நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : December 2016

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Wednesday, December 28, 2016

நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது எப்படி?

பாதியளவு செலவில் நிகழ்ச்சியை நடத்துவது எப்படி அதாவது நிகழ்சியின் ஐம்பது சதவீத 50% செலவை மிச்சம்பிடிப்பது  எப்படி? :-   

ஐம்பது சதவீதம் 50% தள்ளுபடி செலவில் வண்டிச்சத்தம் அதாவது மிச்சப்படுத்தும் வண்டிவாடகை, என்று தளவாடவியலில்(Logistics-லாஜிஸ்டிக்ஸ்)  ஒரு கோட்பாடு  உண்டு.  அதாவது நீண்ட தூரம் பயணிக்கும்,  முழுவதும் நிரம்பிய ஒரு கனரக சரக்கு வாகன சேவைக் கட்டணம் என்பது,  அந்த வாகனம் சென்று சேரவேண்டிய இடத்திற்கு சென்று திரும்புவதற்கான மொத்த அல்லது அதன்  முழுமையான செலவுகளைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது.  இருந்தாலும் சென்று சேரவேண்டிய இடத்தில் சரக்குகளை இறக்கியதும் திரும்ப தனது பழைய இடத்திற்கு திரும்புவதற்கு ஏதும் சரக்கு சவாரி கிடைக்காதபோது, வாகனம் காலியாக திரும்புவதைவிட அந்த வாகனம் திரும்பி வர தேவையான எரிபொருள் செலவையாவது மிச்சப்படுத்தி லாபம் ஈட்டுவதற்கு, வாகன உரிமையாளர் அவரின் வாடிக்கையாளர்களிடம் ஐம்பது சதவீத செலவில் சரக்கு சேவை தருவதற்கு முன்வருவார்.  இந்த ஐமபது சதவீத வண்டிவாடகை செலவில் சரக்குகளை விநியோகிக்க சில நிறுவனங்கள் இந்த சேவைக்காக காத்துக்கிடப்பதும் உண்டு. 

இதைப்போலவே நிகழ்ச்சி தயாரிப்பில் ஒரு உதாரணத்திற்கு,  இந்தியத் தலைநகர் புது தில்லியில் நடைபெறும் பல கலை நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட சில மாதங்களில் நடத்துவது  சிறப்பாக கருதப்படுகிறது, காரணம் சுதந்திரதினம், குடியரசு தினம் போன்ற அரசு சார்ந்த பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் நாட்டின் பலப்பகுதியிலிருந்து பல மாநில கிராமியக்  கலைக்குழுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரசாங்க செலவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அப்படி வரக்கூடிய கலைக்குழுவினர்களை மிக குறைந்த செலவுகளில், நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் பல பகுதியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும்.  பல கிராமியக் குழுவினர் இலவசமாகக்கூட சில நிகழ்ச்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள். அப்படி முன்வருபவர்களையும் பல நிகழ்ச்சியில் பயன்படுத்திக்கொண்டு அவர்களை பாராட்டி பல பரிசுகள் வழங்கியிருக்கிறோம். 

@ ஒரு திருமண நிகழ்ச்சியில் "கிராமிய பாடல் கச்சேரி" "கரகாட்டம்",  "பரத நாட்டியம்",  "வாத்தியக்குழுவினர்களின் கச்சேரி"  


@  கோவிலில் திருவிழா நிகழ்ச்சியில், திறப்புவிழா நிகழ்ச்சியில், பிறந்தநாள் மற்றும் மணநாள் நிகழ்ச்சியில், பொருட்காட்சி, சிறப்புக் கூட்டங்கள், கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கிராமிய கலைக்குழுக்கள் பங்குபெறும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். 

@ நாட்டுபுற பாடல்கள், வில்லுப்பாட்டு, பறையாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி, தெருக்கூத்து, நாடகம், சிலம்பம், குத்து, தப்பு, புலியாட்டம் போன்ற நம்முடைய பாரம்பரிய கிராமியக்கலை, கிராமிய விளையாட்டுகளையும்  பாடல்களையும் அருகிருந்து பார்க்கவும், பாதுகாக்கவும் நாம்தான் முயற்சிக்க வேண்டும். ஆகவே இசையோடும் பழம்பெரும் கலைகளோடும் இணைந்து இன்புற்றிருக்க உங்களுக்கு தோன்றினால் நமது வாழ்வில் நடக்கும்  அனைத்து நிகழ்ச்சியிலும் நாட்டுப்புற கலைகளுக்கு வாய்ப்பை வழங்க நம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்கின்ற எண்ணங்களையாவது நமது மனதில் நிலை நிறுத்துவோம். 

ஆகவே எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்த நினைக்கும்போதே இப்படிப்பட்ட பல விவரங்களில் நாம் கவனம் செலுத்தவேண்டியது மிக முக்கியம்.  

சிங்கை என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் மற்றும் மலேசிய, மொரிசியஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் பல உல்லாச விடுதிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் கட்டுப்படுத்தப்பட்ட, குறைந்த  செலவுகளில், செலவுகளை மிச்சயப்படுத்தும் நோக்கில் நடக்கும் பல நிகழ்ச்சிகளில் நான் நேரடியாக கலந்துகொண்டிருக்கிறேன். பல கலைக்குழுவினர்கள் மற்றும் இசைக்குழுவினர்கள் தங்களது திறனை வெளிப்படுத்தி விளம்பர படுத்துவதற்காகவும், உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.   அவர்களின் நோக்கம் நிகழ்ச்சிக்கு வரும் உல்லாச விடுதி விருந்தினர்களை கவர்ந்து அவர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வாய்ப்பினைப் பெற்று மேலும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருமானம்  சேர்க்கவேண்டும் என்கிற எண்ணத்தில் போட்டி போட்டுக்கொண்டு, விளம்பரத்திற்காக இலவசமாகவே உல்லாச விடுதி நிகழ்சியில் பங்குகொள்ள முன்வருகிறார்கள்.  

ஆகவே சிலவுகளை மிச்சப்படுத்தி ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்ப்பது என்பது,  நிகழ்ச்சி தயாரிப்பின் மிக முக்கிய நோக்கமாகவே கருதப்படுகிறது.  இனி நீங்கள் உங்களின் சொந்த நிகழ்சிகளை நடத்த திட்டமிடும்போது,  நிகழ்ச்சிக்கான செலவுகளை பாதியாக குறைப்பது எப்படி என சிந்தித்து அதற்க்கேற்றாற்போல நிகழ்ச்சியை நடத்த, உங்களது அனுபவம்.... உங்களுக்கு சிறந்த வழிகளைக் கற்றுத்தரும். அல்லது நிகழ்ச்சி தயாரிப்பில் அனுபவம் வாய்ந்த ஒருவரை பக்கபலமாக வைத்துக்கொண்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடுங்கள்.  

வாய்ப்புகள்  எங்கும் கொட்டிக்கிடக்கிறது..... வாய்ப்புக்களை உருவாக்கவோ அல்லது இருக்கும் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளவோ ....அப்படிப்பட்ட வாய்ப்புக்களை எப்படி தேடி கண்டுபிடித்து, மிகச் சரியாக  பயன்படுத்திக்கொள்வது என்பதுதான் மிக முக்கிய சவாலாக நம் முன்னே நிற்கும் கேள்வி? 

குறைந்த சிலவிலோ அல்லது இலவசமாகவோ ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தவேண்டுமா? கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்கிற நிகழ்ச்சிகளின் அனுபவ நுணுக்கங்களை, நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை பக்கங்களின்வழியே பல அனுபவம் பெற்றவர்களின்  பதிவுகளிலிருந்து  உங்களுக்கு பயன் கிடைக்கும் என நம்புகிறோம். நன்றி. 

Tuesday, December 27, 2016

"தாத்தா பாட்டிகள் உள்ள வீடு-முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் ....

கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. .."தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !" 

முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆலோடி எனப்படும் வராண்டாவில் பாட்டி அமர அவளைச் சுற்றி அவள் மடியில் தலைவைத்து சுவாரஸ்யமாக கதைகள் கேட்பது வழக்கம். அவளும் கருத்துச் செறிந்த, வீரமிக்க இதிகாச, புராண, சமூகக் கதைகள் சொல்வாள். அவைகளைக் கேட்டு குழந்தைகளாகிய நம் மனதில் நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், வீரம் வளர்வதுமுண்டு. 
இதன் அடிப்படையில் நம் முன்னோர்களும் பஞ்சதந்திரக் கதைகளென்று நீதி மேம்படவும், விக்ரமாதித்தன் கதைகளென்று நம் புத்தியைத் தீட்டக்கூடிய பலவற்றை எழுதி நமக்களித்துள்ளனர்.

வேனிற்காலங்களில் பெரும்பாலும் நதிகள் வற்றிவிடும். அந்த ஆற்று மணலில் தெருக்கூத்து என்று பல சரித்திரக் கதைகளை நடித்துக் காட்டிச் சொல்வதுமுண்டு. கேரளத்தில் சாக்கியார் கூத்து என்று கதைசொல்லும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இது தவிர கோயில்களில் திருவிழாக் காலங்களில் கதாகாலட்சேபம் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. பொம்மலாட்டங்கள் மூலமாகவும் அக்காலத்தில் பல தெய்வீகக் கதைகளும் சொல்லப் பட்டு வந்தது.
இவையாவும் காலப் போக்கில் வளரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கதை சொல்லும் இக் கலையை செப்பனிட்டு இப்போதெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக பல கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் நன்கறிவோம். 
தற்சமையம இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழா நடைபெறுவதுகேட்டு காலங்காலமாக கதைகளைச் சுவைத்துவந்த எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கதைசொல்லும் கலை மென்மேலும் பலர் பங்கு பெற்று ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து வளர வேண்டும் என்பதே என் அவா!
நன்றி... 
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.