நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : *பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-7*

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Thursday, September 26, 2024

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-7*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-7*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-1*

நமக்கு நிறைய பாராட்டுக்கள் வேண்டுமென்றால்,  நாம் மற்றவர்களை பாராட்ட கற்றுக்கொள்ளவேண்டும், அதோடு  புகழ்ச்சி, பெருமைகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்? வாருங்கள் இன்றய பயிற்சி விளையாட்டிற்கு செல்வோம் 

எந்த விளையாட்டை விளையாடினாலும் மனதுக்கு பிடித்த விளையாட்டை விளையாடவேண்டும் அப்போதுதான் அந்த விளையாட்டும் நமது மனதில் ஆழமாக பதியும். 

முதல் இரண்டு வருடம் நான் எனது ஆரம்ப கல்வியை ஆங்கில கான்வெண்ட் பள்ளியில் படித்தேன் பிறகுதான் அரசு ஆரம்ப பள்ளியில் சேர்த்து தமிழ் வழியில் படிக்க வைத்தார்கள். இந்த விளையாட்டு நான் ஒன்றாம் வகுப்பில் படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் விளையாட அப்பாவிடம் கற்றுக்கொண்டது. பள்ளியிலும் சபாஷ் என்று சிறப்பு பெயரை எனக்கு வாங்கித்தந்தது.

இதுவும் ராஜா ராணி திருடன் போலீஸ் போன்ற சீட்டுக்கள் விளையாட்டைப்போலவே இருக்கும். இந்த விளையாட்டின்படிஉங்களைப்பற்றி உங்களது தலையில் ஒரு சீட்டு எழுதி ஒட்டியிருக்கும். உங்களின் தலையில் என்ன எழுதி ஒட்டியிருக்கிறது என்று  உங்களுக்கு தெரியாது. ஆகவே நீங்கள் வேறு ஒருவரின் உதவியை நாடவேண்டும். அதேபோல நீங்களும் உங்கள் எதிரில் இருப்பவராது தலையில் இருக்கும்   வாசகத்தை வாசிக்க உதவி செய்யவேண்டும்.

விளையாட்டின் முக்கிய விதி தலையில் இருக்கும் சொல்லை / வாசகத்தை படித்து அவரை புகழ்ந்து கூறவேண்டும்.

உதாரணமாக ஒரு மாணவியின் தலையில் "அழகு" என்ற சொல் ஒட்டப்பட்டுள்ளது. அதேபோல ஒரு மாணவனின் தலையில் "திருடன்" என்ற சொல் ஒட்டப்பட்டிருக்கிறது. இப்போது அந்த இருவரும் அவர்களுக்கு எதிரே இருப்பவராது தலையில் ஒட்டப்பட்டிருக்கும் வாசகத்தை படித்து அவர்களை புகழ்ந்து பேசவேண்டும்.

இப்போது விளையாட்டுக்கு போகலாம். முதலில் மாணவியின் நெற்றியில் ஒட்டிய வாசகப்படி புகழ்ந்து பேசவேண்டும்  "ஆமாம் நீ ரொம்ப அழகு. உனக்கு எப்போதும் அழகாக உடை அணிந்துகொள்வது ரொம்ப பிடிக்கும். அதோடு நீ கலகலவென சிரித்த முகத்தோடு அனைவரிடமும் பேசுகிறாய்..." இப்படியெல்லாம் அந்த மாணவியின் முன்பு ஒரு மாணவன் பேசும்போது அந்த மாணவி அதை எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார் என்பதை ஆசிரியர் குறித்துக்கொள்வார். 

அடுத்து மாணவனின் முறை வரும்போது. இப்போது அந்த மாணவி மாணவனின் தலையில் எழுதியிருக்கும் "திருடன்" என்ற வார்த்தையை படித்துவிட்டு புகழவேண்டும். "ஆமாம் நீ திருடன்தான். எல்லோருக்கும் பிடித்த மனம்கவர்ந்த அன்புத் திருடன் நீ, வெண்ணையை திருடிய கண்ணன் போல நீயும் விளையாட்டுத் திருடன்." இப்படியெல்லாம் சிறப்பாக யோசித்து புகழவேண்டும் அப்போது அந்த இருவரது நடவடிக்கைகளை ஆசிரியர் குறித்துக்கொள்வார்.

பிறகு இந்த விளையாட்டில் யார் சிறப்பாக விளையாடினார்கள் என்று ஆசிரியர் எடுத்துக்கூறுவார். புகழ்ச்சி என்று வரும்போது நம்மை அறியாமல் அந்த புகழ்ச்சிக்கு வசப்பட்டு நாம் வெட்கப்பட்டு, உடல் அசைவுகள், கை, கால்களின் செய்கைகள் மற்றும் முகம் எப்படி அவற்றை எதிர்கொள்கிறது போன்ற நாம் செய்யும் தவறுகளை ஆசிரியர் சுட்டிக்காட்டுவார்.  

ஆகவே தயங்காமல் உதவி கேட்க்கும் மனப்பக்குவமும் எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்படாமல் எந்தவித சவால்களையும் எதிர்கொள்ளவேண்டிய பயிற்சி விளையாட்டை நாம் சரியாக புரிந்துகொண்ட விளையாடினாள் எதிர்வரும் காலத்தில் எந்த வித சவால்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு கிடைக்கும் என்பதை சொல்லித்தரும் பயிற்சி விளையாட்டுதான் இந்த விளையாட்டு.

என்ன சுட்டீஸ் இந்த விளையாட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா? நீங்கள் இந்த விளையாட்டை எப்படி விளையாடுவார்கள் என்று கூறுங்கள்.

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   

முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-8*
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-8/4இல் நாளை மறுநாள் கூறுகிறேன். 

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.