நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : *பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

.

.

Friday, March 29, 2019

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-17*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-2* 

நேர மேலாண்மை பயிற்சி:- 

ஒரு மாணவனாக படிப்பில் நீங்கள் செலுத்தும் கவனம்,படிப்தற்கு ஒதுக்கப்படும் நேரம்,படிக்க வேண்டிய பாடங்களை சிறிது சிறிதாக உரிய காலகட்டத்தில் முடித்தல் ,திறம் பட திட்டமிடப்பட்ட நேர மேலாண்மை ஆகியவை உங்கள் இலக்கினை நோக்கி பயணப்பட உங்களுக்கு உதவும்.

திட்டமிட்ட பணிகளை பட்டியலில் உள்ளபடி முன்னுரிமை கொடுத்து செயல் படுத்தி வெற்றி பெற வேண்டும். "ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்" என்ற திருக்குறளுக்கு ஏற்ப காலத்தையும், இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால் பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

உதாரணமாக ஒரு மணி நேரத்தில் முடிக்கவேண்டிய வெவ்வேறுவகையான 10 வேலை தரப்பட்டது, அல்லது 10 வினாக்கள் மனப்பாடம் செய்யவேண்டும் என்று எடுத்துக்கொள்வோம் அந்த 10 வேலை அல்லது 10-வினாக்களில் 4 கடினமானவை மீதம் 6 மிக மிக எளிமையானது என்றால் நாம் எப்படி வேலைகளை அல்லது மனப்பாடம் செய்யும் கேள்விபதிலை சரியான நேரத்தில் முடிக்கமுடியும் என்பதுதான் இன்றய பயிற்சி விளையாட்டு. 

இப்போது நாம் பயிற்சி விளையாட்டிற்கு வருவோம் ஒரு மணிநேரத்தை 4 பகுதிகளாக பிரித்தால் அதில் ஒரு பகுதி 15நிமிடம் ஆகவே ஒவ்வொரு 15 நிமிடத்தில் எத்தனை வேலை அல்லது எத்தனை கேள்விக்கான பதில் மனப்பாடம் செய்து முடித்துவிட்டீர்கள் என்பது போட்டி. 

இந்த போட்டியில் வெற்றிபெறவேண்டுமானால், நாம் முதலில் மிக மிக எளிமையான 6 வேலைகளை செய்து முடிக்க முயற்சி செய்யவேண்டும் அப்படி செய்தால் முதல் 15 நிமிடத்தில் 3 அல்லது 4 வேலையை நாம் செய்து முடித்து வெற்றி என்ற இலக்கை நோக்கி எளிமையாக முன்னேறமுடியும். அடுத்த 15 நிமிடத்தில் அநேகமாக நாம் 6 எளிய வேலை அல்லது கேள்விக்கான பதிலையும் ஒரு கடினமான வேலை அல்லது கேள்வி பதிலையும் முடித்திருப்போம். ஆகவே கிட்டத்தட்ட 7 வேலை அல்லது கேள்விகளுக்கு பதில் எழுதி முடித்துவிட்டோம் என்கிற தன்னம்பிக்கையின் பலத்தில் மீதமிருக்கும் கடினமான வேலை அல்லது கேள்வி பதிலை மூன்றாவது 15 நிமிடத்திலேயே... கிட்டத்தட்ட அனைத்தையும் 45 நிமிட நேரத்திலேயே நாம் முடித்துவிட்டோம் என்பது ஒரு வெற்றி சாதனையாக இருக்கும்.

இதையே நாம் கடினமான 4 வேலை அல்லது கேள்விபதிலை முடித்துவிட்டு பிறகு 6 எளிமையான வேலை அல்லது கேள்விபதில் முடிக்கலாம் என்று நினைத்தால் முதல் 15நிமிடத்தில் ஒரு வேலை அல்லது ஒரு கேள்விக்கு கூட பதிலெழுதி மனப்பாடம் செய்து முடித்திருப்போமா என்றால் சந்தேகமே. அப்படி அந்த முதல் 15 நிமிட நேரத்திலேயே, நீண்ட நேரமாகிவிட்டது என்கிற பதற்றத்தில் நம்மால் முழுமையாக 10 வேலை அல்லது கேள்விபதில் பனப்பாடம் செய்யமுடியாமல் தோல்வியை தழுவியிருப்போம்.

ஆகவே எந்த வேலையானாலும் அல்லது மனப்பாடம் செய்யும் கேள்விபதிலானாலும் அதை மேற்க்கூறியவாறு எளிய வேலை, கடின வேலை என்று பிரித்து, எளிமையானவைகளை முதலில் செய்து முடித்து, நேர மேலாண்மை முறையில் ஒவ்வொரு வேலைக்கும் தேவையான நேரம் ஒதுக்கி சரியான நேரத்தில் நாம் செய்கிறோமா? என்று சரிபார்த்துக்கொண்டு, செய்யப்படும் எந்த வேலையும்  தோற்றுப்போனதாக சரித்திரமில்லை.  

என்ன சுடீஸ் இன்றய இந்த பயிற்சி விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? எப்போதும் நீங்கள் நினைத்ததை சாதித்துவிட்டதாகவும், உங்கள் இலக்கினை அடைந்து விட்டதாக அடிக்கடி கனவு காணுங்கள். நிஜத்தில் அதற்கு தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் சாதனை என்று செய்த செயல்களுக்காக யாரும் உங்களை பாராட்டவில்லை என்றால் அதற்காக கவலைப்படாமல் நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைக்கும்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி 

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3* வியாபார கணக்கு விளையாட்டு

No comments:

Post a Comment