவி என்றால் என்ன? இந்தக்கதையில் யாருக்கு முதலுதவி தேவைப்பட்டது? 
3. அவசர சிகிச்சை மருத்துவ உதவிக்கு முதலில் என்ன செய்யவேண்டும்? 
4. உங்களுக்கு தெரிந்த காப்பீடுகள் பெயர்களை குறிப்பிடுங்கள்?
5. உடல் உறுப்புகள் தானம் என்றால் என்ன? உங்களுக்கு தெரிந்த விவரங்களை குறிப்பிடுங்கள்?

சரியான விடையைக்கூறி பரிசுகளை வெல்லுங்கள்!!!!! 

சரியான விடைகளை 12-06-2018 தேதிக்கு முன்னதாக "vaishalireaderscircle@gmail.com" மின்னஞ்சலில் அனுப்பவேண்டும். அல்லது நமது வாட்சப் குழுவிலோ, முகநூல் வழியாகவோ அல்லது தொலைப்பேசி வழியாகவும் தெரியப்படுத்தலாம்.சரியான விடையையும், சரியான விடை எழுதியவர்களுக்கான பரிசுகளும் சான்றிதழ்கள் புது தில்லியிலிருந்து அஞ்சலக பதிவு தபால் வழியாக வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
  
என்ன சுட்டீஸ் உங்களுக்கு இந்த பயிற்சி விளையாட்டு பிடித்திருக்குக்கிறதா? உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள். நன்றிகளுடன் கோகி-  ரேடியோ மார்க்கோனி.


முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-14*
*(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பயிற்சி விளையாட்டு-3*

*பயிற்சி விளையாட்டு தொடர் பகுதி-15*

*இனிய காலை வணக்கம்* 🙏
*பயிற்சி விளையாட்டு தொடர் பகுதி-15*
*(ஆ) மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-4*
*இனி இராகு காலம், எமகண்டம் பார்ப்பது சுலபமே* 🙋‍♂🤷‍♂
*இது எங்களுக்கு அப்பா சொல்லிக் கொடுத்த பாடம்....*
*காலண்டரை பார்க்காமலே *ராகு காலம் எம கண்டம் *அறியும் வழி*

*பொதுவாகவே, வெளியே செல்லும்போதோ, சுபகாரியம் செய்யும் போதோ ராகு காலம், யமகண்டம் பார்ப்பது பலருக்கும் வழக்கம்.*

அந்த சமயத்தில் அவசர அவசரமாக காலண்டரைத் தேடி அன்றைய தினத்து ராகு காலம், எமகண்டத்தை பார்ப்பதே பரபரப்பானதாக இருக்கும். 
அப்படி இல்லாமல், ஒவ்வொரு நாளுக்கும் உரிய ராகு காலம், யமகண்டத்தை எளிதாக அறிந்துகொள்ள சுலபமான வழி உண்டு.

அதற்கு, கீழ்க்கண்ட வாக்கியத்தை முதலில் மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும்.

*திருநாள் சந்தடியில் வெயிலில் புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமா?*

👆இந்த வாக்கியம், ராகுகாலத்தினை அறிவதற்கானது. வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் முதல் எழுத்துகளை, கிழமைகளின் முதல் எழுத்தாக கொள்ளுங்கள்.

முதலில் திங்கட்கிழமையில் காலையில் 7.30 மணி முதல் 9 மணி வரை ராகுகாலம் அமையும். அதுமுதல் அடுத்தடுத்துள்ள 1லு மணி நேரத்திற்கு உரிய தினம் எது என்று தெரியுமா?

திங்கள்:7.30-9.00; சனி:9.00-10.30; வெள்ளி: 10.30-12.00; புதன்:12.00-1.30; வியாழன்:1.30-3.00; செவ்வாய்: 3.00-4.30; ஞாயிறு: 4.30-6.00.
மேற்கண்டவாறு மனப்பாடம் செய்து கொண்டால் காலண்டரைப் பார்க்காமலே சட்டென்று ராகு காலம் சொல்லிவிடலாம் இல்லையா?
அடுத்தது, யமகண்டத்திற்கான
வாக்கியம👇


*விளையாட்டாய் புண்ணியம் செய்தாலும் திருவருளை ஞானமும் சத்தியமும் வெளிப்படுத்தும்.*👇
யமகண்டம் வியாழக்கிழமை காலை 6 மணி முதல் 7.30 மணி வரை அமையும். இந்த வாக்கியத்தில் உள்ள முதல் எழுத்து வரிசைப்படி கிழமைகள் அடுத்தடுத்துவர, அடுத்தடுத்த 1.30 மணி நேரம் யமகண்டமாகும்.
வியாழன்: 6.00-7.30; புதன்: 7.30-9.00; செவ்வாய்: 9.00-10.30; திங்கள்: 10.30-12.00; ஞாயிறு: 12.00-1.30; சனி: 1.30- 3.00; வெள்ளி: 3.00-4.30.
*என்ன... இனிமேல் ராகுகாலம், யமகண்டம் பார்ப்பது சுலபம்தானே!*
அடுத்த பதிவில்
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்க்கோனி.
ுன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-16*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-1* (மணித்துளிகள்) மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-1. 

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-16*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-16*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-1* 

ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது.

பரிசு என்னவென்றால் -

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் உங்கள் சொந்த செலவுக்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில கண்டிஷன்கள் உண்டு.
அவை -
1) அந்த நாளில் நீங்கள் செலவு செய்யாத பணம் உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2) உங்கள் பணத்தை நீங்கள் வேறு அக்கவுண்டிற்கு மாற்ற முடியாது.
3) அதை செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு
4) ஒவ்வொரு நாளும் விடியும்போது உங்கள் வங்கிக் கணக்கில் அந்த நாளின் செலவிற்காக 86400 ரூபாய் வரவு வைக்கப்படும்
5) எப்போது வேண்டுமானாலும் வங்கி இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பு இல்லாமல் நிறுத்திக்கொள்ளலாம்.
6) வங்கி - "முடிந்தது கணக்கு" என்று சொன்னால் அவ்வளவுதான். வங்கிக் கணக்கு மூடப்படும், மேற்கொண்டு வரவு வைக்கப்படமாட்டாது.

இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு பிடித்த எல்லாம் வாங்குவீர்கள் இல்லையா?

உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுக்கும் 

வாங்கித்தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம்

இல்லாதவர்களுக்காகவும் செலவு செய்வீர்கள். ஏனென்றால்
அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால் - அப்படித்தானே? முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?

உண்மையில் இது ஆட்டமில்லை 

- நிதர்சனமான உண்மை

ஆம்

நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம் தான் அதை கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக்கணக்கின் பெயர் - காலம். 

ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும் போது வாழ்க்கையின் அதியுன்னத பரிசாக 86400 வினாடிகள்(நேரம்) நமக்கு வழங்கப்படுகிறது.

இரவு தூங்கப் போகும் போது நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேமித்து வைக்கப் படுவதில்லை. 

அன்றைய பொழுது நாம் வாழாத வினாடிகள் தொலைந்தது தொலைந்தது தான். 

நேற்றைய பொழுது போனது போனது தான். 

ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86400நொடிகள் காலம் நமக்காக நேரத்தை வாரிவழங்குகிறது. 

எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வங்கி உங்கள் கணக்கை முடக்க முடியும்.

அப்படியிருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உண்மையில் 86400வினாடிகள் என்பது அதற்கு சமமான அல்லது அதற்கும் மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா? 

இதை ஞாபகம் வைத்துக்கொண்டால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடிக் கழிக்க மாட்டோமா?

காலம் நாம் நினைப்பதை விட வேகமாக ஓடிவிடும். எனவே உங்களின் , உங்களுக்கே உரித்தான நேரத்தை பொன் போல பாதுகாத்து, அவற்றை சிறப்பாக உபயோகித்து. ....சந்தோஷமாக இருங்கள்...  சுற்றியுள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள் - வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்...... 

என்ன சுட்டீஸ்.... நேரத்தின் மதிப்பு, பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது என்பதை தெரிந்துகொண்டீர்களா?

வாருங்கள் நமது நாளை மறுநாள் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டில் சிந்திப்போம்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3*

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.