நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : October 2014

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Friday, October 3, 2014

நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ? .....


நாளைக்கு மாம்பழம் தின்னும் போட்டி இருக்காம். பேசாம அதுக்குப் பெயர் கொடுத்துருக்கலாமோ? .....

"இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான 32 வயது வாலிபர் ஒருவர் சுட சுட இட்லி தின்னும் போட்டியின்போது இறந்துபோனார் "......சென்ற வாரம் தென்னிந்திய கேரளா மாநிலத்தில் நடந்த சுட சுட இட்லி தின்னும் போட்டி ஒன்று சோகமாக முடிந்தது "போட்டியில் கலந்துகொண்ட ஒருவருக்கு போட்டியின்போது  இட்டிலி தொண்டைக்குழாவில் அடைத்துக்கொண்டு இறந்துபோனார்" அந்த நிகழ்ச்சியை நடத்திய நிகழ்ச்சி பொறுப்பாளர் மற்றும் அந்த நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிய அந்த ஊரின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியானார்கள். காரணம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்களான மருத்துவ முன்னேற்ப்பாடு ஏதும் செய்யாத காரணத்தாலும் முறையான காவல்துறை அனுமதி பெற தவறிய காரணத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக இருப்பதோடு, குற்றம் உறுதி செய்யப்பட்டால் அதற்க்கான தண்டனையையும் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் ஏற்ப்படும். 

எந்த போட்டிக்கும் அதில் கலந்துகொள்ள பெயர் தருவதற்கும்,  அதில் கலந்துகொள்ள முடிவு செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய பல முக்கியமான விவரங்கள் உள்ளது. முதலில் அதைப்பற்றி கேட்டு தெரிந்துகொண்டு பிறகு அந்த போட்டியில் கலந்துகொள்ளலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டும் ...

நிகழ்ச்சி தயாரிப்பு என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை .... அதற்க்கென்று சில விதிமுறைகள் பின்பற்றப்பட்டு கடைபிடிக்கப்படவேண்டியது அவசியம்.  

எந்த ஒரு நிகழ்ச்சியும் திட்டமிடுவதற்கு முன்பு :-
$ முதலில் பாதக மற்றும் சாதக சூழ்நிலையைப்பற்றி அறிந்துகொள்ளுவது மிக முக்கியம். ஆங்கிலத்தில் "ரிஸ்க் அனலிசிஸ்" என்று கூறுவார்கள். காரணம் நகழ்ச்சி நடைபெறும் இடமும், நாளும் தேர்ந்தெடுக்கும் பொது அன்றைய தினம் விடுமுறை தினமாக அமையுமாறு திட்டமிடுவதோடு, நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அல்லது நிகழ்ச்சி நடைபெறும் நாள் அன்று... அடிதடி மற்றும் வேலை நிறுத்தம் போன்ற எந்த  ஒரு  அசம்பாவிதங்களும் நடக்காத தினமாகவும், இடமாகவும் அமையும்படி நிகழ்ச்சி நாளும் இடமும் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம். 

$நிகழ்ச்சியின் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டியது மிக மிக அவசியமான ஒன்று.
நிகழ்ச்சியின் போட்டியாலருக்கோ அல்லது நிகழ்ச்சியில் கலந்துகொள்பவருக்கோ எந்தவித ஆபத்தும் நேராதபடி அவர்களுக்கு தக்க பாதுகாப்பு அம்சங்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருப்பது முகவும் முக்கியம்.

1. காவல்துறை மற்றும் தீ அனைப்புத்துறை போன்றவர்களிடம் நிகழ்ச்சிபற்றி தெரிவித்து முகூட்டியே அதற்க்கான அனுமதி பெறுவது அவசியம்.

2. முதலுதவி மருத்துவ சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே தயாராக ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டும் அல்லது நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே இருக்கும் மருத்துவ நிலையத்தின் தொலைப்பேசி மற்றும் முதலுதவி சேவை பெற தேவையான அனைத்து விவரங்களையும் பெற்று தயார்நிலையில் வைத்திருப்பது முகவும் அவசியம்.  

3. போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர் மற்றும் அவரது உறவினர், நண்பர்கள், வசிப்பிடம் போன்ற விவரங்களுடன் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள இருப்பவர்கள் முழுமையாக உடல் மற்றும் மனதளவில் தகுதியானவர என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு, போட்டிக்கான விதிமுறைகள் மற்றும் விவரங்கள் போட்டியாளருக்கு தெரியப்படுத்தி, அந்த  விவரங்களை போட்டியாலரிடமிருந்து எழுத்துபூர்வமாக எழுதி பெறுவது மிக முக்கியமான ஒன்று.     

 $ நிகழ்ச்சியானது அரசாங்க மற்றும்  சமுதாய விதி முறைகளுக்கு உட்பட்டதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.

$ நிகழ்ச்சியில் அரசாங்க உயர் அதிகாரிகள் கலந்துகொல்வதகவோ அல்லது தலைமை ஏற்று நடத்துவதாக இருந்தால், நிகழ்ச்சியை அரசு முறைப்படி நடத்தவேண்டும் ..  அதாவது நிகழ்ச்சியில் தேசியகீதம் மற்றும் தேசப்பற்று பாடல்கள் முறைப்படி அமையுமாறும் அரசாங்க வழிமுறைகளை கடைப்பிடிக்குமாறு நிகழ்ச்சி அமையுமாறு ஏற்ப்பாடு செய்வதோடு,  அந்த விதி முறைகள் சரிவர கடைபிடிக்குமாறு நிகழ்ச்சியை நடத்திச்செல்லுவதும் மிக முக்கிகம்.

$ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் ரசிகர்கள்,  பார்வையாளர்கள் அல்லது பொதுமக்கள் போன்றவர்களுக்கு தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்ப்பாடு செய்திருக்கவேண்டியது அவசியம்.

இப்படி இன்னும் பல விதி முறைகள் இருப்பதை முழுமையாக அறிந்து அதற்க்கேற்றபடி நிகழ்ச்சியை தயாரித்து திறம்பட வழங்குவது ஒரு சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் அல்லது நிகழ்ச்சி அமைப்பாளரின் கடமையாக்ம்.....  நன்றி.... தொடரும்... (கோகி).    

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.