#வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும். பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை என்பது 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, தமிழகத்தின் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது. ஆகவே பண்பலை ஒலிபரப்பிற்கு, ஒலிபரப்பு கோபுரம் (ட்ரான்ஸ் மீட்டர் டவர்ஸ்) அவசியமாகிறது. இதே நிகழ்ச்சியை வானொலி தவிர அதன் இணைய வலைத்தொடர்பு (Internet) அமைப்பிலும் கேட்கலாம்.
ஆஸ்திரேலிய பண்பலையில் "வெட்டுப்புலி" என்கிற சிறுகதை நூல்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது.

No comments:
Post a Comment