நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : July 2018

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Thursday, July 12, 2018

மாணவியை பேரிடர்(Disaster) பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார்...

நண்பர்களே தோழர்களே, வணக்கம்.

தாய்லாந்தில் உள்ள குகையில் 17 நாட்களாக சிக்கி தவித்த கால்பந்து பயிற்சியாளர் மற்றும் சிறுவர்கள் 12 பேர் அனைவரையும் அந்நாட்டு ராணுவ பேரிடர் மேலாண்மை (Disaster) குழு பத்திரமாக மீட்டெடுத்த சத்தம் ஓய்வதற்குள் ....

*கோவை தனியார் கல்லூரியில் பேரிடர்(Disaster) பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசு ஆலோசனை என தகவல்* 

மாணவியை பயற்சி என்ற பெயரில் கொன்று விட்டதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. யார் அனுமதி அளித்தது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் உயர்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நமது நிகழ்ச்சி தயாரிப்பாளர் பயிற்சிப்பட்டறையில் 2012 வருடமே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் Hazard என்ற இடர் மேலாண்மை எத்தனை முக்கியமானது என்பது குறித்து பல விழிப்புணர்வு நிலைகளை குறிப்பிட்டிருந்தேன். Hazard என்ற இடர் மேலாண்மை வேதியியல் பொருட்களை கையாள்வதில் மற்றும்  Disaster என்ற பேரிடர் மேலாண்மை, அதனால் ஏற்படும் இடர்களிலிருந்து எப்படி அதை எதிர்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்பன போன்ற  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  மிக மிக முக்கியப்பங்கு வகிக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தேன். 

பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவம் பயிற்சியாளரின் ஆர்வக்கோளாறு மற்றும் போதிய அனுபவமின்மையையும், அதோடு  உரிய அரசு மற்றும் காவல்துறை,  மருத்துவக்குழு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது என பல விவரங்களை முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. 

ஒருமுறை கேரளாவில் நடந்த இட்டிலி தின்னும் போட்டியிலும், தில்லி தல்கோத்ரா அரங்கில் ஏற்பட்ட மாம்பழம் சாப்பிடும் போட்டியிலும் நடந்த உயிரிழப்பு சம்பவங்களிலும் இதே தவறை சுச்சுட்டிக்காட்டி அந்த துயர சம்பவத்தைத்தான் குறிப்பிட்டிருந்தேன்.  http://programmedirector.blogspot.com/2014/10/blog-post.html

$நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.

நிகழ்ச்சியின் போட்டியாலருக்கோ அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவருக்கோ எந்தவித ஆபத்தும் நேராதபடி அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

1. காவல்துறை மற்றும் தீ அனைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சி பற்றி முகூட்டியே தெரிவித்து, அதற்க்கான அனுமதி பெறுவது அவசியம்.

2. முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் மருத்துவ நிலையத்தின் தொலைப்பேசி மற்றும் முதலுதவி சேவை பெற தேவையான அனைத்து விவரங்களையும் பெற்று தயார்நிலையில் வைத்திருப்பது முகவும் அவசியம்.  

3. போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், வசிப்பிடம் போன்ற விவரங்களுடன் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பவர்கள் முழுமையாக உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் போட்டியாளருக்கு தெரியப்படுத்தி, அந்த  விவரங்களை போட்டியாலரிடமிருந்து எழுத்துபூர்வமாக எழுதி பெறுவது மிக முக்கியமான ஒன்று.     

$ நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும்  சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

$ நிகழ்ச்சியில் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொல்வதகவோ அல்லது தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தால், நிகழ்ச்சியை அரசு முறைப்படி நடத்தவேண்டும் ..  அதாவது நிகழ்ச்சியில் தேசியகீதம் மற்றும் தேசப்பற்று பாடல்கள் முறைப்படி அமையுமாறும் அரசாங்க வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிகழ்ச்சி அமையுமாறு ஏற்ப்பாடு செய்வதோடு,  அந்த விதி முறைகள் சரிவர கடைபிடிக்குமாறு நிகழ்ச்சியை நடத்திச்செல்லுவதும் மிக முக்கிகம்.

$ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்கள்,  பார்வையாளர்கள் அல்லது பொதுமக்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டியது அவசியம்.

இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாம்..... ஒரு நிகழ்ச்சி நிர்வாகிக்கே இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றால் பேரிடர் மேலாண்மையாளர் மேலும் விழிப்புடன் இருக்கவேண்டியது எத்தனை அவசியம்.    
  
பேரிடர் மேலாண்மை Disaster Management:- 


பேரிடர் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும் மற்றும் பள்ளி கல்லூரி  ஆசிரியர்களிடத்தும், மாணவர்களிடத்தும் ஏற்படுத்துதல். இடர் மற்றும் பேரிடரில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள தேவைப்படும் உத்திகளை அறிதல் பேரிடர் காலத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் உயிர் காத்தல் போன்றவை அனைவருக்கும் தெரிந்திருக்கவேண்டும்.

இயற்கைச் சீற்றங்களினாலும், மனிதத் தவறுகளினாலும் பல்வேறு இடர்களும் பேரிடர்களும் ஏற்படுகின்றன. இடர் (Hazard) என்பது, அபாயகரமானதாக உணரக்கூடிய ஒரு நிகழ்வு. அந்நிகழ்வில் மனிதனின் அன்றாட வாழ்க்கைப் பாதிப்பு, உயிரிழப்பு, சுகாதாரக் கேடுகள், உடைமைகளின் சேதம், சமுதாய மற்றும் பொருளாதாரச் சீர்கேடு, சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த இடரானது, உச்சநிலையை அடையும்போது பேரிடராக (Disaster) மாறுகிறது. மக்களின் ஆற்றலுக்கு அப்பாற்பட்டுப் பெருமளவில் உயிர்ச்சேதத்தையும் பொருட்சேதத்தையும் ஏற்படுத்தும் ஒரு நிகழ்வைப் பேரிடர்” என்கிறோம்.

பேரிடர்களின் தன்மைகளை அறிந்து, அவற்றால் ஏற்படும் தீமைகளிலிருந்து விடுபட உதவும் உத்திகளைச் செயல்படுத்துவதே பேரிடர் மேலாண்மை ஆகும்.

DM 1 பேரிடர் தாக்கத்தை எதிர்கொள்ளத் தேவைப்படும் முன்னேற்பாடுகள்
பேரிடரின் தன்மை, தீவிரம், தாக்கும் இடங்கள் மற்றும் இழப்புகளை அறிதல்
பேரிடரைத் தவிர்க்க இயற்கை வளங்களைச் சேகரித்தல் மற்றும் எதிர்கொள்ள மனித வளங்களை ஆயத்தப்படுத்துதல்
தகவல் தொடர்புகளை மேம்படுத்தி வைத்தல்
பாதுகாப்பு அமைப்புகளை ஏற்பாடு செய்தல் பெண்கள், குழந்தைகள் மற்றும் இயலாதோர்களைக் காக்கும் உத்திகளை வகுத்தல் உணவுப் பொருள்கள், எரிபொருள்கள் (சமையல் வாயு), குடிநீர், உயிர்காக்கும் மருந்துகள், துணிமணிகள், முதலுதவிப் பொருள்கள் முதலியவற்றைப் பேரிடர் காலங்களில் சேகரித்து வைத்தல்

DM 2 எச்சரிக்கை
எச்சரிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்ளல்
வதந்திகளைப் பேரிடர் காலத்தில் நம்பாதிருத்தல்
உரிய முன்னெச்சரிக்கைகளை உடனடியாகப் பின்பற்றுதல் இதனால் உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஆகியவை வெகுவாகக் குறையும்)

DM 3 பாதிப்பு ஏற்படுத்தும் நிலை
பேரிடர் தாக்க இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுதல்
உயிர், உடல் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பது பற்றிய பயம் மற்றும் பீதி அடையாதிருத்தல்
பதற்ற நிலை, பரிதவிப்பு நிலையைத் தவிர்த்தல்
அபாய அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு உத்திகளை மேற்கொள்ளல்
பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவுப்படுத்துதல்

DM 4 பேரிடரின்போது மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் (Rescue operation)
தாமதமின்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுதல் மற்றும் மீட்புப் பணிக் குழுவினர்களுக்கு உதவுதல்.
பேரிடர்களில் சிக்குண்டு தவிப்பவர்களைக் காப்பாற்ற பாதுகாப்புப் படை பாதுகாப்பு கருவிகள், உணவு, உயிர்காக்கும் மருந்துகளைப் பயன்படுத்துதல்.
மீட்கப்பட்டவர்களுக்கு முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் மூலமாக முதலுதவி உடனடி மருத்துவச் சிகிச்சையளித்தல்.

DM 5 பேரிடருக்குப்பின் மேற்கொள்ளப்படும் மீட்பு உதவிகள் (Rescue)
ஒருங்கிணைந்து செயல்படுதல்.
தற்காலிகப் புகலிடம் அமைத்துத் தேவையான பொருள்களைத் தொடர்ந்து வழங்குதல்.
மின்சாரவசதி, தொலைதொடர்புக் கருவிகளை அமைத்துக் கொடுத்தல் சேத மதிப்பீடு செய்தல்.
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு I பிற தொண்டு நிறுவனங்கள் மூலம் பெற்றுத் தருதல்.

DM 6 புனர்வாழ்வளித்தல் (Rehabitation)
பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல்
பாதிப்படைந்தவர்கள் மீண்டும் தன் பழைய வாழ்க்கை நிலைப்பாட்டை அடையத் தேவைப்படு வசதிகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தருதல்

DM 7 மறுசீரமைத்தல்:-
பேரிடர்களால் பாதிப்பிற்குள்ளானவை மீண்டும் தாக்காதவாறு மறுசீரமைத்தல்.
இடிந்த கட்டடங்களைப் புதுப்பித்தல், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைச் சீரமைத்தல்.

DM 8 பேரிடரைத் தவிர்க்க நீண்டகாலத் திட்டம் தீட்டுதல் (Long term Planning)
பேரிடர் மேலாண்மைக் குழுக்களுக்கான குறிக்கோள், செயல் திட்டம், தேவை செலவினங்கள்முதலியவற்றைத் தெளிவாக வரையறுத்தல்
பேரிடர்கள் ஏற்படும்முன், ஏற்படும்போது, ஏற்பட்டபின் மேற்கொள்ள வேண் நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைந்த முன்னேற்பாடுகளை வரையறுத்தல்.
பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, முன்னெச்சரிக்கை உத்திகளைத் திட்ட சேதாரத்தை மதிப்பீடு செய்தல்.
பேரிடர், மீண்டும் தாக்கும் இடங்களை இனங்கண்டு கொள்ளல்.
பேரிடர்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வியறிவைப் பரப்ப ஒருங்கிணைப்பு செயல்திட்டம் தீட்டுதல்.

DM 9 திட்டச் செயலாக்கம்:-
பேரிடர் தவிர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
மத்திய, மாநில, மாவட்ட வட்டார கிராம மற்றும் உள்ளூர் இடர் பாதுகாப்புக் குழுக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளித்தல். 
பேரிடர் தவிர்ப்புத் திட்டச்செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்குத் தொடர்ந்து ஏற்படுத்துதல்.

அனைத்திற்கும் மிக முக்கியம் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள்  மேற்கொள்ளவேண்டும் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

Wednesday, July 11, 2018

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18* வியாபார கணக்கு விளையாட்டு:- MBA முருங்கைக்காய் வியாபாரம்:-

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-18*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-3*  வியாபார கணக்கு விளையாட்டு:- MBA முருங்கைக்காய் வியாபாரம்:-
  
காண்கு, நாக்கு என்ற இரண்டு நபர் முருங்கைக்காய்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்ய முனைந்தனர். 

இருவருக்கு தலா ருபாய் 10/- வியாபாரம் செய்வதற்கு மூலதனமாக தரப்பட்டது. அந்த 10 ரூபாயை வைத்து ஒரே நாளில் முருங்கைக்காய் வாங்கி விற்று யார் அதிகம் லாபம் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றிபெற்றவர்கள். என முடிவுசெய்து அன்றய மாலை  6மணிக்கு இருவரும் ஒன்றுகூடி போட்டியின் இறுதியை  முடிவுசெய்யலாம் என்று முடிவானது.

இருவரும் அவர்களிடம் உள்ள ரூபாய் 10 ஐ வைத்து,  தலா 20 முருங்கைக்காய்களை வாங்கி அவற்றை விற்று லாபம் சம்பாதிக்க வெவ்வேறு பகுதிக்கு புறப்பட்டார்கள். அதாவது ஒரு முருங்கைக்காயின் கொள்முதல் விலை  0.50 பைசா.  
நாக்கு:- இவர் இனிமையாக பேசக்கூடியவர் தனது பேச்சாலேயே அனைவரையும் கவர்ந்த இழுக்கக்கூடியவர் அதோடு இவர் எதையும் வேகமாக செய்யும் எண்ணம் கொண்டவர் அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை ரூபாய் ஒன்று (1.00) என கூவி விற்கத்தொடங்கினார். முதல் ஒருமணிநேரத்தில் நான்கு  4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே அவர் தமது முந்தய விலையை சற்று குறைத்து 0.75 காசுகள் என விலை குறைத்து விப்பாணை என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் எட்டு (8) காய்கள் விற்றுத் தீர்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்தில் மீண்டும் விலை குறைத்து 0.50 காசுகள் என, "வாங்கிய விலையிலேயே விற்பனை" என கூறி விற்கத்தொடங்கினார். அப்போது 4 காய்கள் மட்டுமே விப்பாணையானது. மீதமிருந்த 4 காய்களை மிகக் குறைந்த விளையான 0.25 பைசாவுக்கு நஷ்டத்தில் விற்றூற்றுமுடித்தார். ஆகமொத்தம் அவரின் 4மணிநேர விற்பனைத் தொகை 4+6+2+1= 13 ரூபாய் கிடைத்தது.  கிடைத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து 26 முருங்கைக்காய்களை வாங்கி மீண்டும் மேற்கண்டதைப்போலவே விற்பனையை தொடர்ந்தார் அன்று மாலை 6 மணியளவில் அவரிடம் இருந்த அனைத்து முருங்கைக்காய்களையும் விற்று மொத்தம் 28 ரூபாய்களை சம்பாதித்தார் அதாவது 18 ரூபாய் அதிகமாக லாபம் சம்பாதித்தார்.     

காண்கு:- பார்ப்பதற்கு சுறுசுறுப்பானவர். எதையும் அழகுபடுத்தி விப்பாணை செய்வதில் வல்லவர். அவருக்கு பசுமையான புதிய முருங்கைக்காய் மீது அதிக நம்பிக்கை வைத்து விற்பனையை தொடர்ந்தார்  அவர் வாங்கிய 20 முருங்கைக்காய்களை ஒன்றின் விலை இரண்டு ரூபாய் (2.00) என கூவி விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணிநேரத்தில் 2 காய்கள் மட்டுமே விற்பனையாகியது. ஆகவே அவர் வைத்திருந்த முருங்கைக்காய் வெய்யில் பட்டு சற்று வாடி வாதங்கத் தொடங்கியது ஆகவே அவர் மேலும் விலை குறைத்து 1.50 ஒரு ரூபாய் ஐம்பது காசுக்கு ஒன்று என்று விற்கத்தொடங்கினார். அடுத்த ஒரு மணி நேரத்தில் மேலும் 4 காய்கள் மட்டுமே விற்றது. ஆகவே மீண்டும் விலை குறைத்து 1.00 ஒரு ரூபாய்க்கு ஒன்று என விற்கத் தொடங்கினார் அப்போதும் 4 காய்கள் மட்டுமே விற்றது ஆகவே தொடர்ந்து மீண்டும் விலை குறைத்து 0.75 எழுபத்தி ஐந்து காசுக்கு ஒன்று என்று விற்கத் தொடங்கினார் அப்போதும் முருங்கைக்காய் சற்று வாடி வதங்கிவிட்டபடியால் 4 காய்கள் மட்டுமே விற்பனையானது ஆக அன்றய மாலை 6 மணியளவில் மீதமிருந்த 6 காய்களை வாங்கிய விலைக்கே விற்றுப்பெற்ற தொகையாக மொத்தம் 4+6+4+3+3=20 ரூபாய்.

இப்போது   காண்கு:- 20 ரூபாயும், நாக்கு:- 28 ரூபாயையும் சம்பாதித்தார் ஆகவே அதிகம் சம்பாதித்த நாக்கு வெற்றிபெற்றவராவார். 

இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்வது, நஷ்டத்தில் வியாபாரம் செய்தாலும் நாக்கு திறமையாக அதிகம் லாபம் சம்பாதித்தார், மேலும் நம்மிடமுள்ள முதலீட்டை ஒரு இடத்தில் தங்கிவிடாமல் விரைந்து செயல்பட்டு பலமடங்காக்கிய விதம் அவருக்கு நன்மை கிடைப்பதோடு, அதிக முறை வாங்கி விற்று செலவு செய்வதால் ஒரு நாட்டின் வளர்ச்சியிலும் அவர் சிறந்த பங்குவகிக்கிறார். 

ஆகவே சிறந்த விற்பனையாளர் என்பவர், அவரது விற்பனை விற்றுத் தீரும்வரையில் காத்திருப்பதைவிட. புத்திசாலித்தனமாக ஏற்றத தாழ்வுகள் இருந்தாலும் வேகமாக கிடைக்கும் விலைக்கு விற்று,  மேலும் மேலும் பல விற்பனைக்கு தாவுவதே சிறந்த விற்பனை தந்திரமாகும். 

நஷ்ட விற்பனை விலையிலும் லாபம் சம்பாதிக்கும் இந்த முருங்கைக்காய் வியாபார உதாரணம், முதுகளைப் பட்டதாரிகளுக்கான  எம் பி ஏ படிப்பின் ஒரு பகுதி பாடம் இது. 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.  

என்ன சுட்டீஸ் நேரத்தின் மதிப்பு பணத்தின் மதிப்பைவிட உயர்ந்தது என்பதை தெரிந்துகொண்டீர்களா?

வாருங்கள் நமது நாளை மறுநாள் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டில் சிந்திப்போம்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*

*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*. ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு அது வெறும் 24மணி நேரம்

Monday, July 9, 2018

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

பயிற்சி விளையாட்டு:- அறிவுக்கு வேலைகொடு புதிர் போட்டி பரிசுகள்.

தினமும் காலையில் 2 மணிநேரமும், மாலையில் 2 மணிநேரமும், மாநகர வாரியம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குகிறது.

அது ஒரு வீட்டின் மேற்பகுதியில் பொருத்தப்பட்ட தண்ணீர் தொட்டி. 
அதன் கொள்ளளவு 300 லிட்டர்.

அந்த தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்காக ஒரு மாநகர குடிநீர் வழங்கும் தண்ணீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளது. 

தினமும் காலை மாலை இரண்டு நேரமும் இரண்டு மணி நேரத்தில் அந்த தண்ணீர் தொட்டி முழுவதும் நிரம்பி வழிவதுண்டு. 

தண்ணீர் தொட்டியை நிரப்பும் குழாய் பழுது ஏற்பட்டதால் அந்தக்குழாயிலிருந்து ஒரு நொடிக்கு ஒரு சொட்டு தண்ணீர் எப்போதும் வெளியேறிக்கொண்டே இருக்கிறது.  

தண்ணீர் குழாயின் நேர் கீழே ஒரு 300 லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டி இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட விவரங்களை கவனமாக படித்து நன்கு புரிந்துகொண்டு கீழ் கண்ட  வினாக்களுக்கு விடையைக்கூறி பரிசுகளை வெல்லுங்கள். 

1. அந்த தண்ணீர் தொட்டி எத்தனை மணி நேரத்தில் முழுவதும் நிரம்பும்.

2. பழுது ஏற்பட்ட குழாயிலிருந்து ஒரு நாளைக்கு வெளியேறும் நீரின் அளவு என்ன?

3. வீணாக வெளியேறிய தண்ணீரின் அளவு என்ன?

4. நீர் வீணாகாமல் தடுக்க என்ன வழி?

5. வீணாகும் நீரை எப்படி பயன்படுத்தலாம்?

சரியான விடையை அடுத்த பதிவில் தெரிவிக்கப்படும்.

எங்கே நீங்கள் உங்களின் திறமையை உபயோகித்து கேள்விக்கான பதிலை கூறுங்கள் பார்க்கலாம்.

போட்டியில் பங்குகொள்ள நினைக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது நன்றிகள். 

இப்படிக்கு கோகி-ரேடியோ மார்க்கோனி.


*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20* *(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கங்கள். இன்றய பயிற்சி விளையாட்டில் சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி.

நமது இயல்பு வாழ்க்கைக்கு, உழைப்பு, உணவு, அத்தியாவசிய தேவைகளாக இருக்கின்றன. பயிற்சிகளும், இயற்கை உணவுகளும், நம்முடைய ஆரோக்கியத்தை வலுவூட்டுகின்றன. ஆனால், காலையில் எழும் போது சோம்பல் தலைதூக்குகிறது. நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்று, இன்றைய காலையை கடத்துகிறோம். இதனால், நமது சுறுசுறுப்பு குறைகிறது மெட்டாபாலிசம் சீர்குலைகிறது.
உடல் திசுக்களில் லேக்டிக் அமிலம் சேர்ந்து தசை இறுக்கத்தை அதிகரிக்கிறது மனதில் அழுத்தம் உருவாகிறது. சோம்பல், அசதி, கூடி வாழ்வின் உத்வேகம் குறைகிறது. பிணிகள் எளிதில் நம்மை அடிமைப்படுத்துகின்றன. 

விளையாட்டு இதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. விளையாட்டு, உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நல்லதொரு களைப்பை உருவாக்கி, சீரான இயக்கம், இறுக்கம், அழுத்தம் சீர்படுவதுடன், மன அழுத்தம் உருவாக்கும் ஹார்மோனை மாற்றும் வல்லமையை தருகின்றன.நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. எனவே, நமது அன்றாட இயக்கங்களில், கடின உழைப்பு, விளையாட்டு போன்ற காரணிகளையும், யோகா, தியானம் போன்ற அம்சங்களையும் மேற்கொள்வது நல்லது. எனவே, உழைப்பு, பயிற்சிகள், விளையாட்டு கிட்டாத தேகத்துக்கு மாற்றாக, நடைபயணம், நடைபயிற்சியை அவசியம் மேற்கொள்ள வேண்டும். 

நகர்ப்புறங்களில் வாழ்பவர்களுக்கு நீச்சல், வேக ஓட்டம், மெது ஓட்டம், உடற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி மேற்கொள்வது, தோட்ட வேலை, நாட்டியம் ஆகியவை, மிகச்சிறந்த பயிற்சிகளாக உள்ளன.  

நகர்ப்புறங்களில் வீட்டு வளாகத்தில், வீட்டு மாடி, பால்கனி பகுதியில் சிறிய தோட்டம் அமைத்து, அதன் பணியில் களமிறங்கினால், வேலை செய்த திருப்தியும், தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம் 

நகரத்தில் சுகந்திரமான விளையாடும் இடம் பார்ப்பது அரிதாகிவிட்டது. வீட்டிற்கு வெளியே விளையாட செல்லலாம் என்றாலே... கவனக்குறைவாக ஏதாவது விபத்து நேர்ந்துவிடுமோ என்று பெற்றோர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது, சிறுவர்கள் விளையாட்டில் ஏதாவது கவனக்குறைவால் விபத்துகள் ஏற்படுமோ என்ற பயம். அதனால் பிள்ளைகளை வீட்டை விட்டு வெளியில் விளையாட அனுப்பாமல் வீட்டிற்குள்ளாகவே விளையாட சொல்வது. 
வாழ்க்கையே ஒரு சதுரங்கம்தான்! சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு:-

நமது இலக்கை அடைய பொறுமை, நிதானம், சரியான திட்டமிடுதல், விடாமுயற்சி, சுயசிந்தனை, தன்னம்பிக்கை போன்றவை தேவை. இத்தகைய பண்புகளை வளர்க்க சதுரங்கம் (Chess) என்னும் விளையாட்டு உதவும்.
நமது வாழ்வில் சந்திக்கும் இடர்களை களைவது எப்படி?

நம்மை சுற்றி உள்ள வளங்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வது?

தடைகளை கடந்து எவ்வாறு இலக்கை அடைவது?

சுயமாக சிந்திக்கும் ஆற்றலை எவ்வாறு வளர்ப்பது?

இலவசமாக கிடைக்கும் காற்றை பயன்படுத்தி மனஅழுத்தத்தை களைவது மற்றும் மூளையை நன்றாக செயல்பட வைப்பது? போன்ற பல கேள்விகளுக்கான பதிலும், பயன்களும் நமது பயிற்சி விளையாட்டில் உள்ளது.  

சரி வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு போகலாம்:-

பூப்பறிக்க வருகிறோம் என்று ஒரு பாட்டை பாடிக்கொண்டே விளையாடும் விளையாட்டு ஒன்று இருக்கிறது. அந்த பயிற்சி விளையாட்டு பற்றி உங்களுக்கு தெரியுமா? வாங்க இன்று அந்த விளையாட்டை நாம் விளையாடுவோமா?.

சிறுமியர் குழுவாக இணைந்து ஆடும் விளையாட்டு இது. சிறுமியர் பூக்குழு, பூப்பறிக்கும் குழு என இரு குழுக்களாகப் பிரிந்து எதிர்எதிர் வரிசையில் நின்று கொள்வர். 

பூக்குழுவில் இடம்பெறும் சிறுமியர் ஒவ்வொருவரும் ஒரு பூவின் பெயரைத் தங்களுக்குச் சூட்டிக் கொள்வர் (சிலர் தங்கள் பெயருக்குப் பின்னால் தேவி பூ, கமலா பூ, எழில் பூ என்று சூட்டிக் கொள்வதும் உண்டு). யார் யார் எந்தப் பூவின் பெயரைச் சூட்டியுள்ளனர் என்பது பூப்பறிக்கும் குழுவிற்குத் தெரியாது. பூப்பெயர் தெரியாத நிலையில் தேவி பூ, கமலா பூ என்று பெயரைக் குறிப்பிட்டே அழைப்பதும் உண்டு. 

பூப்பறிக்கும் குழுவினருக்குத் தனிப் பெயர் சூட்டப்படுவதில்லை. அவர்கள் பூ பறிக்கும் செயலை மட்டும் செய்வார்கள். 

முதலில் பூப்பறிக்கும் குழு எதிர்வரிசையில் நிற்கும் பூக்குழுவை நோக்கி, "பூப்பறிக்க வருகிறோம்", "பூப்பறிக்க வருகிறோம்" என்று பாடிக் கொண்டே முன்னேறிச் செல்வர். பின்பு பூக்குழுவினர் "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" "எந்தப் பூவைப் பறிக்கிறீர்?" என்று பாடிக் கொண்டு முன்னோக்கி வருவர். பூக்குழு முன்னோக்கி வரும்போது பூப்பறிக்கும் குழுவினர் பின்னோக்கிச் செல்வர். மீண்டும் பூப்பறிக்கும் குழுவினர் "தேவி பூவைப் பறிக்கிறோம்", "தேவி பூவைப் பறிக்கிறோம்" என்று பாடிக் கொண்டு முன்னோக்கிச் செல்வர். இப்படியாக இரு குழுவினரும் பாடிக் கொண்டே முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்று வருவர்.

இறுதியில், பறிக்கப் போகும் பூ அடையாளப் படுத்தப்பட்டவுடன் அடையாளப் படுத்தப்பட்ட சிறுமியும் பூவைப் பறிக்கும் குழுவிலிருந்து ஒரு சிறுமியும் முன்னால் வந்து எதிர்எதிர் நின்று கொள்வர். குழுவிலுள்ள ஏனையோர் ஒருவர் பின் ஒருவராகக் கயிறு இழுக்கும் போட்டியில் நிற்பதைப் போல் நின்று கொள்வர். பின் பூப்பறிக்கும் குழுவினர் தாங்கள் விரும்பிய பூவைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி மேற்கொள்வர். பூவைப் பறித்துத் தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டு மீண்டும் விளையாட்டைத் தொடருவர். கடைசிப் பூவைப் பறிக்கும் வரை விளையாட்டுத் தொடர்ந்து கொண்டே இருக்கும். (இவ்விளையாட்டில் இடம்பெறும் பாடல் விளையாட்டுப் பாடல்கள் என்னும் பகுதியில் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.)

பூக்களின் பெயர்களை அறிதல், மாதங்களின் பெயர்களை அறிதல், இழுவைப் போட்டி, உடல் திறன் என்று மகிழ்ச்சியாக இவ்விளையாட்டு ஆடப்பெறும்.

என்ன சுட்டீஸ் இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? 

மீண்டும் நாளை மறுநாள் வேறு ஒரு பயிற்சி விளையாட்டில் சந்திப்போம், நன்றி வணக்கம் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*


Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.