நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : உங்களின் சொந்த குரலில் வானொலி நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு...

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, May 1, 2013

உங்களின் சொந்த குரலில் வானொலி நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு...

உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.

உங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்றுகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும்..... எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

பல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-

#ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள் உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.

#வானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.

#நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.

#ஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.

# ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று "பின்புல" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்." மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், "வெறும் குரள்" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.

#வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த "மந்திரச்சொல்லாக" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் "சோப்பு" ஒன்று "புதிது" என்கிற ஒரு "மந்திர வார்த்தையை-KEY WORDS" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் "மந்திரச்சொர்க்களின்-KEY WORDS" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.

அடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.

2 comments:

  1. கோகி சார்....அருமை அருமை ...தங்களின் Whats App groupல் இருக்கிறேன்....இன்றுதான் இந்த Blog எதேச்சையாக தெரிய வந்தது வானொலி ஓலிபரப்பு பற்றி அறிய தகவல்கள் பகிர்திருக்கிரீர்கள்...ஒரு இனிய சுவையான வானொலி நிகழ்ச்சிக்குப் பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா?

    ReplyDelete

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.