நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : *பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20* *(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Monday, July 9, 2018

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20* *(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கங்கள். இன்றய பயிற்சி விளையாட்டில் சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி.

நமது இயல்பு வாழ்க்கைக்கு, உழைப்பு, உணவு, அத்தியாவசிய தேவைகளாக இருக்கின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும், நம்முடைய ஆரோக்கியத்தை வலுவூட்டுகின்றன. ஆனால், காலையில் எழும் போது சோம்பல் தலைதூக்குகிறது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று, இன்றைய காலையை கடத்துகிறோம். இதனால், நமது சுறுசுறுப்பு குறைகிறது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது.
உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. 

விளையாட்டு இதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கம், இறுக்கம், அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையை தருகின்றன.நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது. எனவே, உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்துக்கு மாற்றாக, நடைபயணம், நடைபயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 

நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நீச்சல், வேக ஓட்டம், மெது ஓட்டம், உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்வது, தோட்ட வேலை, நாட்டியம் ஆகியவை, மிகச்சிறந்த பயிற்சிகளாக உள்ளன.  

நகர்ப்புறங்களில் வீட்டு வளாகத்தில், வீட்டு மாடி, பால்கனி பகுதியில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம் 

நகரத்தில் சுகந்திரமான விளையாடும் இடம் பார்ப்பது அரிதாகிவிட்டது. வீட்டிற்கு வெளியே விளையாட செல்லலாம் என்றாலே... கவனக்குறைவாக ஏதாவது விபத்து நேர்ந்துவிடுமோ என்று பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது, சிறுவர்கள் விளையாட்டில் ஏதாவது கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுமோ என்ற பயம். அதனால் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுப்பாமல் வீட்டிற்குள்ளாகவே விளையாட சொல்வது. 
வாழ்க்கையே ஒரு சதுரங்கம்தான்! சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு:-

நமது இலக்கை அடைய பொறுமை, நிதானம், சரியான திட்டமிடுதல், விடாமுயற்சி, சுயசிந்தனை, தன்னம்பிக்கை போன்றவை தேவை. இத்தகைய பண்புகளை வளர்க்க சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு உதவும்.
நமது வாழ்வில் சந்திக்கும் இடர்களை களைவது எப்படி?

நம்மை சுற்றி உள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது?

தடைகளை கடந்து எவ்வாறு இலக்கை அடைவது?

சுயமாக சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது?

இலவசமாக கிடைக்கும் காற்றை பயன்படுத்தி மனஅழுத்தத்தை களைவது மற்றும் மூளையை நன்றாக செயல்பட வைப்பது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலும், பயன்களும் நமது பயிற்சி விளையாட்டில் உள்ளது.  

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம்:-

பூப்பறிக்க வருகிறோம் என்று ஒரு பாட்டை பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டு ஒன்று இருக்கிறது. அந்த பயிற்சி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க இன்று அந்த விளையாட்டை நாம் விளையாடுவோமா?.

சிறுமியர் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும் குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர். 

பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ, எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச் சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர் தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும் உண்டு. 

பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப்படுவதில்லை. அவர்கள் பூ பறிக்கும் செயலை மட்டும் செய்வார்கள். 

முதலில் பூப்பறிக்கும் குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை நோக்கி, "பூப்பறிக்க வருகிறோம்", "பூப்பறிக்க வருகிறோம்" என்று பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" என்று பாடிக் கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும் குழுவினர் "தேவி பூவைப் பறிக்கிறோம்", "தேவி பூவைப் பறிக்கிறோம்" என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று வருவர்.

இறுதியில், பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன் அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர். குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும் குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும் வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள் என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)

பூக்களின் பெயர்களை அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல், இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு ஆடப்பெறும்.

என்ன சுட்டீஸ் இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? 

மீண்டும் நாளை மறுநாள் வேறு ஒரு பயிற்சி விளையாட்டில் சந்திப்போம், நன்றி வணக்கம் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*


1 comment:

  1. பயிற்சி விளையாட்டு நன்று பாராட்டுகள்

    ReplyDelete

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.