பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-4
(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2
நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்களுக்குத் தொடர்புடைய பொருளையோ அல்லது ஒரு ஓவியத்தையோ அல்லது ஏதாவது பாடலையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று பார்ப்போம்.
@நாம் இப்போது ஒரு அறிவியல் விதியை மனப்பாடம் செய்யா உதாரணமாக எடுத்துக்கொள்வோம்.
நியூட்டன் முதல் விதி:- ஒரு பொருளின் மீது புறவிசைகள் செயல்படாதவரை, அப்பொருளானது தன்னிச்சையாகத் தனது இயக்க நிலையை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாத பண்பு அதன் நிலைமம் (Inertia) எனப்படும். இதனால் முதல் விதியை நிலைம விதி எனலாம்.
இந்த விதியை அப்படியே ஒரு ஓவியமாக வரையவேண்டும், ஒரு ஓவியம் அல்லது புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம்! என்பார்கள். A picture is worth a thousands of words! அதனால்தான் எந்த ஒரு ஓவியம் அல்லது புகைப்படம் நமது கண்களின் வழியே நமது மூளையில் மனப்பாடமாக பதிந்துவிடும்
முதலில் 1.சதுரமான ஒருபொருள் வரையவும் 2.அதன் மீது புறவிசைகள் செயல்படாததை இடம் வலமாக அம்புக் குறிகளை பயன்படுத்தி ஓவியம் வரையவும். 3.அந்த பொருள் தனது இயக்க நிலை அல்லது ஓய்வு நிலையை மாற்றிக் கொள்ளாது என்பதை சதுர பொருளின் மேலும் கீழும் அம்புக்குறிகள் வரைந்து நகரவே நகராது என்பதை ஓவியத்தில் கொண்டுவரவேண்டும். இப்போது நீங்கள் வரைந்த ஓவியத்தை பார்த்தாலே 1,2,3 என நியூட்டன் முதல் விதி எளிமையாக ஞாபகத்தில் வரும். (உதாரண வரைபடத்தை பார்க்கவும்)
@ நிறைய தகவல்களை மனப்பாடமாக வைத்திருப்போர் நல்ல முறையில் முடிவுகள் எடுக்கும் திறமை வாய்ந்தோராக உள்ளனர் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் முடிவெடுக்கும் திறமைக்கு அவரது சிறந்த மனப்பாடத்திறமை காரணமாகக் கூறப்படுகின்றது.
@ பாடல் முறையில் அமைந்திருக்கும் கணித சூத்திரங்கள், சிற்ப சாத்திரங்கள், வர்ம சூத்திரங்கள், களரி அடி முறைகள் என பலவும் மனப்பாடம் செய்ய முற்காலத்தில் சுலபமாக இருந்ததால் நினைவுக்குக் கொணர எளிதாக அமைந்தன. அதனால படிக்கும் பாடங்களைக்கூட பாடலாக பாடி எளிமையாக மனப்பாடம் செய்யலாம். நான் படிக்கும்போது ஆங்கில வில்லியம் வாட்ஸ் வர்த்த( william wordsworth poems ) அவர்களின் பாடலை அப்படியே சினிமாப்பாடல் மெட்டில் பாடி மற்ற மாணவர்களை அசத்தியும், எனது ஆசியரிடம் சபாஷ் என்கிற நல்ல பெயரையும் வாங்கினேன்.
வாருங்கள் சுட்டீஸ் இப்போது நாம் மனப்பாடம் செய்ய உதவும் பயிற்சி விளையாட்டு-2 விளையாட செல்வோம்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment