நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 3, 2013

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை.

நிகழ்ச்சி மேலாண்மை (event management) என்றொரு சுவாரசிய துறை.இருக்கிறது அதற்க்கென்று தனிப்பட்ட பட்டம் மற்றும் பட்டயப் படிப்பும் உள்ளது ...துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனர் திரு சபேசன் மற்றும் துபாய் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனக் காப்பாளர் மற்றும் பொதுச் செயலாளர் திரு சந்திரா ரவி ஆகியோர் இணைந்து "ரிதம் ஈவன்ட்ஸ்" என்ற புதிய நிகழ்ச்சி மேலாண்மை (ஈவன்ட் மேனேஜ்மென்ட்) நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

.......வழக்கம்போல தனது அலுவலகத்திற்குள் நுழைந்த சங்கர், இடம் காலியாக இருந்த கம்யூட்டரை தேர்வு செய்து, ஹெட்போனை தலையில் மாட்டியபடி காலில்(call) நுழைந்தான் "குட்மார்னிங் சார்.... ஐ ம் ஷங்கர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் எக்ஸியூட்டிவ்....மே ஐ நோ இன் வாட் வே ஐ கேன் ஹெல்ப் யூ ?.........."

ஈவண்ட் மேனேஜ்மெண்ட் என்பது நிகழ்ச்சி மேலாண்மை. அதாவது உங்கள் வீட்டில் ஒரு பெரிய பர்த்டே பார்ட்டி வைக்கறீர்கள் என்றால், நீங்கள் சங்கர் மாதிரி நிகழ்ச்சி மேலாளர்களை அணுகி பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்து வீட்டு (அவர்களின் தலை(மை)யில் கட்டிவிட்டு) , சன் டிவியில் டாப் டென் மூவிஸ் பார்க்கலாம், இல்லாவிடில் உலகத் தொலைக்காட்சிகளில் ஆயிரத்து ஓராவது முறையாக ஸ்டார் மூவிஸ் போடும் மம்மி ரிட்டர்ன்ஸை பார்க்கலாம். சங்கர் உங்கள் பார்ட்டிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் (காய்கறி வாங்குவது, சமையற்காரர் வைப்பது, போலிஸ் பர்மிஷன் வாங்குவது, மைக்செட் வைப்பது, இண்ட்டீரியர் டிசைனிங் செய்வது, எமர்ஜென்சி மெடிக்கல் உதவி ஏற்பாடு செய்து, லைட்டிங், இன்விடேசன் அடிப்பது, etc...) செய்து தருவார். இவ்வுளவு வேலைகளையும் இழுத்துப்போட்டு கொண்டு செய்யும் திறமையுடைய ஜெண்டில்மேன் சங்கர்,.... அவரது சொந்த வீட்டு வேலையில் சிறு துரும்பைக்கூட நகர்த்தமாட்டாராம்.....

...இன்னும் தொடரும்......

ரேடியோ அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


radio_jockey
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் சமுதாய வானொலி நிலையம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பெயருடன் வயது, கல்வித்தகுதி, அனுபவம், தொலைபேசி/கைபேசி எண் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், நாமக்கல் – 637 002 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை namakkalkvkcrs@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.
விண்ணப்பதாரர்கள் குரல் வளம், உச்சரிப்புத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு செய்தி சேகரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக பணியாற்ற அனுமதிக்கப்படுவர். அவர்கள் சேகரிக்கும் செய்திகளுக்கு மற்றும் தொகுப்பாளராக பணியாற்றும் காலத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு அணுகவேண்டிய தொலைபேசி எண் : 04286 – 266144.

Wednesday, May 1, 2013

உங்களின் சொந்த குரலில் வானொலி நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு...

உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும், ஆகவே ஆரம்ப காலத்தில் பேசாமல் வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி ஒலிபரப்ப செய்யலாம்.

உங்களின் நிகழ்ச்சியை பெற்றுக்கொள்ள யாரும் வரிசையில் நின்றுகொண்டிருக்கப்போவதில்லை, நீங்களாகவே அதற்க்கு முயற்சி செய்யவேண்டும்..... எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

பல சின்னத்திரை மற்றும் வானொலி நிலையங்களின் நிகழ்சிகளில், விளம்பரதாரர் நிகழ்ச்சி (குறும்படம் அல்லது கதைத்தொடர், மற்றும் பல்வேறு பல்சுவை நிகழ்சிகள்) இடம்பெறுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சியில்தான் உங்களின் நிகழ்ச்சியும் இடம்பெறப்போகிறது. அதற்க்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.

முதலில் விளம்பரமும் அது சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள்:-

#ஒரு வானொலி விளம்பரத்தைத் தயாரிக்கும் போது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன. நீங்கள் உரையைத் தயாரித்து வழங்கி, அறிவிப்பாளர் அதைப் படிக்கலாம். அல்லது நீங்கள் ஒலி நாடாவை வழங்கலாம். நீங்கள் பின்னதைத் தேர்வு செய்தால், ஒரு தொழில் ரீதியான அறிவிப்பாளரைப் பயன்படுத்துங்கள், மற்றும் விளம்பரத்தை இன்னும் சிறப்பாக்க, பின்னணி இசை மற்றும் துல்லியமான ஒலி அமைப்பான்களை (ஒலி எஃபெக்ட்களை தரும் சாதனங்கள் வழி )பயன்படுத்துங்கள்.

#வானொலியில், உங்கள் செய்தி எளிமையாகவும் ஒருமுகப்படுத்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். ஒரு கருப்பொருளைத் தேர்வு செய்யுங்கள், அதையே பின்பற்றுங்கள். ஒன்றை சத்தமாகக் கூறுவதற்கு, அதை வாசிப்பதற்கான நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு சராசரி 30 வினாடி வானொலி விளம்பரத்தில், சராசரியாக 70 சொற்கள் மட்டுமே இருக்க முடியும். 30 வினாடிகளில் குறைந்தது மூன்று முறை நீங்கள் தேர்ந்தெடுத்த விளம்பர நிறுவனத்தின் பொருளை அல்லது பெயரைக் கூறுங்கள்.

#நீங்கள் ஒரு உரையைப் பயன்படுத்துவதானால், ஒரு பிரபலமான நபரின் நிகழ்ச்சியில் உங்கள் விளம்பரங்கள் ஒலிபரப்பப்படவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட ஒரு நபர் உங்கள் விளம்பரத்தை வாசிக்கும் போது, அது ஒரு சான்றிதழ் போல உணரப்படும். மேலும், அந்த நபர் உங்கள் தயாரிப்பு அல்லது சேவையை பற்றி நன்கு அறிந்தவராக இருத்தல் நல்லது, - தேவைப்பட்டால் அவர்களுக்கு விளம்பரத்தின் பொருளை அல்லது விவரங்களின் ஒரு மாதிரியை அனுப்புங்கள்.

#ஒரு சிறந்த வானொலி விளம்பரமானது, மற்ற வகை விளம்பரங்களின் அமைப்பிலிருந்து எந்த வகையிலும் அதிகம் வேறுபட்டிருக்காது. இவ்வகையில், முதலில் ஒரு தலைப்புடன் தொடங்குங்கள், நீங்கள் நேயர்களிடம் அடுத்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை உணர்த்தும் ஒரு தொடக்க வரியைக் கூற வேண்டும். பின்னர் அதன் தொடர்புடயவைகளை அவர்களிடம் கூறுங்கள். பின்னர், அவர்களிடம் முன்பு நீங்கள் என்ன கூறினீர்களோ அதையே மீண்டும் கூறி நிறைவு செய்யுங்கள். அல்லது உங்கள் விளம்பரங்களை, கூறி அதற்க்கு தக்க ஒரு நடவடிக்கை எடுக்கும்படி கூறி நிறைவு செய்யுங்கள் – மேலும் எங்கள் தயாரிப்பை வாங்குங்கள், எங்கள் இதழை வாங்குங்கள், அல்லது இப்போதே அழையுங்கள், தொடர்பு கொள்ளுங்கள் போன்றவற்றைக் கூறி நிறைவு செய்யுங்கள்.

# ஒவ்வொரு வானொலி நிலையத்திற்கும் வேறுபட்ட வகையான விளம்பரங்கள் தேவை. பொதுவாக இதற்க்கு இரண்டு வித பார்வை இலக்கு தேவைப்படுகிறது ஒன்று "பின்புல" நிலையங்கள், என்பவை பின்புலத்தில் இயங்குபவை மற்றும் அவை பொதுவாக அதிகம் விரும்பிக் கேட்கப்படும் பதிவு செய்யப்பட்ட இசை மற்றும் தானியங்கி இசை வானொலி நிலையங்கள்." மற்றொன்று-நேரடி ஒலிபரப்பு சேவை நிலையங்கள். இவை உயிர்ப்புள்ள நேயர்களைக் கொண்டவை. இவற்றில், பேசும் வானொலி, அனைத்து செய்தி வானொலி, அழைப்பு நிகழ்ச்சிகள் போன்றவை. உங்கள் விளம்பரங்கள் நேயர்களின் கவனத்தைக் கவருமாரு உணர்திறன் கொண்டவைகளாக மாற்றவேண்டும். இதற்க்கு பின்வரும் சிறப்பு கட்டுப்பாடுகளை நினைவில் வைத்திருக்கவேண்டும் –ஒரு இசை நிலையத்தில், "வெறும் குரள்" விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், ஒரு மரபிசை நிலையத்தில், மேற்கத்திய அல்லது நாட்டுப்புற விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள், மற்றும், ஒரு பேச்சு வானொலியில் இசை விளம்பரத்தை ஒலிபரப்பாதீர்கள்.

#வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது, மிக முக்கியம், ஏனெனில் நேயருக்கு உங்கள் தயாரிப்பு அல்லது சேவையின் பெயர் அல்லது உங்களின் நிகழ்ச்சி பெயர் நன்றாகப் பழகி, நினைவில் நிற்க பல முறை கூறப்பட வேண்டும் அல்லது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த "மந்திரச்சொல்லாக" அது இருக்கவேண்டும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட உடல் தூய்மைப்படுத்தும் "சோப்பு" ஒன்று "புதிது" என்கிற ஒரு "மந்திர வார்த்தையை-KEY WORDS" மட்டுமே வைத்து விளம்பரப்படுத்திவருகிரார்கள் என்பதை நன்கு கவனித்துப்பார்த்தால் "மந்திரச்சொர்க்களின்-KEY WORDS" வெற்றி எந்த அளவிற்கு உண்மை என்பது உங்களுக்கும் புரியவரும்.

அடுத்த பகுதியில் மீண்டும் சிந்திப்போம் .....வணக்கம்.

வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.

#வானொலியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க முதலில் வானொலியும் அதன் ஒலிபரப்பு பற்றிய விவரங்கள் சிறிது தெரிந்து வைத்திருக்கவேண்டும்.  பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒலிபரப்பு எல்லை என்பது 40 முதல் 50 கிலோ மீட்டர்களாகும். குறைந்த தூரம், தெளிவான, துல்லியமான ஒலிபரப்பு என்பதுதான் பண்பலையின் இலக்கணமாகும். இதில், விதிவிலக்காக, தமிழகத்தின் கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோ மீட்டர் தூரம் வரை சென்றடைகிறது. இதனால், தென் தமிழகத்தின் 22 மாவட்டங்களுக்கு இதன் ஒலிபரப்பு சென்றடைகிறது. ஆகவே பண்பலை ஒலிபரப்பிற்கு, ஒலிபரப்பு கோபுரம் (ட்ரான்ஸ் மீட்டர் டவர்ஸ்) அவசியமாகிறது. இதே நிகழ்ச்சியை வானொலி தவிர அதன் இணைய வலைத்தொடர்பு (Internet) அமைப்பிலும் கேட்கலாம்.

ஆஸ்திரேலிய பண்பலையில் "வெட்டுப்புலி" என்கிற சிறுகதை நூல்கள்  குறித்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. அதை எதேச்சையாக இன்று அறிந்தேன். யாரோ, எங்கோ தூரதேசத்தில் தமிழ் நிகழ்ச்சியில் கலந்துரையாடியது பரவசமாக இருந்தது.




அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்தோர்: 
திரு.பார்த்தீபன், சத்யா, முகுந்த், நிமல், ஆகியோரக்ல் 
நூலின் பெயர் : வெட்டுப்புலி 
ஆசிரியர்: தமிழ்மகன் 
வெளியீடு: உயிர்மை பதிப்பகம் 
இணையத்தில் நூலினை வாங்க இங்கே சொடுக்கவும் http://uyirmmai.com/Publications/bookDetails.aspx?bid=262


சிறு குறிப்பு:- வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், தமிழகத்தின் செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் திராவிட இயக்கங்களையும் துணைக்கு இழுத்துக் கொள்வது இயல்பான விறுவிறுப்பு. இந்த மூன்றுக்குமே இன்றைய தேதியில் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு வயதாகிறது. இந்த எதேச்சையான ஒற்றுமையை நாவலின் மையச் சரடாக்கி வெற்றி கண்டிருக்கிறார் நூலாசிரியர். சரித்திரமும் புனைவும் கூடித் தரித்தக் குழந்தை இந்த நாவலின் விலை இந்திய ருபாய் மதிப்பில் .Rs.220, சிங்கை வெள்ளியில் $5.00

Tuesday, April 30, 2013

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

வானொலி நிகழ்ச்சி தயாரிப்பு:-

முதலில் திட்டமிடுங்கள், நீங்கள் தயாரிக்கப்போகும் வானொலி நிகழ்ச்சி தனியாக செய்யும் நிகழ்ச்சியா அல்லது கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்ச்சியா????

தனியாக செய்யும் நிகழ்சிகள்:- கதைநேரம், கதையும் திரைப்படப் பாடலும், அன்னையர் தினம், "மே" தினம் போன்ற பலவகைப்பட்ட "தினங்கள்" கொண்டாடுவதற்கான நிகழ்ச்சி தொகுப்புகள், சொந்த மற்றும் பிறரின் அனுபவங்களின் தொகுப்புகள், பலவித சங்கீத ந...ிகழ்சிகள், "நான் ரசித்த, இன்று ஒரு தகவல், உங்கள் விருப்பம், உணவே மருந்து, சிரிப்பும் சிந்தனையும், நாட்டு நடப்பு, உலக நடப்பு, தெரிந்துகொள்ளுங்கள்........" என்கிற தலைப்பில் பல விவரங்களை பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சி, மற்றும் ஆன்மிகம் சார்ந்த நிகழ்சிகள், பண்டிகை சார்ந்த நிகழ்சிகள் (ஏன் பண்டிகை கொண்ண்டாட வேண்டும், காரணம், பயன்,போன்ற பல்வேறு விவரங்களுடன்), இப்படி இன்னும் பல தலைப்புகளில் செய்யலாம்.

கூட்டாக சேர்ந்து செய்யும் நிகழ்சிகள்:- சமுதாய விழிப்புணர்வுக்கு பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப்பார்க்கும் தினம் ஒரு பார்வை, பல ஆன்றோர் பெரியோர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்சிகள், சாதனைகளை அறியத்தரும் நேர்காணல்கள் (நேருக்கு நேர் நிகழ்ச்சி), முக்கியச்செய்திகளைப் பற்றி பல்துறையை சார்ந்த வல்லுனர்களுடன் ஓர் அலசல், இதுபோன்ற இன்னும் பலவகையான நிகழ்சிகள்.

சரி இப்போது தனியாக செய்யும் நிகழ்ச்சி பற்றி பார்ப்போம்:- இதை இரண்டு பிரிவாக பிரிக்கலாம் முதலில் நீங்களே உங்களின் குரலில் நிகழ்ச்சியை வழங்குவது அல்லது வானொலி நிலையத்தின் இயக்குனரிடம் உங்களின் நிகழ்ச்சியை வழங்கி நிலையத்தார்களே நிகழ்ச்சியை வழங்குமாறு பணித்தல்.

வானொலியில் உங்களின் சொந்த குரலில் நிகழ்ச்சியை வழங்கவேண்டும் என்றால் அதற்க்கு முதலில் உங்களுக்கு வானொலி மொழிநடை, பேச்சு திறன், குரல் மற்றும் சொல் உச்சரிப்பு திறன் போன்றவை அவசியம் தெரிந்திருக்கவேண்டும்...

இப்போது நீங்களே தனிமையில் செய்யும் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்கிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அதற்க்கு என்ன என்ன தேவை, முக்கியமாக கவனிக்கவேண்டியவைகள் எவை எவை? தொடர்ந்து இணைந்திருங்கள் அடுத்த பகுதியில் தெரிந்துகொள்வோமா ????

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்...

நிகழ்ச்சி தயாரிப்பாளரின் உரையை வாசிப்பது என்பது வானொலியைப் பொருத்தவரை கூறியது கூறல் என்பது மிக மிக முக்கியம்.... முன்பெல்லாம் வானொலியின் தமிழ் நேரடி வர்ணனையில் கிரிக்கெட் விளையாட்டு , திருச்செந்தூர் சூரசம்ஹாரம், மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் காட்சி மற்றும் பல முக்கிய கோவில் கும்பவிஷேகங்கள் மற்றும் திருவிழாக்கள் நேரடி வர்ணனை செய்யப்பட்டது. ஒருமுறை பிரிட்டிஷ் மகாராணியார் இலங்கை விஜயத்தின் போதான ...இலங்கையின் தமிழ் வானொலி வர்ணனையிலும் சுவாரசியமான சங்கதிகள் நடந்தது. "ஆபரணங்கள் ஏதும் அணியாமல் எளிமையான வெள்ளையுடுப்பில் வருகிறார்" என்று சொல்ல நினைத்த வர்ணனையாளர், வாய் தடுமாறி ஆடை ஆபரணங்கள் இல்லாமல் மகாராணியார் அழகாக வருகின்றார் என்று வர்ணித்துவிட்டார். எப்படி இருக்கும்? பத்திரிகைகள் சும்மா விடுமா? வானொலியின் நேர்முக ஒலிபரப்பில், நேரடி வர்ணனை என்பது மிகவும் கடினமானதும் நன்கு அனுபவம் பெற்றிருந்தாலும், சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் வர்ணனைகள் தொடர்பான கஷ்டங்களும், தொழில்நுட்பப இடைஞ்சல்களும் ஏற்ப்படும்.

ஆனால் ஒரு பிரபல தமிழ் பத்திரிகை 1977 -ல் வேண்டுமென்றே இப்படி ஒரு தலைப்புச்செய்தியை தந்தது "திருமதி இந்திராகாந்தி அவர்கள் 'ஜட்டியுடன்" டெல்லியை பவனி வந்தார்" அதாவது 1977-ல் திரு ஜட்டி என்கிற முழுப்பெயர் "பாசப்பா தானப்பா ஜட்டி" இந்திய ஜனாதிபதியாக இருந்தார் (Basappa Danappa Jatti Acting President of India In 11 February 1977 – 25 July 1977). விளைவு பத்திரிகை விற்பனை.

இப்படி நிகழ்ச்சி தயாரிப்பில் பல எதிர்பாராத அனுபவங்களும் கிடைக்கும்.

ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

1.ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் :-

#நீங்கள் புதியவர் என்றால் முதலில் உங்கள் நண்பர்கள் உதவியுடன் அவர்களையும் சேர்த்துக்கொண்டு உங்கள் இருப்பிடத்திலேயே சிறு கண்காட்சி அமைக்க திட்டமிடுங்கள்.

# மாணவர்கள் அவர்களின் வகுப்பில் ஆசிரியரின் உதவியுடன் கண்காட்சி நடத்த திட்டமிடுங்கள். (நான் பகுதிநேர ஆசிரியராக இருந்த ஒரு பள்ளியில் மேல்நிலை வணிகவியல் மாணவர்கள் (வணிக...வியலில் கண்காட்சியா என கேட்குமளவிற்கு) அலுவலக மேலாண்மை பற்றிய கண்காட்சி நடத்தினார்கள், அலுவலகத்தில் எப்படிப்பட்ட வகை வகையான கோப்புகள் பயன்படுத்துகிறார்கள், ஒரு சிறிய அலுவலகத்தின் தேவைகள், அலுவலகம் எப்படி இருக்கவேண்டும் போன்ற பல விரங்களை கண்காட்சியாக மிகவும் அருமையாக செய்தனர்)

#அலுவலக ஊழியர்கள் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் அவர்களின் தயாரிப்பு அல்லது அலுவலக மேலாண்மை அல்லது விற்பனை, கொள்முதல், இப்படி அவர்களின் அலுவலக செயல்கள் பற்றிய ஒரு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு செய்யலாம்.

# தீபாவளி, பொங்கல் போன்ற முக்கிய பண்டிகைகள் வரும் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பே சிறு வணிகர்களைக்கொண்டு உங்கள் பகுதியில் உரிய அனுமதிபெற்று ஒரு சிறப்பு கண்காட்சி ஏற்ப்பாடு செய்யலாம்.

#முக்கிய நிகழ்சிகளின்போது அந்த நிகழ்ச்சி நடக்கும் அரங்கின் அருகே, நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட விர்ப்பனைக் கண்காட்சி நடத்தலாம். அதாவது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள், கோவில் திருவிழாக்கள் என.....

#வேலைவாய்பு கண்காட்சி "நிறுவனங்களை அணுகி அவர்களின் தேவைக்கேற்ப ஓர் இடத்தில் ஒருங்கிணைத்து அந்த இடத்திற்கு வேலை தேடுபவர்களை வரவைத்து செய்யும் வேலைவாய்ப்பு கண்காட்சி.

இன்னும் இதுபோலே நூற்றுக்கணக்கான கண்காட்சி அமைப்பதற்கு தேவையான குறிப்பு உள்ளது. இவை அனைத்திற்கும் முதலில் நிகழ்ச்சி தயாரிப்பு திட்டமிடவேண்டும். அதற்க்கு முதலில் முக்கிய தேவைகளை ஐந்து பகுதிகளாக (தலைப்புகளாக) பிரித்து வகைப்படுத்திக்கொண்டு திட்டமிடுதலை தொடங்கவேண்டும். அது எப்படி என்பதை மேலும் தொடர்ந்து பார்ப்போம் ........

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்:-

நாம் அன்றாடம் பொழுதுபோக்காக செய்யும் பல செயல்களை ஒன்று திரட்டி ஒரு நிகழ்ச்சியாக செய்தால், அது ஒரு பயனுள்ள பொழுதுபோக்காக அமையும். அதை மிகவும் எளிய முறையில் எப்படி செய்யலாம் என பலரும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் இந்த முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் உங்களின் எண்ணங்களை தாராளமாக இங்கு குறிப்பிடலாம்.

எந்தெந்த வகையில் திட்டமிடுத...லும் நிகழ்ச்சி தயாரிப்பும் செய்யலாம்:-

நீங்கள் அன்றாடம் கேள்விப்படும் அல்லது உங்கள் மனதில் தோன்றிய எண்ணங்களை சேகரித்து அதை எப்படியெல்லாம் ஒரு நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்பதை கீழ் கண்ட தலைப்பின் கீழ் வகைப்படுத்தி எளிமையாக செய்வதற்க்கு சில குறிப்புகள் உங்களுக்கு இந்த முகநூல் பக்கத்தில் கிடைக்கும்.

#தொலைகாட்சி மற்றும் வானொலியில் விளம்பரதாரர் நிகழ்ச்சி தாயாரிப்பது எப்படி? அதற்க்கு தேவையான நிதியை எப்படி பெறுவது?

# இலவச விளம்பர நாலிதழ், வார இதழ் போன்ற பத்திரிகை தயாரிப்பது எப்படி அதற்க்கு தேவையான செலவு நிதியை எப்படி பெறுவது?

#ஒரு பொதுக்கூட்டத்திற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பதும்.

#ஒரு கண்காட்சியை நடத்துவதற்கு தேவையான திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும்.

#ஒரு அலுவலகம், கருத்தரங்கு, முக்கிய நிகழ்சிகள், ஆண்டுவிழா, பிறந்தநாள், மணநாள், பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள், சங்கங்கள், மன்றங்கள் சிறப்பு பொதுக் கூட்டங்கள், சுற்றுலா, கோவில் விழா, என பல்வேறு நிகழ்சிகளுக்கு திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பு மிகவும் அவசியம்.
...இன்னும் தொடரும்......

Saturday, April 27, 2013

நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்

"பல்துறைகளைச் சேர்ந்த - அனைவரது, நிகழ்ச்சி தயாரிப்பு சார்ந்த அனுபவத்தை இங்கே பதிவு செய்யலாம்.-பதியப்படும் அனைத்து விவரங்களும், அனைவருக்கும் பொதுவானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும்"
Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.