நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : மாணவியை பேரிடர்(Disaster) பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார்...

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

.

.

Thursday, July 12, 2018

மாணவியை பேரிடர்(Disaster) பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார்...

நண்பர்களே தோழர்களே, வணக்கம்.

தாய்லாந்தில் உள்ள குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரையும் அந்நாட்டு ராணுவ பேரிடர் மேலாண்மை (Disaster) குழு பத்திரமாக மீட்டெடுத்த சத்தம் ஓய்வதற்குள் ....

*கோவை தனியார் கல்லூரியில் பேரிடர்(Disaster) பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசு ஆலோசனை என தகவல்* 

மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பயிற்சிப்பட்டறையில் 2012 வருடமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் Hazard என்ற இடர் மேலாண்மை எத்தனை முக்கியமானது என்பது குறித்து பல விழிப்புணர்வு நிலைகளை குறிப்பிட்டிருந்தேன். Hazard என்ற இடர் மேலாண்மை வேதியியல் பொருட்களை கையாள்வதில் மற்றும்  Disaster என்ற பேரிடர் மேலாண்மை, அதனால் ஏற்படும் இடர்களிலிருந்து எப்படி அதை எதிர்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பன போன்ற  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். 

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பயிற்சியாளரின் ஆர்வக்கோளாறு மற்றும் போதிய அனுபவமின்மையையும், அதோடு  உரிய அரசு மற்றும் காவல்துறை,  மருத்துவக்குழு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது என பல விவரங்களை முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. 

ஒருமுறை கேரளாவில் நடந்த இட்டிலி தின்னும் போட்டியிலும், தில்லி தல்கோத்ரா அரங்கில் ஏற்பட்ட மாம்பழம் சாப்பிடும் போட்டியிலும் நடந்த உயிரிழப்பு சம்பவங்களிலும் இதே தவறை சுச்சுட்டிக்காட்டி அந்த துயர சம்பவத்தைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.  http://programmedirector.blogspot.com/2014/10/blog-post.html

$நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.

நிகழ்ச்சியின் போட்டியாலருக்கோ அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவருக்கோ எந்தவித ஆபத்தும் நேராதபடி அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

1. காவல்துறை மற்றும் தீ அனைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சி பற்றி முகூட்டியே தெரிவித்து, அதற்க்கான அனுமதி பெறுவது அவசியம்.

2. முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் மருத்துவ நிலையத்தின் தொலைப்பேசி மற்றும் முதலுதவி சேவை பெற தேவையான அனைத்து விவரங்களையும் பெற்று தயார்நிலையில் வைத்திருப்பது முகவும் அவசியம்.  

3. போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், வசிப்பிடம் போன்ற விவரங்களுடன் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பவர்கள் முழுமையாக உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் போட்டியாளருக்கு தெரியப்படுத்தி, அந்த  விவரங்களை போட்டியாலரிடமிருந்து எழுத்துபூர்வமாக எழுதி பெறுவது மிக முக்கியமான ஒன்று.     

$ நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும்  சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

$ நிகழ்ச்சியில் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொல்வதகவோ அல்லது தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தால், நிகழ்ச்சியை அரசு முறைப்படி நடத்தவேண்டும் ..  அதாவது நிகழ்ச்சியில் தேசியகீதம் மற்றும் தேசப்பற்று பாடல்கள் முறைப்படி அமையுமாறும் அரசாங்க வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிகழ்ச்சி அமையுமாறு ஏற்ப்பாடு செய்வதோடு,  அந்த விதி முறைகள் சரிவர கடைபிடிக்குமாறு நிகழ்ச்சியை நடத்திச்செல்லுவதும் மிக முக்கிகம்.

$ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்கள்,  பார்வையாளர்கள் அல்லது பொதுமக்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டியது அவசியம்.

இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாம்..... ஒரு நிகழ்ச்சி நிர்வாகிக்கே இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மையாளர் மேலும் விழிப்புடன் இருக்கவேண்டியது எத்தனை அவசியம்.    
  
பேரிடர் மேலாண்மை Disaster Management:- 


பேரிடர் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும் மற்றும் பள்ளி கல்லூரி  ஆசிரியர்களிடத்தும், மாணவர்களிடத்தும் ஏற்படுத்துதல். இடர் மற்றும் பேரிடரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவைப்படும் உத்திகளை அறிதல் பேரிடர் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் உயிர் காத்தல் போன்றவை அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் பேரிடர்” என்கிறோம்.

பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளைச் செயல்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்.

DM 1 பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகள்
பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்
பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்
தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல்
பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்தல் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை வகுத்தல் உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்

DM 2 எச்சரிக்கை
எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளல்
வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்
உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

DM 3 பாதிப்பு ஏற்படுத்தும் நிலை
பேரிடர் தாக்க இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுதல்
உயிர், உடல் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது பற்றிய பயம் மற்றும் பீதி அடையாதிருத்தல்
பதற்ற நிலை, பரிதவிப்பு நிலையைத் தவிர்த்தல்
அபாய அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை மேற்கொள்ளல்
பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல்

DM 4 பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் (Rescue operation)
தாமதமின்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் மீட்புப் பணிக் குழுவினர்களுக்கு உதவுதல்.
பேரிடர்களில் சிக்குண்டு தவிப்பவர்களைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை பாதுகாப்பு கருவிகள், உணவு, உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்.
மீட்கப்பட்டவர்களுக்கு முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக முதலுதவி உடனடி மருத்துவச் சிகிச்சையளித்தல்.

DM 5 பேரிடருக்குப்பின் மேற்கொள்ளப்படும் மீட்பு உதவிகள் (Rescue)
ஒருங்கிணைந்து செயல்படுதல்.
தற்காலிகப் புகலிடம் அமைத்துத் தேவையான பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்.
மின்சாரவசதி, தொலைதொடர்புக் கருவிகளை அமைத்துக் கொடுத்தல் சேத மதிப்பீடு செய்தல்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு I பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுத் தருதல்.

DM 6 புனர்வாழ்வளித்தல் (Rehabitation)
பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல்
பாதிப்படைந்தவர்கள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நிலைப்பாட்டை அடையத் தேவைப்படு வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல்

DM 7 மறுசீரமைத்தல்:-
பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளானவை மீண்டும் தாக்காதவாறு மறுசீரமைத்தல்.
இடிந்த கட்டடங்களைப் புதுப்பித்தல், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைச் சீரமைத்தல்.

DM 8 பேரிடரைத் தவிர்க்க நீண்டகாலத் திட்டம் தீட்டுதல் (Long term Planning)
பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கான குறிக்கோள், செயல் திட்டம், தேவை செலவினங்கள்முதலியவற்றைத் தெளிவாக வரையறுத்தல்
பேரிடர்கள் ஏற்படும்முன், ஏற்படும்போது, ஏற்பட்டபின் மேற்கொள்ள வேண் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகளை வரையறுத்தல்.
பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, முன்னெச்சரிக்கை உத்திகளைத் திட்ட சேதாரத்தை மதிப்பீடு செய்தல்.
பேரிடர், மீண்டும் தாக்கும் இடங்களை இனங்கண்டு கொள்ளல்.
பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவைப் பரப்ப ஒருங்கிணைப்பு செயல்திட்டம் தீட்டுதல்.

DM 9 திட்டச் செயலாக்கம்:-
பேரிடர் தவிர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
மத்திய, மாநில, மாவட்ட வட்டார கிராம மற்றும் உள்ளூர் இடர் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தல். 
பேரிடர் தவிர்ப்புத் திட்டச்செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்துதல்.

அனைத்திற்கும் மிக முக்கியம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளவேண்டும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

1 comment:

  1. பேரிடர் மேலாண்மை பயிற்சியிலேயே விபத்து கண்டிக்கத்தக்கது

    ReplyDelete