இந்தியாவின் தேசத் தந்தை என்று போற்றப்படும் திரு காந்தி அடிகளின் திரு உருவம் இந்திய ரூபாயில் பதிப்பது என்கிற முடிவெடுத்தபோது எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் நிரம்பி வழிந்தது.... அது ஒரு பெரிய கதை... சரி இப்போது அது நமது விவாதமல்ல.... பணமும் மனமும் என்கிற ருபாய் நோட்டின் மதிப்பு என்கிற "தன்னம்பிக்கை பயிற்சி" வகுப்பிற்காக ஒரு எடுத்துக்காட்டு கட்டுரையானது 1990-கலீல் உருவானது. நமது தமிழர் ஒருவர்தான் இதை மும்பை, தில்லி, நாக்பூர் போன்ற வட மாநிலங்களில் பல நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளருக்குத் தேவையான தன்னம்பிக்கை பயிற்சியளிக்க இந்த பணமும் மனமும் -என்கிற உதாரண செயல் அறிவை பயன்படுத்தினார், அதாவது இந்திய ருபாய் நோட்டை கசக்கினாலும் காலில் போட்டு மிதித்து அழுக்காகினாலும் அதன் மதிப்பு குறையாது அதுபோலத்தான், நீங்கள் உங்களது பணியில் உங்களை யாரும் பொருட்படுத்தாமல் போனாலும் உங்களின் மதிப்பு குறையாது என்றார்" நம்மவர்கள் காப்பியடிப்பதில் சளைத்தவர்கள் இல்லை எனவே ஒரு வரிகூட பிசகாமல் அப்படியா இன்றளவும் அந்த உதாரண செயல் அறிவை பயன்படுத்திய பல பயிற்சியாளர்கள் திணறுகிறார்கள் காரணம் "காந்தியடிகள் படம் அச்சிட்ட பணத்தை காலில் மிதிப்படும்படி செய்து காட்டுவது சரியில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்ததினால் பயிற்சி தரவேண்டிய பயிற்சியாளர் முகத்தில் அசடுவழிந்தார்கள். இதைத்தான் நான் "பணத்தை மிதித்து அழுக்காக்கிக் காட்டுவதைவிட அதை மாற்றி பணத்தை குப்பைத்தொட்டியில் போட்டாலும் குப்பைத் தொட்டியின் நாற்றம்/வாடை வீசினாலும் பணத்தின் மதிப்பு குறையாது" என்று கூறுமாறு தன்னம்பிக்கை பயிற்சியளிக்கும் "பயிற்றுவிக்கும் -பயிற்சியாளர்"{TRAIN THE TRAINER} பட்டறையில் தெரிவித்துவருகிறேன். இதைக் கூறும்போதுதான் இந்தியத் தேசத்தந்தை எழுதிய இங்கிலாந்தில் அவருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் குறித்து இந்தியர்களைப்பற்றி எழுதியிருந்தது எனக்கு ஞபகத்தில் வந்தது ...... திரு காந்தி அவர்கள் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருந்தபோது.... அன்று அவரது கல்லூரியில் அனைவருக்கும் ஆங்கிலப்பாடத்தின் தேர்வு முடிவுகளின் விடைத்தாள் வழங்கப்பட்டது. திரு காந்தி அவர்கள் 60% விழுக்காடிற்கு மேல் அதிகமான மதிப்பெண் பெற்றிருந்தார். அவரது வகுப்பில் 15-20% விழுக்காடு மதிப்பெண்கள் எடுத்திருந்த ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களுக்கு, திரு காந்தி அவர்களின் அதிக மதிப்பெண் ஆச்சரியத்தை உண்டாக்க, அனைத்து மாணவர்களும் திரு காந்தி அவர்களிடம் சென்று "உங்களின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல, அதோடு நீங்களோ ஆங்கிலம் அல்லாது பல மொழிகள் பேசும் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் அப்படி இருந்தும் எப்படி உங்களால் ஆங்கிலப்பாடத்தில் அதிக மதிப்பெண் பெறமுடியும்?" என்று கேள்விக்கேட்டனர்... அதற்க்கு திரு காந்தி அவர்கள் " இந்தியருக்கு மொழி ஒரு பொருட்டல்ல. எப்படிப்பட்ட கடினமான மொழி மற்றும் பாடமானாலும் அப்படியே படித்து மனதில் நிறுத்து, தேர்வின்போது அப்படியே அச்சுப்பிசகாமல் விடைத்தாளில் எழுதிவிட்டு (வாந்தியெடுத்துவிட்டு) வருவதில் வல்லவர்கள்" என்றார் .... இங்கிலாந்து மாணவர்கள் இப்படியும் ஒரு திறமையா என வியந்தனர்..... இது காந்தியடிகளின் சுய சரிதையில் அவர் குறிப்பிட்டிருந்த செய்தி ....நன்றிகளுடன் கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்.
"பலதுறைகளைச் சேர்ந்த - அனைவரது நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த சுவையான விவரங்கள் "நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை" என்கிற இந்த வலைப் பூ பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த உங்களின் அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்." முகநூளிலும் இந்த பக்கங்கள் சேர்க்கப்படும் ..இப்படிக்கு கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.. https://www.facebook.com/Programmedirectors
GOOGLE-1
.
Saturday, September 12, 2015
Wednesday, September 2, 2015
"பணமும் மனமும்" -ரூபாய் நோட்டும் உன் மதிப்பும்:-
பலர் கூடியிருக்கும் 'தன்னம்பிக்கை பயிற்சி' வகுப்பில் புதிதாக ஒரு 1000 ரூபாய் நோட்டு ஒன்றை காட்டி 'இந்த நோட்டு எவ்வளவு பேருக்கு பிடிக்கும்' என்று கேட்டேன். கிட்டத்தட்ட அனைவரும் கையை தூக்கினர். அதே நோட்டை கசக்கி பல மடிப்புகளோடு காட்டினேன். மீண்டும் அனைவரும் கையை தூக்கினர். பிறகு அதே நோட்டை குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பிறகு அந்தக் குப்பைத்தொட்டியிளிருந்து எடுத்து, முகர்ந்து பார்த்து நாற்றம் வீசுவதோடு அழுக்காகிவிட்டது என்று கூறி அனைவரிடமும் காட்டினேன். அப்போதும் அனைவருக்கும் அந்த நோட்டு பிடிக்கும் என்று, மீண்டும் அனைவரும் கையை தூக்கினர்.
'நோட்டு கசக்கப் பட்டு, குப்பையின் நாற்றம் வீசும் நிலையில் அழுக்ககிவிட்டதே, இந்த நிலையிலும் உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது ' என்று கேட்டேன்.
'ஐயா , நோட்டை கசக்கினாலும் , அழுக்கானாலும், குப்பைத்தொட்டியில் விழுந்தாலும் அதோட மதிப்பு குறையாது , அது கிழிந்தால் மட்டுமே அதன் மதிப்பு இழக்கும்' என்றார் .
'சரியாகச் சொன்ணீ ர்கள்' என்றேன், அதுபோல தன் திறமையின் மதிப்பை (1000 ரூபாய் நோட்டு போல) உணர்ந்தவன் தனக்கு எவ்வளவு பெரிய இழப்பு, அவமானம்,தோல்வி (அதாவது கசக்குதல், மதியாமல் தூக்கி எறிதல் போன்ற நிலை) வந்தாலும் தன்னிடம் தன்னம்பிக்கை , உழைப்பு, அறிவு, துணிவு, முயற்சி இருக்கும் வரை (அதாவது மனது (கிழியாமல்) உடைந்து போகாமல் இருக்கும் வரை) தன்னை யாராலும் மதிப்பிழக்கச் செய்ய முடியாது. .....இது ஆலோசகர் மதுரை திரு.கங்காதரன் அவர்களின் அனுபவ வாழ்கை பொன் வரிகள்.
Subscribe to:
Posts (Atom)