*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-5*
*(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2*
நாம் எப்போதும் ஒரு பாடத்தின் இறுதியில் கேட்கப்படும் கேள்வி பதிலை மட்டும் படிக்க விருப்பப்படுவோம்.
மனப்பாடம் செய்ய இந்த முறை தவறான முறையாகும். நாம் அந்த முழுப் பாடத்தையும் படித்தால்தான் எப்படிப்பட்ட கேள்விக்கும் பயமில்லாமல் சிறப்பாக பதில் எழுதமுடியும். முழுப்படமும் படிக்கணுமா அப்பாடா அது ரொம்ப கஷ்டமாச்சே என்று நினைக்கிறீர்களா? வாங்க இந்த விளையாட்டை விளையாடி எதையும் வெகு எளிமையாக செய்திடலாம்.
முழுப்படத்தையும் மனப்பாடம் செய்யும் விளையாட்டை எப்படி விளையாடுவது? இதுக்கு நீங்கள் உங்கள் வகுப்பில் உங்களோடு படிக்கும் 4 அல்லது 5 மாணவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து இந்த விளையாட்டை விளையாடவேண்டும். விளையாட்டு என்னவென்றால்...
உங்கள் குழுவிற்கு ஒரு போட்டி அதாவது நாளை விளையாட ஒரு குறிப்பிட்ட பாடத்தை போட்டிக்கான பாடமாக அறிவிக்கவேண்டும். குறிப்பிட்ட அந்த பாடத்தில் ஏதாவது ஒரு இடத்திலிருக்கும் ஒரு கடினமான ஒரு கேள்வியை உருவாக்கி உங்கள் குழுவிலிருக்கும் மற்றவர்களை கேட்கவேண்டும். மற்றவர்கள் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டால் உங்களுக்கு மதிப்பெண் கிடையாது. நீங்கள் கேட்கும் கேள்விக்கு யாருக்குமே பதில் தெரியாவிட்டால் உங்களுக்கு ஒரு மதிப்பெண் கிடைக்கும். இப்படி உங்கள் குழுவினர்கள் ஒருவர் மாற்றி ஒருவராக அந்த பாடத்தில் துருவித் துருவி எங்காவது ஒரு இடத்திலிருந்து கஷ்டமான கேள்வியை கேட்டு மதிப்பெண் எடுக்க முயற்சிக்கவேண்டும். அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வெற்றிபெற்றவர்கள்.
இந்த விளையாட்டை விளையாட நீங்கள் வெற்றிபெறவேண்டும் என்கிற முனைப்பில் முழு பாடத்தையும் மிக மிக கவனமாக படித்து அதிலிருந்து போட்டிக்கான கேள்விகளை தயாரிக்கும்போதே உங்கள் மனதில் அந்த பாடம் முழுதும் பதிந்து மனப்பாடமாகிவிடும். பிறகு இந்த விளையாட்டு பாடம் எந்தக்காலத்திலும் உங்களால் மறக்கமுடியாது. இப்படி தினமும் ஒரு பாடத்தில் உங்களது விளையாட்டை விளையாடவேண்டும். பிறகு பாருங்கள் அந்த வருடம் உங்கள் குழுவினர்கள் அனைவரும் முதல் மதிப்பெண் எடுத்து வெற்றிபெறுவீர்கள்.
அப்படித்தான் ஒருமுறை எங்களது தமிழாசிரியர் எங்களை வைத்தே விளையாடி, எங்களது பாடங்களை வாழ்நாள் முழுதும் நாங்கள் மறக்க முடியாதபடி ஒரு ஆச்சரிய விளையாட்டு விளையாடினார் அது என்ன விளையாட்டு? என்று அடுத்த பதிவில் (ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-3இல் கூறுகிறேன்.
என்ன சுட்டீஸ் உங்களுக்கு இந்த பயிற்சி விளையாட்டு எப்படி விளையாடவேண்டும் என்று புரிந்ததா?. கட்டுரையில் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை என்றால் எனது ஒலிப்பதிவை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். மேலும் உங்களுக்கு இந்த விளையாட்டு புரிந்ததா? என்பதை அவசியம் தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் இதுபோன்ற படிப்பு விளையாட்டை சொல்லித்தருவது சிறந்த பலனை தருகிறதா இல்லையா? என்பதை நான் தெரிந்துகொண்டு அதற்க்கேற்ப ஏதாவது மாறுதல் தேவைப்பட்டால் செய்து மேலும் சிறப்பாக இந்த விளையாட்டை விளையாட முடியும்.
என்ன சுட்டீஸ் நீங்கள் உங்களது கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.
இனி அடுத்த பதிவுகளிலிருந்து தினம் ஒரு பதிவு கிடையாது. வாரத்திற்கு ஒரு பதிவு என்று ஒவ்வொரு புதன் கிழமை அன்று இந்த பறிச்சி விளையாட்டுப்பதிவுகள் உங்களுக்கு தொடர்ந்து விளையாட கிடைக்கும்.
மீண்டும் வரும் புதன் கிழமை பதிவில் சந்திப்போமா? அடுத்த புதன்கிழமை வரும்வரை, இதுவரை நீங்கள் தெரிந்துகொண்ட பயிற்சி விளையாட்டை விளையாடி பழகிக்கொள்ளுங்கள்.
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-6*
*மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-3*
அப்படித்தான் ஒருமுறை எங்களது தமிழாசிரியர் எங்களை வைத்தே விளையாடி, எங்களது பாடங்களை வாழ்நாள் முழுதும் நாங்கள் மறக்க முடியாதபடி ஒரு ஆச்சரிய விளையாட்டு விளையாடினார் அது என்ன விளையாட்டு? என்று அடுத்த பதிவில் மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-3இல் கூறுகிறேன்.
No comments:
Post a Comment